குட்டைப் பாவாடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குட்டைப் பாவாடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆபாச கடலில் மூழ்கும் இளசுகள்!

தொழில்நுட்பம் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி’ என்பார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், நாம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் செல்போன். தொலைத்தொடர்பு வசதியின் உச்சம் செல்போன். நினைத்த நேரத்தில் நினைத்தவருடன் பேச இந்த குட்டியூண்டு உபகரணம் உதவுகிறது. நினைத்த நேரத்தில் வேறு சில ‘விஷ(ம)யங்களையும்’ செய்ய முடிவதுதான் வினை.
புரியவில்லையா? கொஞ்சம் பிளாஷ்பேக்குக்குப் போங்கள். ஒரு காலத்தில் ‘அந்த’ மாதிரி படங்களைப் பார்க்க ஆசைப்படும் இளசுகள், பெரிசுகள், ஊருக்கு வெளியே ஒதுங்கிக் கிடக்கும் ஓய்ந்துபோன திரையரங்குக்கு பயந்து பயந்து பதுங்கிப் பதுங்கி போவார்கள். இன்றோ ஆபாசப் படங்கள் செல்போன் வாயிலாக உள்ளங்கைக்கு வந்துவிட்டன.
சக மாணவன், தெருமுக்குக் கடை, இணையதளம் மூலம் செல்போனில் ‘ஆபாசங்களை’ அள்ளித் திணித்துக்கொள்ள முடிகிறது. விரும்பிய நேரம் பார்க்க முடிகிறது. இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவர் கையிலும் லேட் டஸ்ட் செல்போன் தவழ்கிறது. யோசித்துப் பாருங்கள்… விபரீதம் புரியும்!
ஆபாசக் காட்சிகளுக்கு டி.வி.யோ, லேப்டாப்போ தேவையில்லை. யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயமில்லை. கிடைத்த ‘கேப்’பில் சில நொடிகளில் சாதாரணமாய் செல்போன் நம்பர் தேடுவதைப் போலவே பார்த்துவிடும் வசதி. வாடிக்கையாளர்களின் இந்த ஆவலைப் புரிந்துகொண்டு அனேக ‘சப்ளையர்களும்’ உருவாகிவிட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேவையறிந்து அவர்கள் ‘டேஸ்ட்’டுக்கு ஏற்ப சேவை செய்கிறார்கள்.
ஒரு செல்போன் சர்வீஸ்காரர் சொல்வதைக் கேளுங்கள்… ”இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு ஆபாசப் படங்களை விரும்புவதில்லை. அவற்றில் ‘எல்லாமே’ இயந்திரத்தனமாய், எந்தக் கவர்ச்சியும் இல்லாமல் நடந்து முடிந்துவிடுகின்றன என்கிறார்கள்.
மாறாக, ‘மார்பிங்’ செய்யப்பட்ட பிரபலங்களின் செக்ஸ் படங்கள், தென்னிந்தியப் படங்கள், சிறுசிறு கிளுகிளு எம்.எம்.எஸ்.கள் ஆகியவற்றைத்தான் விரும்புகிறார்கள்” என்கிறார். பெங்களூர், மைசூர் பகுதியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று அதிர வைக்கிறது.
செல்போன் வைத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் 75 சதவீதம் பேர் தினமும் ஆபாசம் தரிசிக்கிறார்கள். அவர்கள் இதற்காக வேறு எந்த சாதனத்தையும் விட செல்போனை 6 மடங்கு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆபாச தாகமுள்ளோர் அதிகரிப்பை அடுத்து, அவர்களுக்கு சேவை செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. படிக்கிற வயதில் மாணவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்து கவனம் சிதைந்து போகிறார்கள் என்றால், அவர்களுக்குக் கிடைக்கும் ‘பாக்கெட் மணி’யும் இப்படிக் கரைந்து போகிறது.
இதற்கு அடிமையானவர்கள், அடுத்து வீட்டிலேயே பணத்தை எடுக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட ஆபாச வீடியோ கிளிப் பரபரப்பாக பரப்பப்படுகிறது. சட்டசபையிலேயே செல்போனில் ஆபாசப் படம் பார்த்ததற்காக கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்தார்களே ஞாபகமிருக்கிறதா? அவர்கள் பார்த்தது, அப்போது ‘ஹிட்’டாக இருந்த ‘பசிலா’ என்ற ஆபாசப் படத்தை.
பொதுவாக, இயல்பாக படமாக்கப்படும் உள்ளூர் சரக்குக்கு அதிக மதிப்பிருக்கிறது. மும்பை போன்ற ஜனசமுத்திரங்களில் மூலைக்கு மூலை ஆபாசப் படம் வழங்கும் ‘சேவை’ நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நபரான ஜுனைத், 4 ஜி.பி. மெமரி கார்டுக்கு 250 ரூபாய் கேட்கிறார். இது ‘வழக்கமான’ படம் அல்ல என்று உத்தரவாதமும் அளிக்கிறார்.
