ராஜஸ்தானில் செல்போன் பயன்படுத்த இளம் பெண்களுக்கு தடை

ஜெய்ப்பூர், ஜன.11-

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்துக்களில் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து முடிவு எடுக்கப்பட்டன. உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் பெண்கள் செல்போன் பயன்படுத்த பஞ்சாயத்துக்கள் தடை விதித்தன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சலம்பர் என்னும் இஸ்லாமிய கிராம பஞ்சாயத்தில் நேற்று பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதுபற்றி அந்த பஞ்சாயத்து தலைவர் ஹபிபூர் ரஹ்மான் கூறியதாவது:-

பெண்களிடம் நல்ல பழக்க, வழக்கத்தை ஏற்படுத்த வேண்டியது நமது கடமையாகும். எனவே இந்த ஊர் பெண்கள் பெற்றோர் விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் பையனைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதை மீறினால் ரூ.51 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

திருமண விழாக்களில் இளம்பெண்களை பாட்டுப் பாடவோ, நடனம் ஆடவோ அனுமதிக்க கூடாது. அதுபோல இந்த பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. செல்போன்கள்தான் இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன. எனவே பெண்கள் செல்போனில் பேச தடை விதிப்பதற்கு எல்லாரும் சேர்ந்து ஏகமனதாக முடிவு செய்துள்ளோம். இதை எல்லா பெண்களும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.maalaimalar

Back to Home Back to Top tntjmvl