புதிய வீடியோ பிரிவில் அப்லோடு செய்யும் வசதி அறிமுகம்


நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தை நீக்க மறுத்த Youtube க்கு மரண அடி கொடுக்கும் வண்ணம் ஆன்லைன்பிஜே இணையதளத்தில் புதிய வீடியோ பிரிவை நாம் துவக்கியுள்ளோம். அதில் Youtube ல் உள்ள பெரும்பாலான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம். தற்போது அதில் நேயர்களே அப்லோடு செய்யும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
Youtube ல் இருந்து நீக்கிய வீடியோக்களை நேயர்களே ஆன்லைன்பிஜே வீடியோவில் அப்லோடு செய்து கொள்ளலாம். அப்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை பலருக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.
நாம் உருவாக்கியுள்ள வீடியோ பிரிவு பொருளாதார ரீதியாக Youtube க்கு பெரும் மரண அடியாக இருக்கும் என்பது ஏராளாமான நேயர்களின் கருத்து. அல்ஹம்துலில்லாஹ்!
நம் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை எவன் தவறாக சித்தரித்தாலும் அவனுக்கு தக்க பாடம் புகட்ட முஸ்லிம்கள் ஒரு போதும் தயங்கமாட்டார்கள். அது இன்டர்நெட் சர்வாதிகாரி google ஆக இருந்தாலும் சரியே!

Back to Home Back to Top tntjmvl