தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டத்தில்
தடியடி நடத்தியதற்காக மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி இம்மாதம் 3 ஆம் தேதி சிறைநிரப்பும் போராட்டம்
அறிவித்திருந்ததும், பின்பு காவல்துறை
அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி
அளித்த நிலையில் 3 ஆம் தேதி நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் 10 ஆம்
தேதிக்கு மாற்றப்பட்டது,
அதன்பின் காவல்துறை அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி படி நடவடிக்கை எடுக்கப்பட்டதால் 10 ஆம் தேதி நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது,
இந்நிலையில் சில சகோதரர்கள் நம்மிடம் அப்படி என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கண்ணியமான முறையில் கேட்டவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக இந்த பதிவினை வழங்குகிறோம்...
TNTJ குற்றம் சுமத்திய மூன்று அதிகாரிகளில் AC செந்தில் குமரனே பெரிய அதிகாரியாவார்,
TNTJ சார்பில் 3 ஆம் தேதி நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் அறிவித்தவுடன் காவல்துறை அதிகாரிகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த காரணத்தினால் TNTJ தலைமை போராட்டத்தை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்திருந்தது,
அதற்கிடையில் தமிழக அரசு சார்பில் சுமார் 30 அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்திருந்தது, அந்த 30 அதிகாரிகளில் AC செந்தில் குமரனும் ஒருவர்.
30 அதிகாரிகளை அரசாங்கமே இடமாற்றம் செய்யும் நிலையில் AC செந்தில் குமரனும் ஒருவர் அடங்குவதால் இது நடவடிக்கை அல்ல என்று சில சகோதரர்கள் கருதுகின்றனர், கண்டிப்பாக சகோதரர்களின் எண்ண ஓட்டங்கள் நியாயமானது தான், ஆனால் நடந்து என்ன என்பதை முழுமையாக அறியாததால் அவர்கள் அவ்வாறு நினைத்துள்ளார்கள்,
நடந்தது என்ன ?
30 அதிகாரிகள் மாற்றப்படும் போது அவர்களில் 29 அதிகாரிகள் எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு மாற்றப்படுகிறார்கள் என்ற விவரம் இருக்கும், அவர்களில் AC செந்தில் குமரனுக்கு மட்டும் அவர் செல்லும் இடம் எங்கு என்று அவருக்கே தெரியாத நிலையில் இடத்தை காலியாக விடப்பட்டிருந்தது.
அதாவது AC செந்தில் குமரனை 1 மாதம் Suspend செய்யப்பட்டு அத்துடன் கருப்பு புள்ளியும் குத்தப்பட்டு மேலும் அவரை இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளது, அவர் தற்போது பணியில் இல்லாததால் அவர் எங்கு செல்வார் என்று அவருக்கே தெரியாத நிலை உருவாகியுள்ளது,
ஒரு மாதம் கழித்து அவர் பணிக்கு திரும்பும் நிலையில் தான் அவர் எங்கு செல்வார் என்பது அவருக்கே தெரியவரும், பெரிய அதிகாரியான AC செந்தில் குமரன் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,
அவருக்கும் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் மீது கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு 2 அதிகாரிகளும் தங்களது துறை ரீதியான அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
TNTJ நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய AC செந்தில் குமரன் என்பவர் கான்ஸ்டபிளா ? ஏட்டா ? SI யா ? இன்ஸ்பெக்டரா ?
கீழிருந்து சாதாரண போலீஸ் காரர் அல்ல... மேல் மட்டத்திலிருந்து 3 வது பெரிய அதிகாரியாவார்,
TNTJ என்பது ஆளும் கட்சியும் கிடையாது, எதிர் கட்சியும் கிடையாது, அரசியல் ரீதியான கட்சியும் கிடையாது, பெரும்பான்மை மதத்தின் இயக்கமும் கிடையாது, வன்முறை இயக்கமும் கிடையாது, சிறுபான்மை சமுதாயத்தின் மார்க்க பிரச்சாரம் செய்யும் சாதாரண அமைப்பு.
