மகாராஷ்டிராவில் கலவரம்: 2 பேர் படுகொலை - 50 பேர் படுகாயம்

வட மகாராஷ்டிரா மாநிலம் தூலே பகுதியில் உள்ள சாலையோர உணவகத்தில் இன்று இருவருக்குள் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இருவரின் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குள் இந்த மோதல் பரவியது.
மச்சிபஜார், மாதவபுரா பகுதியை சேர்ந்த இருதரப்பினரும், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்த போலீசார், வஜ்ரா வாகனங்களுடன் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து கலவரக்காரர்களை கலைந்துபோக வைத்தனர்.
இச்சம்பத்தில் 2 பேர் உயிரிழந்தனர். போலீசார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கைலாஷ் வாக்ரே (35) என்பவர் துப்பாக்கி குண்டு காயத்துடன் உள்ளூர் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அப்பகுதியில் இன்னும் பதற்றம் நிலவி வருவதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மகாராஷ்டிரா மந்திரி சுரேஷ் ஷெட்டி கூறியுள்ளார்.

Back to Home Back to Top tntjmvl