பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டை சேர்ந்தவர் ராஜா முகமது. எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி தவ்லத் பர்வீன் (25). இவர்களுக்கு 2 மகள், 2 மகன் உள்ளனர். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக தவ்லத் கடந்த ஜனவரி 31ம் தேதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிப்ரவரி 4ம் தேதி தவ்லத்பர்வீனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தவ்லத்துக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஒன்றுமில்லை என கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி தவ்லத்திற்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து திருச்சி உறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது வயிற்றில் குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சையின் போது பஞ்சை வைத்து தைத்து இருப்பதாகவும், இதனால் குடல் அழுகி விட்டதாகவும் கூறினர். இதையடுத்து 21ம் தேதி மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பஞ்சை வெளியே எடுத்தனர். ஆனால் நேற்று தவ்லத் இறந்தார். தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.
அவர்கள் கூறுகையில், பெரம்பலூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது, தவ்லத் வயிற்றில் பஞ்சு வைத்து தையல் போட்டுவிட்டனர். அஜாக்ரதையாக இருந்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவ்லத் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்படும் என்றார்.