குரான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குரான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.....


அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. அவர்கள் சான்றைக் கண்டால் "இது தொடர்ந்து நடக்கும் சூனியம்" எனக் கூறி புறக்கணிக்கின்றனர். பொய்யென கருதி தமது மனோஇச்சைகளை பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு காரியமும் பதிவாகின்றது. அச்சுறுத்தல் அடங்கிய செய்திகளும், உயர்ந்த தரத்திலமைந்த ஞானமும் அவர்களுக்கு வாந்துவிட்டன. எச்சரிக்கைகள் (அவார்களுக்கு) புயனளிக்கவில்லை. ஸூரத்துல் கமர் : 1-5 இவ்வசனத்தில் (54:2) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறியபோது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சந்திரனை இரண்டாகப் பிளந்து காட்டினார்கள். அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களிடம் கூறினார்கள். புகாரி 3636, 4864, 4865 இந்நிகழ்ச்சியைத்தான் இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது. பூமியின் துணைக்கோளாக அமைந்துள்ள சந்திரனைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள், சந்திரன் இரண்டாகப் பிளப்பதும், பிறகு ஒன்று சேர்வதும் சாத்தியமற்றது என்று கருதலாம். ஆனால் திருக்குர்ஆனில் இறைவன் தனது தனிப் பெரும் ஆற்றலால் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறும் போது, அதற்கான சான்றுகளையும் உலகில் விட்டு வைக்கிறான். நூஹ் நபியின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தைச் சொல்லும் போது அவர் பயணித்த கப்பலைச் சான்றாக விட்டு வைத்திருக்கிறோம் என்று இறைவன் குறிப்பிடுகிறான். அந்தக் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலை இரண்டாகப் பிளந்து, நல்லவர்களைக் காப்பாற்றி, ஃபிர்அவ்ன் என்ற கொடியவனைக் கடலுக்குள் மூழ்கடித்த அற்புதத்தைக் கூறும் போது, "அவனது உடலை அத்தாட்சியாக விட்டு வைத்துள்ளோம்' என்று குறிப்பிடுகிறான். இறைவன் விட்டு வைத்த ஃபிர்அவ்னின் உடலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளது. அது போல் சந்திரன் பிளந்ததைக் கூறி விட்டு, இது ஓர் அற்புதம் என்பதையும் உறுதி செய்து விட்டு, அனைத்தும் பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான். சந்திரன் பிளந்த நிகழ்வு தந்திரமோ அல்லது கண்கட்டு வித்தையோ அல்ல. அது பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான். நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கிய போது அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. அவற்றுள் ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஓர் ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது. இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு அரபியன் பிளவு என்று பெயரிட்டனர். காரணம், சந்திரன் பிளந்தது என்ற நம்பிக்கை அரபியரிடம் (முஸ்லிம்களிடம்) இருந்தது தான். முஸ்லிம்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பிளவு அமைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும். இறைவன் கூறுவது போன்று, சந்திரன் பிளந்ததற்கான சான்றும் சந்திரனிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தக் கண்டுபிடிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம். இந்தத் தகவல் அமெரிக்க அரசால் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட்டர் என்ற மாத இதழில் புகைப்பட சான்றுகளுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய போது வெளிவந்தது. சந்திரன் பிளந்தது பற்றியும், அதற்கான சான்று சந்திரனில் பதிவாகியுள்ளது பற்றியும் திருக்குர்ஆன் அறிவித்திருப்பது இது இறைவேதம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
Read More »

தமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்


  திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரானை உங்கள் கணிணியிலேயே வைத்துப் படிக்கலாம். பயன்படுத்தலாம். Zekr என்ற இந்த மென்பொருள் நேர்த்தியான வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தும் படியும் இருக்கிறது.


இந்த மென்பொருளின் மூலம் குரானை எளிதாகப் படிக்கலாம். சூராக்கள் (அத்தியாயங்கள்), ஆயத்துகள் வழியாக குறிப்பிட்ட வசனத்தைத் தேடலாம். சுராக்கள், ஆயத்துகளை முன்னோக்கி பின்னோக்கி செல்லலாம். குறிப்பிட்ட பக்கங்கள் வழியாகவும் தேடலாம். பிடித்த வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம். மேலும் அனைத்து வசனங்களையும் ஆடியோ வடிவில் கேட்க முடியும். குரானை பல மொழிகளில் படிக்கவும் முடியும். மேலும் இந்த மென்பொருளை முற்றிலும் தமிழ் உள்பட சில மொழிகளில் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியில் சென்று தரவிறக்கவும்.
http://zekr.org/quran/
இந்த மென்பொருளைப் பயன்படுத்த Java Runtime Environment தேவைப்படும். இல்லாதவர்கள் கீழே சென்று தரவிறக்குங்கள்.
http://www.filehippo.com/download_jre_32/

இந்த மென்பொருளில் இயல்பாக ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட மொழிகளில் குரானைப் படிப்பதாக இருக்கிறது. உங்களுக்கு தமிழ் மற்றும் பல மொழிகள் வேண்டுமானால் கீழே சென்று தரவிறக்க வேண்டும். அதாவது இவையெல்லாம் குரானை Translation செய்து காட்டும்.

தமிழ் மொழிக் கோப்பு - http://tanzil.net/trans/ta.tamil.trans.zip
பிற மொழிகளுக்கு - http://zekr.org/resources.html

பின்னர் இந்த மென்பொருளில் Tools->Add->Translation என்பதில் சென்று தரவிறக்கிய கோப்பைத் தேர்வு செய்தால் நீங்கள் தமிழில் குரானைப் படிக்கலாம். View->Layout இல் சென்று Mixed என்று வைத்துக் கொண்டால் மென்பொருளில் உருது மற்றும் தமிழில் குரானை எளிதாகப் படிக்கலாம்.
Tamil User Interface

இதன் இடைமுகத்தையும் தமிழிலிலேயே காணவும் பயன்படுத்தவும் முடியும். இதற்கு Tools மெனுவில் options செல்லவும். அதில் language என்பதில் தமிழைத் தேர்வு செய்தால் தமிழிலேயே இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருள் இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமின்றி குரானைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாகப் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள்.
Read More »

Back to Home Back to Top tntjmvl