16 கே.பி. என்றால் 400 ரூபாய். இவருக்கு சில பெண் வாடிக்கையாளர்களும் உண்டாம். செல்போன் சர்வீஸ் சென்டர்கள், ‘டாப் அப்’ கடைகள் பலவும் கறுப்பான மறுபக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் யாரும் இந்தக் கடைகளுக்கு நேரே சென்று, கிளுகிளு காட்சிகள் கிடைக்குமா என்று கேட்டுவிட முடியாது.
உடனடியாகப் பின்வாங்கி விடுவார்கள் அல்லது தாங்கள் அப்படிப்பட்ட காட்சிகளை அளிப்பதில்லை என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்துவிடுவார்கள். அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்போதாவது நடக்கும் போலீஸ் ரெய்டு தான் காரணம். எனவே பழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அல்லது அவர்களுடன் செல்பவர்களுக்குத்தான் சேவை கிடைக்கும்.
கேட்கக் கூச்சப்படும் புதியவர்கள் என்றால், அவர்களின் உடல்மொழியிலேயே விஷயத்தை அறிந்துகொண்டு விசாரிப்பார்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் ஏராளம். ஆக, தயாரிப் புச் செலவு என்பது வெகு குறைவு. எனவே வாடிக்கையாளரின் தோற்றத்தைப் பார்த்து விலையை நிர்ணயிக்கிறார்கள்.
கிடைக்கும் தொகை ஏறக்குறைய முழுக்க முழுக்க லாபம்தான். ஆமதாபாத்தின் ரிலீப் ரோட்டில், இங்கு ‘டவுன்லோடு செய்து தரப்படும்’ என்ற போர்டுடன் சிறு சிறு கடைகள் நிறைய இருக்கின்றன. இங்கு வசதியான வீட்டுப் பையன்கள் தங்களின் பெரிய திரை கொண்ட 3ஜி செல்போனுடன் படையெடுக்கிறார்கள்.
இவர்களின் நிபந்தனையெல்லாம், படம் தெளிவாக இருக்க வேண்டும், வைரஸ் அபாயம் இருக்கக் கூடாது என்பதுதான். இந்த மாதிரி கடை ஒன்றின் உரிமையாளரான ராக்கி, ”நடுத்தர, உயர் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளவட்டங்கள்தான் எனது வாடிக்கையாளர்கள்” என்கிறார்.
இவரிடம் 100 ரூபாய்க்கு ‘டவுன்லோடு’ செய்வதற்காக காத்திருக்கும் கல்லூரி மாணவர் விகாஸ், ”நாங்கள் 6 பேர் ஒரு ‘கேங்’. இந்த ‘கேங்’கில் பெண்களும் உண்டு. நாங்கள் பெறும் ஆபாசப் படங்களை எங்களுக்கு இடையே பகிர்ந்துகொள்வோம்.
வெறும் 100 ரூபாய்க்கு எனக்கு 20-க்கும் மேற்பட்ட எச்.டி. வீடியோ கிளிப்கள் கிடைக்கும்” என்கிறார். ‘குரூப் ஸ்டடி’ போல விகாஸ் நண்பர் குழு (இதில் பெண்களும் உண்டு என்று சொன்னோமே!) வாரம் ஒருமுறை கூடி ஒன்றாக ஆபாசக் காட்சிகளைப் பார்த்து ரசிப்பதும் உண்டாம்.
சில மாணவர்கள், தாங்கள் வாடிக்கையாளர்களாக உள்ள கடைகளுக்கே தங்களுக்குக் கிடைக்கும் புதிய வீடியோ கிளிப்களை அளித்து உதவி செய்வதும் உண்டாம். இதில் இன்னொரு பக்கமும் உண்டு. தற்போது பலரும் தங்கள் செல்போனே தங்களுக்கு வசதி என்று இறங்கிவிட்டதால், ஆபாச சி.டி., டி.வி.டி. விற்பனை செய்வோர் அடிவாங்கிக் கிடக்கிறார்கள்.
அவர்களுக்கு 20 சதவீதம் அளவுக்கு ‘பிசினஸ்’ பாதித்திருக்கிறதாம். ”சற்று வயதான பெண்கள் சிலர் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கிவிட்டு, கேட்கிற காசை கொடுத்து சி.டி. வாங்குவார்கள். அதன் கவரை அவசரமாகக் கிழித்தெறிந்துவிட்டு தங்கள் ஹாண்ட் பேகுக்குள் திணித்துக் கொண்டு அவசரமாக நகர்வார்கள்.
அதெல்லாம் பழைய காலமாகிவிட்டன” என்கிறார் ஒரு திருட்டு சி.டி. விற்பனையாளர். இளசுகள் இயல்பாகவே இந்த ஆபாச அலையில் அடித்துச் செல் லப்படுகிறார்கள் என்றால், நடுத்தர வயதினர், பெரியவர்களும் பலரும் ஒரு ‘ரிலாக்ஸாக்காக’ ஆபாசப் படம் பார்ப்பதாகக் கூறுகிறார்கள்.
அலுவலக வேலை நெருக்கடியில் இருந்து ஆறுதல் அளிப்பது இதுபோன்ற படங்கள்தான் என்கிறார் ஒருவர்.
வெளியே பட்டவர்த்தனமாகத் தெரியாவிட்டாலும் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் பாய்ந்திருக்கும் ஆபாச அலைக்கு அணை போட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. பெண்கள் மீதான எல்லை மீறல், பாலியல் வல்லுறவு போன்றவற்றுக்கு எல்லாம் இதுபோன்ற காட்சிகளே தூண்டுதல் ஆகின்றன என்பது அவர்களின் கவலை.
அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது!
மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்!
Read More »

