கடலூர் மாவட்டம் கடலூர் OT க்கு அருகில் உள்ளது வசந்தரான்பாலயம் என்ற சிறு கிராமம், இங்கு
சென்ற 31.12.2012 அன்று கூட்டு குடும்பங்களாக ஒரே பகுதியில் அருகருகே
வசித்து வந்தவர்களின் வீட்டில் சமைக்கும்போது ஏற்பட்ட கடுமையான தீ
விபத்தால் 7 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது,
இதில் ஒரு வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் வெடித்தது, இந்த கோர தீயில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின,
இதில் உள்ள ஒருவர் வீட்டில் சிறிது சிறுதாக சேர்த்து வைத்திரிந்த நகைகளும் தீயில் எரிந்து போனது. இதில் நகைகள், கிரைண்டர்கள், ப்ரிட்ஜ், பீரோக்கள் அதில் உள்ள அனைத்து துணிமணிகள்
உட்பட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதில் ஒரே நாளில் ஒன்றுகூட இல்லாதவர்களாய் இந்த 7 வீட்டினரும் பரிதாபமாக இருந்தனர்,
இதை பார்வையிட்ட அரசு துறையினர் வீட்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து தங்களின் கடமையை முடித்துகொண்டனர்,
அப்பகுதிக்கு உடனடியாக சென்ற TNTJ வினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு
பாதித்த வீடுகளை பார்வையிட்டு உடனடி முதல் உதவியாக அந்த 7 குடும்பத்திற்கும் 05.01.2013 அன்று TNTJ சார்பில் 7 வீடுகள் கட்டி கொடுத்தனர்,
முதலில் முஸ்லிம் அல்லாதவர்களின் இரண்டு வீடுகளை கட்ட ஆரம்பித்த பின்தான் முஸ்லிம்களின் 5 வீடுகள் கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது,
இதைபார்த்த முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகள் TNTJ வின் மனிதநேய பணியை வெகுவாக பாராட்டினர்.
இதுபற்றி கூறிய வீடிழந்த கிறிஸ்துவ சகோதரி கூறுகையில்...
கிறிஸ்துவ அமைப்பினர் எதுவுமே செய்யவில்லை தரேன் என வெறுமனே சொல்கிறார்களே தவிர எதுவுமே செய்யவில்லை,
ஆனால் எந்த வித சம்பந்தமும் இல்லாத TNTJ வினர் நாங்கள் தெருவில் இருக்கும் நிலையில் மனிதாபிமானத்தோடு எந்த வித சுய லாபமும் இல்லாமல் பல ஆயிரங்கள் செலவு செய்து வீடு கட்டி கொடுத்தீர்கள்,
எங்கள் பத்திரம் உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலானது, பிள்ளைகளின் பள்ளிகூட யூனிபார்ம் உட்பட அனைத்தும் நாசமானது என கூறினார்,
கடலூர் மாவட்ட TNTJ நிர்வாகம் சார்பில் உடனடியாக அந்த பெண்மணிக்கு ஸ்டவ் அடுப்பு உட்பட பண்ட பாத்திரங்கள் வாங்கி கொடுக்கப்பட்டது,
கடைசி வரை உங்கள் உதவிகளை மறக்கவே முடியாது என கூறி கண்கலங்கினார் அந்த கிறிஸ்துவ பெண்மணி
அதேபோல் பாதிக்கப்பட்ட மற்ற குடும்பத்தினருக்கும் ஸ்டவ் அடுப்பு உட்பட பாத்திரங்கள் வழங்கப்பட்டன.
எவ்வளவு உதவிகள் இஸ்லாமியர்கள் செய்தாலும் அந்த புகழுக்கு உரியவன் இறைவன் மட்டுமே...Sangairidhvan