அந்த அமைப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமும் நடத்த வில்லை, போராட்டம் நடத்த போகிறோம் என்று அறிவிப்பு தான் செய்திருந்தது. அந்த அறிவிப்பிற்கே அதிகார வர்க்கம் மேல் மட்டத்திலுள்ள அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கிறதென்றால் இது சாதாரண விசயமல்ல...
TNTJ 1 லட்சம் பேரை திரட்டுவோம் என்று அறிவிப்பு செய்தவுடன் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் பேனர்களும், சுவர் விளம்பரங்களும் அளித்த காட்சிகளே அதிகார வர்க்கம் நினைத்தது....
இவர்கள் ஒரு லட்சம் பேருக்கு தானே அழைப்பு கொடுத்தார்கள், ஒருவேளை வங்கக்கடலோரம் மையம் கொண்ட ,மனிதபுயல் தீவுத்திடலை நிரப்பியது போல் மனித கடலின் சங்கமம் 15 லட்சமும் மீண்டும் தலைநகரை நோக்கி படையெடுத்தால் இன்னொரு International Issue வை சந்திக்க நேரிடும் என்பதை உளவுத்துறை மூலம் உணர்ந்த அதிகார வர்க்கம் அவசர அவசரமாக பெரிய அதிகாரியான AC மீது உடனடி நடவடிக்கை எடுத்தது. (இறைவனுக்கே புகழனைத்தும்...)
TNTJ யின் தலைமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் 1 மாதம் கால அவகாசம் கொடுத்தாலும், ஒரே நாள் அவகாசம் கொடுத்தாலும் சரி லட்சோப லட்ச மக்கள் திரண்டு வர எந்நேரமும் தயாராக இருக்கிறார்கள் என்பது ஆளும் வர்க்கத்திற்கு தெரிந்த ஒன்றை உங்களுக்கும் தெரிவிக்கிறேன்...
மாநிலம் முழுவதும் TNTJ யின் ஆயிரக்கணக்கான கிளைகளில் திருப்பூர் கிளையும் ஒன்று, திருப்பூரிலிருந்து சென்னைக்கு சுமாராக 400 கிலோமீட்டருக்கும் அதிகமாகவே இருக்கும், திருப்பூரிலிருந்து சென்னைக்கு ஒரு பேரூந்துக்கு 30 ஆயிரம் ரூபாய் ஆகும்,
அவ்வளவு இருந்தும் திருப்பூரிலிருந்து சென்னை போராட்டத்திற்கு 12 பேரூந்துகளில் திருப்பூர் கிளை சகோதர, சகோதரிகள் தயாராக இருந்தனர், ஒரு கிளையிலேயே இப்படியென்றால் மாநிலத்தின் ஆயிரக்கணக்கான கிளைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டாலே கொஞ்சம் தலை சுற்றும்.
தன்னுடைய சொந்தங்களின் மீது விழுந்த ஒவ்வொரு அடிகளுக்கும் எங்களின் உணர்ச்சி மிகுந்த போராட்டத்தின் வாயிலாக மருந்து தடவ அலை அலையாய் புறப்பட தயாராக இருந்தது சமுதாயம்,
உத்தம நபியின் உண்மை சமுதாயம், யார் யார் பிரச்சினைக்கோ, முகம் தெரியாதவர்களின் பிரச்சினைக்கெல்லாம் கொடி பிடித்து கோஷமிட்ட சமுதாயம்... தன்னுடைய சொந்தங்களுக்காக ஜமாஅத் கொடிகளுடன், நெருப்பு விழிகளுடன் தலைநகரை திணற வைக்க ஒவ்வொரு அடிகளையும் நினைத்து இடிகளாய் புறப்பட்டது....
இறுதியில் போராட்ட அறிவிப்பிலேயே வெற்றியும் பெற்றது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பலம் என்ன என்பதை அதிகார வர்க்கம் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்....Sangairidhvan