நான் கமலை பழிவாங்குவதாக கூறுவதில் உண்மை இல்லை.-முதல்வர் ஜெயலலிதா

சென்னை: கமல் ஹாசன் ஒன்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர் என் எதிரியும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதற்கு கமல் ஹாசன் ஒரு விழாவில் வேஷ்டி அணிந்தவர் தான் பிரதமராக வருவார் என்று கூறியது தான் காரணம் என்று பேசப்பட்டது. இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் இருந்து விஸ்வரூபம் குறித்து பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், கமல் ஒரு விழாவில் வேஷ்டி அணிந்தவர் தான் பிரமதராக வர வேண்டும் என்று தெரிவித்ததால் நான் அவரது விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தேன் என்று கூறுகின்றனர். நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு போதிய அரசியல் அனுபவம் உள்ளது. கமல் ஹாசன் என் எதிரி இல்லை. அவர் ஒன்றும் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்று எனக்கு தெரியும். அவர் விழாவில் அப்படி பேசியதற்காக நான் அவரை பழிவாங்குவதாக கூறுவதில் உண்மை இல்லை. நான் எதற்காக அவரை பழிவாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.http://tamil.oneindia.in

Back to Home Back to Top tntjmvl