பார்களில் மது பரிமாறும் பணியில் பெண்களை அமர்த்த கர்நாடக உயர்நீதிமன்றம் மானம்கெட்ட உத்தரவு!

பார்களில், மது பரிமாறும் பணிகளில் பெண்களை அமர்த்தலாம் என கர்நாடக உயர்நீதிமன்றம், அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பெண்களை பார்களில் மது பரிமாரும் பணிக்கு அமர்த்துவது குறித்து, உணவக உரிமையாளர்கள் சார்பில் தொடங்கப் பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று (10/07) தீர்ப்பு வழங்கியது.

அதில், மது பரிமாறும் இடங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது தப்பில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பாரில் பணி புரிபவர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது திருநங்கையாகவோ கூட இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை 9.15 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது குறித்து சென்னை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாணவ-மாணவிகள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி, மாதம் வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in


மதிப்பெண் சான்றிதழ்கள் 20.06.2013 அன்று அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித் தேர்வுகள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலிருந்து மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
Read More »

தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: தமிழக அரசு..........!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளி விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாகஇருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 3ம் தேதிக்குப் பதில் ஜூன் 10-ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3 ம்தேதி துவங்குவதாக இருந்தது. தற்போது அதற்கு பதிலாக வரும் ஜூன் 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள்10ம் தேதி திறக்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Read More »

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை

பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்பட்டுள்ளார்.

