இஸ்லாமியர்களின் வலியை உணர்வது அவசியமானது.-முகநூலில் மாற்றுமத சஹோதரர்.

நான்  முந்நீர் விழவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு இரவு 11 மணியளவில் வில்லிவாக்கம் பக்கம் வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். என்னையொட்டியபடியே வேறு சிலரும் வண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு 50 வயது மதிக்கத்தக்க குல்லா அணிந்த இஸ்லாமியர் ஒருவரும் இருந்தார்.

வழியில் நின்று கொண்டிருந்த போலீசார் எங்கள் எல்லோரையும் விட்டுவிட்டு அந்த இஸ்லாமிய பெரியவரின் வண்டியை மட்டும் மறித்து ஓரங்கட்டினார்கள். அவரும் அமைதியாக வண்டியை நிறுத்திவிட்டு எல்லா ஆவணங்களையும் எடுக்க ஆரம்பித்தார்.

ஒரு கணம் இதைப் பார்க்க எனக்கு மிகச் சங்கடமாக இருந்தது. இந்தியாவில் சாதிரீதியாக ஒடுக்கப்படும் தலித் மக்கள் கூட அவர்கள் யார் என்று தெரிந்தால் தான் அவமானப்படுத்தலுக்குள்ளாகிறார்கள்.

ஆனால் இஸ்லாமியர்கள் தங்களின் மத அடையாளத்தால் தான் இந்தியாவிலும் உலகம் முழுக்கவும் எவ்வளவு அவமானப்படுத்தலுக்குள்ளாகிறார்கள்.

பேச்சுக்கு வைத்துக்கொண்டால் ஒருவேளை நான் கூடக் குண்டு வைக்கப்போகும் தீவிரவாதியாக இருந்திருக்கலாம்.. ஆனால் என்னை விட்டுவிட்டார்கள்.. (குண்டு வைக்க வர்றவன் மத அடையாளத்தோடு தான் வருவான்னு இன்னும் நம்புறாய்ங்க..)

எங்காவது ஒரு குண்டு வெடித்தால் போதும்.. உடனடியாக ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயரை போலீசார் சொல்வதும், அதை நிரூபிப்பதற்காக வேண்டி சம்பந்தமில்லாத நான்குபேரை பிடித்து ஒரே நாள் இரவில் ஊடகங்கள் மூலம் அவர்களைத் தீவிரவாதிகளாக்குவது என இப்படித்தான் நாடு முழுக்க இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற பொதுப்புத்தியை வளர்த்து விட்டிருக்கிறார்கள்..

கமல் போன்றவர்கள் முதலில் சம்பந்தமில்லாமல் அவமானப் படுத்தலுக்குள்ளாகும் இந்த இஸ்லாமியர்களின் வலியை உணர்வது அவசியமானது.-முகநூலில் மாற்றுமத சஹோதரர்.

Back to Home Back to Top tntjmvl