மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு தலைமைகழக சுற்றறிக்கை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளின் கவனத்திற்கு,
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
சமீபத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து நாம் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தினோம். மேலும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம், இதுசம்பந்தமான பிரசுரங்கள் மற்றும் குறுந்தகடுகள் போன்றவைகளையும் நாம் பல்வேறு எண்ணிக்கையில் விநியோகித்தோம்.
அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்தை (நவம்பர் 2012) நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் செய்திகளை பிற மத சகோதரர்களுக்குக் கொண்டு செல்லும் முகமாக பிரச்சாரம் செய்யும் மாதமாக செயல்படுத்த மாநிலத் தலைமை முடிவு செய்திருக்கிறது. அதன்படி இந்த மாதம் முழுவதும் அது சம்பந்தமான பிரச்சாரங்களாக
·தெருமுனைக்கூட்டங்கள்
·பொதுக்கூட்டங்கள்
·பெண்கள் பயான்
·துண்டு பிரசுரங்கள்
·பேணர்கள்
·போஸ்ட்டர்கள்
·காவல்துறை மற்றும் ஊடகத்துறை உளவுத்துற ஆகியவைகளின்
·அதிகாரிகளுக்கு மாமனிதர் மற்றும் யார் இவர் என்ற தலைப்பில் உள்ள பிரசுரங்கள் வழங்குதல்
· பிற மத சகோதரர்களுக்கும் இந்தப் பிரசுரங்கள் வழங்குதல்
ஆகிய பணிகளோடு இம்மாதத்தின் அனைத்து வெள்ளி மேடை உரைகளையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் நற்பெயருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)

இது தொடர்பான கட்டுரைகள் வீடியோக்கள்:
http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/nabiyin_nermai/
http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/antha_mamanithar/
http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/manithakula_valikatti_nabialnayagam_pothakkudi/
http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/varalatru-oliyil_nabikal/
http://onlinepj.com/books/mamanithar/
http://www.tntj.net/35046.html

Back to Home Back to Top tntjmvl