சிறப்புக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்புக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஓரின சேர்க்கை-மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!


IMG_0555ஓரினசேர்க்கை சட்டப்படி குற்றம் என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் இன்று (17-12-2013_ மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஓரினசேர்கைக்கு எதிராக கோசமிட்டனர்.
இதில் எம்.ஐ சுலைமான் , சையத் இப்ராஹீம் , யுசுஃப் , அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
Read More »

சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஒரு ஒழுக்கமுள்ள[?] பெண்?!- மதுரவாயல் இஸ்மாயில்

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பாக சென்னை கமிஷ்னர்

அலுவலகத்தில் ஒரு ஒழுக்கமுள்ள[?] பெண் ஒரு குற்றசாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

என்ன குற்றசாட்டு என்றால் சினிமா என்ற ஒழுக்கமான[?] தொழிலில் ஒரு திரைப்பட்த்தில் நடித்த என்னை ஒழுக்கமில்லாதவள் போல் சித்தரித்து விட்டார்கள் என்று பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவராக தன்னை கூறிக்கொள்ளும் நஸ்ரியா நஜிம் என்பவர் தாம் அவர் .அவர் சினிமாவில் கண்ணியமான[?] கதாபாத்திரமான கதாநாயகியாக நடிப்பவர்.

இவர் ஒரு படத்தில் தன்னை ஆபாசமாக தொப்புள் தெரிவது போல் டூப் செய்து தன்னை இழிவுப்படுத்தி விட்டார்கள் என்று மட்டும் கூறியிருந்தால் இந்த கலிசடையை பற்றி இங்கே நாம் எழுதியிருக்க மாட்டோம்,

ஆனால் இந்த கலிசடை தன்னை பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தை சார்ந்தவர் என்றும் முஸ்லிம் மதத்தை இயக்குனர் கேவலப்படுத்திவிட்ட்தாகவும் கூறியுள்ளார் . இஸ்லாம் என்றால் என்னவென்றும் உன்மையாகவே யார் கேவலப்படுத்துவது இந்த கலிசடைக்கு தெரியவில்லை .இஸ்லாத்தை மதிப்பது என்றால் இறைவனும் , இறைவனுடைய தூதர் நபிகள் நாயகமும் கூறிய ஒழுக்க போதனைகளை பின்பற்றி வாழ்வதே ஆகும்.ஆனால் இவர் இஸ்லாத்தில் இருப்பதாகக்கூறிக் கொண்டு இஸ்லாம் கூறக்கூடிய ஒழுக்க மாண்புகளை சிறிதும் கடைபிடிக்காமல் இருந்துக்கொண்டு நல்ல பாரம்பரியமான் குடும்பத்தை சேர்ந்தவர் என்று இவர் கூறுவது வியப்பாக உள்ளது

இஸ்லாம் கூறுகிறது அன்னிய ஆண்களுடன் வளைந்து குழைந்து பேசாதீர்கள் என்பது இஸ்லாம் பெண்களுக்கு விதிக்கும் பாதுகாப்பான் கட்டளை ஆகும் .ஆனால் இவரோ கதாநாயகனுடன் வளைந்து குழைந்து கட்டித் தழுவி இன்னபிற ஈன்ங்கெட்ட செயல்களை சினிமாவின் மூலம் செய்து வருபவார், மேலும் இஸ்லாம் பெண்களுக்கு கண்ணியத்தை காக்கும் விதமாக இட்ட கட்டளை முகம், ம்ற்றும் முன் கைகளைத் தவிர அனைத்தையும் மறைக்க வேண்டும் என்பதாகும் .ஆனால் அங்காவையங்களை [தொப்புள்] முதலியவற்றை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய ஆடைகளை அணியக்கூடிய இவர் பாரம்பரியமான் குடும்பத்தை சார்ந்தவர் என்று இவர் கூறுவது வியப்பாக உள்ளது,





மேலும் இப்படி ஒழுக்க மாண்புகளை பேணாமல் இஸ்லாமிய பெயர் தாங்கியாக நடந்துக்கொண்டு தன்னைத் தானே இழிவுப்படுத்தி கொண்டு மற்றவர்கள் இழிவுப்படுத்தி விட்டார்கள் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.- மதுரவாயல் இஸ்மாயில்



Read More »

நாவைச் சுழட்டும் காவிப்பூனை!


என்னதான் தனி ‘ரூட்டு’ போட்டு நடை நடந்து காண்பித்தாலும், காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தமிழருவி மணியன். ”தமிழக முதல்வர் வைகோ, இந்தியப் பிரதமர் மோடி” என்ற தனது காந்தி கணக்கின் மூலம் பிழைப்புவாத புலவர் மரபின் ‘ஆழ்வார்’ வேலையில் தன்னை அடித்துக்கொள்ள ஆளில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
தமிழருவி மணியன்

தமிழருவி மணியன்

ஆசிட் அடிப்பது,
மனைவியையே தந்தூரி அடுப்பில் வறுத்தெடுப்பது
என்ற காங்கிரசின் அகிம்சைக் கலாச்சாரத்தில்,
‘தமிழருவி’ கல்லா கட்ட தகுந்த வாய்ப்பற்று போனதால்,

ச்..சீ..சீ… இந்தக் காங்கிரசே மோசம்,
உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை என்று
கவுச்சி வெறுத்த பூனையாய் பேசிப் பிழைத்து,

கருணாநிதியின் கண் ஜாடைக்கும் சொறிந்து
கழக ஆட்சியிலும் சில பழங்களைத் தின்று பசியாறி,

ஆள்பவர்களை நேருக்கு நேர் எதிர்க்க திராணியற்று
அரசியல் ஒழுக்கம், ஊழல் எதிர்ப்பு, மது ஒழிப்பு என
வயித்துக்கு பங்கமில்லாமல் வாய்ஜாலம் காட்டி,
மொன்னையான அறிக்கைகள் வாயிலாக ஆளும் வர்க்க
தொண்ணை நக்கி உயிர்வாழ்ந்து,

திடீரென!

