பல வழக்குகளில் ஹிந்துத்துவ அடிப்படைவாதிகளுக்குத் தொடர்பு: அரசு

புதுடெல்லி : நாட்டில் நடந்த மாலேகான் போன்ற பல்வேறு குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவ பயங்கரவாதிகளே பல கொலைகளையும் செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் தன்னுடைய மாதாந்திர செயல்பாட்டு அறிக்கையை வியாழன் அன்று வெளியிட்டது. சம்ஜௌதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துத்த்வ பயங்கரவாதிகள் மேற்கூறிய குண்டு வெடிப்புகளைத் தாங்களே நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளதுடன் பல கொலைகளையும் துப்பாக்கிச் சூடுகளையும் தாங்கள் நடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு, 2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்ஜௌதா எக்ஸ்பிரஸில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு, 2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத் மக்கா மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு மற்றும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாலேகானில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு ஆகியவற்றில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ராஜேந்தர் சௌத்ரி, மனோகர் சிங், தான் சிங் மற்றும் தேஜ் ராம் ஆகியோர் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறினார்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் நர்சு ஒருவர் காயமுற்றது, 2004ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஜம்முவில் உள்ள மசூதி ஒன்றின் மீது கிரானைட் வெடிபொருளை எறிந்து வெடிக்கச் செய்து இருவர் பலியாகவும் 15 பேர் காயமுறவும் காரணமாக அமைந்தது, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜீலானி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உஜ்ஜைனைச் சேர்ந்த முஜீப் லாலா என்பவரைக் கொலை செய்தது, இந்தூர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பியார் சிங் நினாமா என்பவரின் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான ரமேஷ் நினாமா என்பவரைக் கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களையும் இந்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார்.http://www.inneram.com/

Back to Home Back to Top tntjmvl