அவருக்காக டெல்லி பெண்கள் அமைப்புகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை. அவருக்காக சென்னை நடிகைகள் கடற்கரையில் ஊர்வலம் போகவில்லை. அவருக்காக அன்னை சோனியாவின் கண்களில் கண்ணீர் வரவில்லை. ஏனெனில் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் என்றால் அவர்கக்கு இழிக்கப்படும் கொடுமையை பாருக்க . தாராளமாக கொலை செய்யலாம். சித்திரவதை செய்யலாம். ஏனெனில் அவர்கள் மனிதர்களே அல்ல போலும்!Sangairidhvan
Read More »

சினிமாவினால் சமுதாய சீரழிவு

நாட்டு மக்களிடையில் பொதுவாகவும், இளைய தலைமுறையினரிடையில் குறிப்பாகவும் பரவி வரும் ஒழுக்கச் சீர்கேடுகள். கலாச்சார சீரழிவுகள், நாடெங்கும் பரவி வரும் வன்முறை சம்பவங்கள், பயங்கரவாதச் செயல்கள், கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற எல்லாவிதமான அநியாயங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது சினிமா தான். இப்படிப்பட்ட சீரழிக்கும் சினிமாவினால் எவ்வளவு பெரிய அக்கிரமங்கள் அரங்கேற்றப்பட்டாலும், ஒழுக்கச் சீர்கேடுகளான காட்சிகள் காட்டப்பட்டாலும் அவற்றையெல்லாம் அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை, ஆட்சியாளர்களும் பெரிதுபடுத்துவதில்லை. மாறாக இதுபோன்ற சீரழிவுகளை வளர்க்கும் சினிமாவுக்கு அரசாங்க பணத்திலிருந்து மானியம் கொடுத்து உற்சாகப்படுத்துவதைத் தான் பார்க்க முடிகிறது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு ஆட்டக்காரிகள் நிகழ்த்துகின்ற ஆட்டங்களைப் பார்த்து இளைஞர்கள் முதல் கிழவர்கள் வரை சீர்கெட்டு போகின்ற நிலை நாடு முழுவதும் பரவி வருகின்றது. விபசாரத்தை ஊக்குவித்து அதற்கு அங்கீகாரம் கொடுத்து சமுதாயத்தில் பரவ விட்டிருப்பது சினிமாவில் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
ஒரு பெண்ணை எப்படியெல்லாம் தன் வலையில் சிக்கவைக்கலாம், அவளுடைய கற்பை எப்படி சூரையாடலாம் என்பன போன்ற காட்சிகளை சினிமாவில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது. ஒரு பெண் தனது கணவனுடன் தனி அறையில் ஈடுபடவேண்டிய காட்சிகளையெல்லாம் திரையில் காட்டி உணர்வுகளை கிளரிவிடுகின்ற கேவலமான கலாச்சாரத்தை சினிமாவில் தான் பார்க்க முடிகிறது.
ஒரு பெண் மறைக்க வேண்டிய அங்க அவயங்களைத் திறந்து காட்டுகின்ற காட்சிகள், தன்னுடைய உடலைக் குலுக்கி குலுக்கி ஆடி ஆடவர்களை ஆடவைக்கின்ற அவலக்காட்சிகள் இல்லாத சினிமா எடுபடுவதில்லை என்ற அளவிற்கு நிலைமை கீழ்த்தரமாக உள்ளது.
