இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் 257 பேரை கொன்ற ஒரு தீவிரவாதி - உச்சநீதிமன்றம்

1993-ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு நடத்தினார்கள். அதில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயமடைந்தனர். ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 28 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் சேதமடைந்தன.

இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக தாவூத் இப்ராஹிம், டைகர் மெமோன், அவனது தம்பி அயூப் மெமோன் ஆகியோர் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேர்களுக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா கோர்ட் உத்தரவிட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் சௌகான் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.

1993-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான யாகுப் மேனனின் தூக்கு தண்டனையை உறுதி செய்யப்பட்டது.

இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்திற்கு தடா நீதிமன்றம் வழங்கிய 6 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 வருடங்களாக குறைத்தது. இவர் 18 மாதங்களை சிறையில் கழித்துவிட்டார். இதனால் மீதி காலத்தை மட்டும் இவர் சிறையில் கழிப்பார். இவர் 4 வார காலத்தில் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Back to Home Back to Top tntjmvl