சட்டம் ஒழுங்கு காரணங்களால், தியேட்டர்களில் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் மறுத்துவிட்டதால் படம் வெளியாகவில்லை.
இந்திய சினிமாவில் இதுவரை எந்தப் படத்துக்கும் ஏற்படாத நிலை விஸ்வரூபத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படம் இப்போது மதப் பிரச்சினைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் உணர்வுப்பூர்மானது, சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது என்பதால், தமிழக அரசு படத்தைத் தடை செய்துவிட்டது. இது தொடர்பான போராட்டங்களுக்கும் 144 தடை விதித்துள்ளது.
இந்த தடையை எதிர்த்து கமல் உயர்நீதிமன்றத்துக்குப் போனார். ஆனால் அங்கும் நீதிபதி தடையை விலக்க மறுத்துவிட்டார்.
எனவே தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் வெளியாகவில்லை. பல ஆயிரம் ரசிகர்கள் இதற்காக முன்பதிவு செய்திருந்தனர். அதற்கும் சரியான பதிலில்லை.
இந்த நிலையில் பக்கத்து மாநிலங்களிலும் இந்தப் படத்தை திரையிட தயக்கம் காட்டியுள்ளனர்.
கர்நாடகத்தில் இந்தப் படம் வெளியாகவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதால் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படத்தை திரையிட எந்த தியேட்டர் மற்றும் விநியோகஸ்தரும் முன்வரவில்லை. கர்நாடகத்தில் கணிசமாக இஸ்லாமிய சமூகத்தினர் வசிப்பதால், ரிஸ்க் எடுக்க யாரும் விரும்பவில்லை என்று தெரிகிறது.http://tamil.oneindia.in