நிதி நிறுவனங்களில் எப்படி கொள்ளையடிக்க வேண்டும்? வீடுகளில் தொழில் ஸ்தாபனங்களிலும் எவ்வாறு திருட வேண்டும் என்ற பயிற்சியெல்லாம் சினிமாவில் கொடுக்கப்படுகிறது. அதைப்பார்த்து கொள்ளைக்காரர்கள் செயல்படுத்திக் காட்டுகின்றார்கள்.
பொதுவாக நாட்டில் நடக்கின்ற எல்லாவிதமான தீவரவாதங்கள், பயங்கரவாதங்கள் வன்முறை, கற்பழிப்புகள், கொலை, கொள்ளை போன்ற சீரழிவுகள் சினிமாவினால் தான் ஏற்படுகிறது.
ஒரு பெண் சினிமாவில் நடித்துவிட்டால் அவளை ஏதோ பெரிய சாதனை படைத்தவள் போன்று சமுதாயத்தில் தனி மதிப்பும் மரியாதையும் கொடுத்து, வானளாவ தூக்கிப் புகழ்வதும், மீடியாக்களில் அவர்களைப் பெரிதுபடுத்திக் காட்டுவதும் வியாபாரப் பொருட்களின் விளம்பரங்களில் அவர்களை இடம்பெறச் செய்வதும், சமுதாய விழாக்களில் அவர்களை இடம்பெறச்செய்வதும் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.
சினிமாக்காரிகளின் அரை நிர்வாணப்படங்கள் முகப்பில் இடம் பெறுகின்ற பத்திரிகைகள் தான் சிறந்த பத்திரிகை என்று கருதும் அளவிற்கு எந்த பத்திரிகையை எடுத்தாலும் மானம் கெட்ட பண்பற்ற சினிமாக்காரிகளின் படங்கள் தான் பெரிய அளவில் இடம் பெறுகின்றன.
சினிமாவில் முத்தக் காட்சிகள் இடம் பெறுவதை பெரிய தவறாக இந்திய மக்கள் கருதிய காலங்கள் மாறி இப்போது எல்லாவற்றையும் மிஞ்சும் அளவிற்கு பொதுமக்களுக்கு முன்னிலையிலேயே எங்கோ உள்ள சினிமாக்காரனும், எங்கோ உள்ள சினிமாக்காரியும் கட்டிப் புரண்டு முத்தம் கொடுக்கின்ற கேவலமான வெட்கம் கெட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்ற நிலைக்கு நாடு சீரழிந்து செல்கிறது.
எய்ட்ஸ் நோய் பரவுவதற்கு சினிமா தான் காரணம். அப்படியிருக்க எய்ட்ஸ் ஒழிப்பு நிகழ்ச்சியில் சினிமாக்காரிகளை கொண்ட வந்து பங்கு பெறச் செய்வது வேடிக்கையாக இருக்கிறது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தியாவைச் சார்ந்த ஒரு சினிமாக்காரியை வெளிநாட்டைச் சார்ந்த சினிமாக்காரன் நான்காயிரம் லாரி டிரைவர்கள் முன்னிலையில் கட்டிப்பிடித்து சரமாரியாக வெறியோடு முத்தங்கள் கொடுத்து காமவெறியை வெளிப்படுத்திய நிகழ்ச்சி ஓர் அளவாவது வெட்க உணர்வுள்ள இந்தியர்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானமுள்ள இந்தியப் பெண்கள் திரண்டு சினிமாவில் உள்ள ஒழுக்கவீனங்களுக்கு எதிராக குரல்கொடுத்து சீரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது கடமையாகும்.http://adiraiexpress.wordpress.com
தஸ்தகீர்.
Read More »

குடி, புகை, நிலை தடுமாறும் இளைய தலைமுறை!கவனம்!!

