விஸ்வரூபம் படத்துக்கு மீண்டும் தடை!

விஸ்வரூபம் படத்தை திரையிட, சென்னை உயர் நீதிமன்றம் பெஞ்ச் மீண்டும் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அடுத்து, இந்த தடையை விதித்துள்ள உயர் நீதிமன்றம், இந்தத் தடைக்கான விரிவான காரணங்களை வருகிற திங்கட்கிழமைக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அந்த காரணங்களின் அடிப்படையில், பிப்ரவரி 6-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அரசு பிறப்பித்த தடையை நீதிபதி வெங்கடராமன் நேற்றிரவு நிறுத்தி வைத்ததார். இதனால் இன்று படம் வெளியாகும் என்கிற சூழ்நிலை உருவாகியது.
அதற்கு இடம் கொடுக்காத தமிழக அரசு, இன்று காலை மேல் முறையீடு செய்தது. அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், நீதிமன்றம் தொடங்கியதும்  முதல் வழக்காக மேல்முறையீட்டை ப‌திவு செய்தார். மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிப்பி தர்மாராவ், அருணா ஜெகதீஷன் அடங்கிய பெஞ்ச், பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கை விசாரித்தது.
இதையடுத்தே மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு தடையை நீக்கி தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.http://viruvirupu.com

Back to Home Back to Top tntjmvl