பாட்டாளி மக்கள் கட்சியின் சில தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது அந்த இயக்கத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, முற்றுகைப் போராட்டம் போன்ற வழிகளில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தால் அதை அவர்களின் ஜனநாயக உரிமை என்று எடுத்துக் கொள்ளலாம். அல்லது அரசியல் கட்சிகள் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம். நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக போராடலாம்.
இந்த வழிமுறைகளை விட்டு விட்டு பேருந்துகளைத் தாக்குவதும், பயணிகள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதும் இவர்களின் வழிமுறையாக இருக்கிறது. இவர்களின் மிருகத்தனமான செயலால் வெளிமாநிலத்தில் இருந்து வாகனம் ஓட்டி வந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் படுகாயங்களும் அடைந்துள்ளனர்.
பல நாட்களாக இரவில் பேருந்து இயங்கவில்லை என்ற அளவுக்கு இவர்களின் அராஜகம் எல்லை மீறிக்கொண்டு இருக்கிறது. இனியும் இது போல் நடக்காமல இருக்க தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இவர்களை ஒடுக்கி நாட்டு மக்களையும் பொதுச்சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து சமுதாய மக்களையும் பாமகவுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் நிலைக்குத் தள்ள வேண்டாம் எனவும் பாமகவினரை எச்சரிக்கிறோம்.
இப்படிக்கு
பொதுச் செயலாளர்
(ஆர் . ரஹ்மத்துல்லாஹ்)