இன்றைய இளம்  தலைமுறையினருக்கு நல்லதை தெரிந்து கொள்ள நான்கு வழிகள் இருக்கிறது என்றால் கெட்டதை அறிந்து கொள்ள ஆயிரம் வழிகள் கிடைக்கின்றன. வளர் இளம் பருவத்தில் உள்ள 10,11,12-ம் வகுப்பு மாணவர்களே அதிகம் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் ஆய்வுக்கு சென்ற முதன்மை கல்வி அதிகாரியை அதிர்ச்சியடையச் செய்யும் சம்பவங்கள் நடந்துள்ளன. பாடப்புத்தகங்களுக்குள் ஆபாசப் புத்தகங்கள், காதல் கடிதங்கள், செல்போன்களை ஒழித்து வைத்திருக்கின்றனர் மாணவ, மாணவியர்கள். இதைக் கேள்விப்பட்டவுடன் நமது இளைய தலைமுறையினர் எங்கே போய்க் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது. தடுமாறும் இளைய தலைமுறை மாணவர்களை சொல்லியும் குற்றமில்லை. அவர்கள் நல்லவர்களாக இருக்க கிடைக்கும் வாய்ப்புகளை விட கெட்டுப் போகத்தான் இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. சினிமாவும், தொலைக்காட்சியும் ஏற்படுத்தி வரும் கலாச்சால சீர்கேடு தவிர தகவல் தொழில்நுட்ப புரட்சியினால் கையில் தவழும் செல்போன், தெருவுக்கு தெரு பரவலாக இருக்கும் இண்டர்நெட் சென்டர்கள் மாணவர்களின் மனதை அலைபாயச் செய்கின்றன. பள்ளி மாணவிகளின் பைகளில் இருந்த காதல் கடிதங்கள்தான் சற்று யோசிக்கச் செய்கிறது. மாணவிகளுக்கு எதனால் இந்த தடுமாற்றம்?. இன்றைய கல்வி முறை எப்படிப்பட்டது?, மனப்பாடம் செய்யும் இயந்திரங்களை மட்டுமா ஆசியர்கள் தயார் செய்கின்றனர்?, பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை மட்டும் நடத்தி விட்டு போதனை எதுவும் தராமல் விட்டுவிடுகின்றனரா?, பள்ளிகளில் பாலியல் கல்வி பற்றிய பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற அரசின் அறிவிப்பு காற்றோடு போய்விட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றன. இரண்டு பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையிலேயே அதிக அளவிலான ஆபாச புத்தகங்களும், காதல் கடிதங்களும் சிக்கியுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனை செய்தால் என்னென்ன சிக்குமோ? எத்தனை சமூக விரோதிகள் மாணவர்களை குற்றச்செயல்களுக்கு தூதுவர்களாக பயன்படுத்துகின்றனரோ என்ற ஐயம் தோன்றுகின்றது. புகையும், மதுவும் இதற்கிடையே, இன்றைய தலைமுறையினர் ஏராளமானோர் புகை மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. 12 வயது முதல் 16 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினர் அதிக அளவில் புகை மற்றும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வருவதாக அந்த ஆய்வு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. டெல்லியில் 3ஆயிரத்து 956 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சினிமாவை பார்த்தே புகைப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிவித்துள்ளனர். 162 பேர் தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்கள் புகைப் பிடிப்பதை பார்த்து இதனை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். மாணவிகளை விட மாணவர்கள்தான் அதிகளவில் சினிமாக்களை பார்த்து கெட்டுப்போய் உள்ளனர். புகையிலை பயன்பாடு குறித்த மற்ற விளம்பரங்கள் மாணவர்களை அதிகமாக கவரவில்லை. விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்பட்டவர்கள் மிகவும் குறைவுதான். பெற்றோர்களின் கண்காணிப்பு உலகம் முழுவதும் புகையிலைக்கு எதிரான பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இளைஞர்களை கவர்ந்த சினிமா நட்சத்திரங்களை பயன்படுத்தினால், அது பயனுள்ளதாக இருக்கும். சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். புகையிலையினால் ஏற்படும் தீமைகளை விளக்கி குறும்படங்கள் தயாரித்து, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் திரையிடலாம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும்பாலும் 10,11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக அளவிலான தவறுகளில், குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். தங்களது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எப்படிப் படிக்கிறார்கள் என்பது குறித்து கவலையும், அக்கறையும் செலுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறுகளைத் தடுக்க முடியும்.http://tamil.oneindia.in
Read More »

இரவில் தனியாக ஒரு இளம் பெண்ணுடன் சுற்றிய பாய் பிரண்டை தான் முதலில் தூக்கிலட வேண்டும் : சுப்ரீம் கோர்ட் வக்கீல் மனோஹர்


டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட வந்துள்ள 56 வயதுள்ள சுப்ரீம் கோர்ட் வக்கீல் மனோஹர் என்பவர் மாணவியை இரவு நேரத்தில் தனியாக அழைத்து சென்ற பாய் பிரண்டை தான் முதலில் துக்கிலிட வேண்டும் என பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்ததுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வக்கீல் மனோர் கூறுகையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் எந்த பெண்ணும் நமது நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நான் கேள்விபட்டதில்லை, கொள்ளை கூட்ட தலைவன் கூட கண்ணியத்துடன் இருக்கும் பெண்ணை தொடமாட்டான் எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாணவியின் பாய் பிரண்டின் காம உணர்ச்சியினால் தான் இந்த சம்பவமே நடந்துள்ளது. அவன் தான் அனைத்திற்கும் காரணம் அவனை தான் முதலில் தண்டிக்க வேண்டும் என வக்கீல் மனோஹர் கூறியுள்ளார்.
Read More »

பாலியல் தொழிலை அனுமதித்தால் வன்புணர்வு நடக்காதாம்!கொடுமையான சிந்தனை

பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்ற கருத்துருவாக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் சிலர் நிலைமையின் சீரியஸ்னஸ் புரியாமல் கருத்து சொல்கிறார்கள்.

டெல்லி சம்பவத்துக்கு எதிராக உணர்வுப்பூர்வமாகக் கூடிய இளைய தலைமுறையினரைத் திருப்தி படுத்தும் நோக்கில் மத்திய அரசு, நீதிபதி வர்மா குழுவை நியமித்து அறிக்கை வழங்கும்படி கேட்டுக்கொண்டது. அவரும் பொதுமக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப பரிந்துரைகளை வழங்க பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராய்ந்து வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகச் செயல்பட்டு வரும் "பாரதிய பதிதா உத்தார் சபா" என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, "பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தால், பாலியல் வன்முறைகள் குறையும்" என்று கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "பலாத்காரத்தால் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழந்தது வருந்தத்தக்கது. பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்காதது, பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்தத் தருணத்தில் பாலியல் தொழிலை அங்கீகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும். ஏற்கனவே 164 நாடுகளில் பாலியல் தொழில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடடா! என்னே ஒரு சிந்தனை பாருங்கள்!! சட்டப்படி தடுத்து வைத்திருப்பதால்தான் அதை மீறும் குற்றங்கள் நடக்கின்றனவாம்! அதனால் அதற்கு அனுமதி அளித்து விட்டால் அத்தகைய குற்றங்கள் நடக்காதாம்! அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்குச் சட்டப்பூர்வமாக அனுமதி உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போரட்டிக்கும் போதெல்லாம் சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.

திருடுவது, வழிப்பறி செய்வது, கொள்ளையடிப்பது கள்ள நோட்டடிப்பது கறுப்புப் பணம் பதுக்குவது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது ஆகியவை குற்றங்கள் என்று சட்டத்திலிருப்பதால்தானே நடக்கின்றன. பேசாமல் இவற்றையும் சட்டரீதியில் அங்கீகரித்து விட்டால் நாட்டில் குற்றவாளிகள் குறைந்து விடுவார்களே என திருடர்களும் கொள்ளைக்காரர்களும் பரிந்துரைக்காமலிருக்க வேண்டும் என்பதே நமது கவலை!

- பஞ்ச் கல்யாணி

நன்றி : இந்நேரம்Sangairidhvan
Read More »

ராஜஸ்தானில் செல்போன் பயன்படுத்த இளம் பெண்களுக்கு தடை

ஜெய்ப்பூர், ஜன.11-

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்துக்களில் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து முடிவு எடுக்கப்பட்டன. உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் பெண்கள் செல்போன் பயன்படுத்த பஞ்சாயத்துக்கள் தடை விதித்தன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சலம்பர் என்னும் இஸ்லாமிய கிராம பஞ்சாயத்தில் நேற்று பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதுபற்றி அந்த பஞ்சாயத்து தலைவர் ஹபிபூர் ரஹ்மான் கூறியதாவது:-

பெண்களிடம் நல்ல பழக்க, வழக்கத்தை ஏற்படுத்த வேண்டியது நமது கடமையாகும். எனவே இந்த ஊர் பெண்கள் பெற்றோர் விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் பையனைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதை மீறினால் ரூ.51 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

திருமண விழாக்களில் இளம்பெண்களை பாட்டுப் பாடவோ, நடனம் ஆடவோ அனுமதிக்க கூடாது. அதுபோல இந்த பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. செல்போன்கள்தான் இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன. எனவே பெண்கள் செல்போனில் பேச தடை விதிப்பதற்கு எல்லாரும் சேர்ந்து ஏகமனதாக முடிவு செய்துள்ளோம். இதை எல்லா பெண்களும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.maalaimalar
Read More »

சுவிட்சர்லாந்தில் ஹிஜாபுடன் செல்ல அனுமதி

பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்வது குறித்து சுவிட்சர்லாந்ந்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்ட பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது,

இதில் பர்தா அணிவதற்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 83 வாக்குகளும் பதிவாயின, இதன் மூலம் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்லும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, (அல்ஹம்துலில்லாஹ்)

கடந்த மார்ச் மாதம் சுவிஸ் நாட்டின் பெண்கள் உரிமைக்கான சுப்ரீம் சாம்பர் பர்தாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More »

குட்டைப் பாவாடைக்கு தடை விதிக்க வேண்டும்'

ஜெய்ப்பூர்: "தனியார் பள்ளிகளில், மாணவிகளுக்கு, குட்டைப் பாவாடையை, சீருடையாக வைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல்களுக்கு, வழி வகுக்கும் இதுபோன்ற உடைகளுக்கு, தடை விதிக்க வேண்டும்' என, ராஜஸ்தான் பா.ஜ., - எம்.எல்.ஏ., பன்வாரி லால் சிங் வலியுறுத்தியுள்ளார்.கடிதம்ராஜஸ்தான், அல்வார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., வான, பா.ஜ.,வைச் சேர்ந்த, பன்வாரி லால் சிங், அம்மாநில தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்:பெரும்பாலான, தனியார் பள்ளிகளில், மாணவியருக்கான சீருடைகள், சற்றும் பொருத்தமற்றதாக உள்ளன. "மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வர வேண்டும்' என, வற்புறுத்துகின்றனர். அத்துடன், குட்டைப் பாவாடையை சீருடையாகவும், பல்வேறு பள்ளிகளும், அங்கீகரித்துள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும்.மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வருவது, பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கும், கேலி, கிண்டல்களுக்கும், வழி வகுத்து, ஆபத்தை ஏற்படுத்தி விடும்.பள்ளிகளுக்கு நடந்து செல்லும்போதும், பஸ் ஏறுவதற்காக, பஸ் ஸ்டாப்புகளில், காத்திருக்கும்போதும், குட்டைப் பாவாடை அணிந்துள்ள மாணவியர், பலரின், கேலி, கிண்டல்களுக்கு ஆளாகின்றனர்.ஜெய்ப்பூரை பொறுத்தவரை, பெரும்பாலான பள்ளிகளின், சீருடை, குட்டைப் பாவாடையாகத் தான் உள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும், தற்போதைய சூழலில், இந்த உடை, சற்றும் பொருத்தமற்றது. குட்டைப் பாவாடைக்கு பதிலாக, வேறு நல்ல உடையை பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில், பன்வாரி லால் சிங், வலியுறுத்தியுள்ளார்.
Read More »

Back to Home Back to Top tntjmvl