“ஆகா ஈழத்தமிழனுக்கு ஒரே எதிரி கருணாநிதிதான்” என்று எகிறிக் குதித்து
போயசின் ஈழத்தாய்க்கு எலி பிடித்ததன் மூலம்,
ஜெயா டி.வி.யில், பார்ப்பன ஊடகங்களில்
கஞ்சி குடித்து வயிறு வளர்த்து சமர்த்தான அக்கிரகாரத்து பூனை
இப்போது இன்னும் ஒரு படி தாவி
காவிப் பயங்கரவாதிகளின்
காலை நக்கவும் தயாராகிவிட்டது.

அடிக்கடி இவர் உதாரணம் காட்டும் கர்ம வீரருக்கே
டெல்லியில் தீ வைத்த ஆர்.எஸ்.எஸ். ‘அகிம்சாவாதிகளின்’ பின்னே போய்
ஊழலற்ற நல்லாட்சி வழங்கப் போகிறாராம் இந்தக் காந்தியக் கல்நெஞ்சன்.

”மோடிதான் நாயகன், மோடிதான் வில்லன், மோடிக்கு போட்டி மோடிதான்”
என்று துக்ளக் சோவை மிஞ்சுமளவுக்கு
தமிழக பார்ப்பனிய ஊடகங்கள் கண்டு கொள்ளுமளவுக்கு
”வருங்கால பிரதமரே வாழ்க! என்று கொடுத்ததுக்கு மேல கூவுது தமிழருவி!

மூடி மறைக்க முடியாத அளவுக்கு
மோடியின் குற்றச்செயல்களும், குஜராத் படுகொலைகளும் நாறிக்கிடப்பதால்
கண்ணை மூடிக்கொண்டு தான் மோடியை ஆதரிக்கவில்லையென்று!
முன் ஜாமின் வேறு!

குஜராத் – அதானி குழுமத்துடனான வரவு செலவில் படு பயங்கர நிலப்பேர ஊழலும்,
மோடியின் ஆட்சியில் எஸ்ஸார், எல்.அண்ட். டி, போர்டு இந்தியா, ரிலையன்சு உள்ளிட்ட
பல கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக் கொள்ளையில் நடந்துள்ள கொழுத்த ஊழலையும்
இந்தியத் தணிக்கைத் துறை அம்பலப்படுத்தியும்,
இயற்கை எரிவாயு, எண்ணெய் வயல்களின் பங்குகளை விற்பதில்
ஜியோ குளோபல் என்ற லெட்டர் பேட் நிறுவனத்தின் வழி நடந்த பிரமாண்ட ஊழல் அம்பலமாகியும்,
கண்ணைத் திறந்து கொண்டு ஆதரிக்கும் தமிழருவிக்கு
இது நிர்வாகத் திறமையாகவும், ஊழலற்றதாகவும் காந்தியத் தோலுக்கு உரைக்கிறது போலும்!

ஒரு வேளை மதவெறி போதையில் தமிழருவி தள்ளாடுகிறது போலும்!
சொல்லப்போனால் மதுவெறி தலைக்கேறியவன் வாயிலிருந்து கூட உண்மைகள் வெளிவந்து விடும்,
மதவெறி தலைக்கேறியவன் வாயிலிருந்து பொய்கள் மட்டுமே புழுத்துக் கொட்டும்.
சந்தேகப்படுபவர்களுக்கு தமிழருவியின் வாயே தகுந்த சாட்சி!

கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளிகள் நாட்டையும், மனித ஆற்றலையும் கொள்ளையடித்து,
இயற்கை வளங்களையும் சீரழிப்பதை கால் நடையாகக் கூட கண்டிக்காத,
குறி வைத்து இயக்கம் ஏதும் எடுக்காத இந்த காந்தீய குறி சொல்லி
திராவிட இயக்கம் எனும் பிம்பத்தை அழிக்க
மோடி எனும் பார்ப்பன பிம்பத்தை பயன்படுத்தி
மக்களை வாழவைக்கப் போகிறாராம்!

இதுவும் அவருக்கு ஒரு நம்பிக்கையாம்!
இந்து மதத்தின் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது தான் இதன் உள்ளருத்தம் போலும்!
அதாவது கருணாநிதி, ஜெயாவின் கன்னக் கோலை மோடியின் சூலத்தால் துடைக்கப்போகிறாராம்.
இந்த சந்தடி சாக்கில் மோடியே ஒரு கார்ப்பரேட் கன்னக்கோல் எனும்
முழுப்பூசணிக்காயை பார்ப்பன பிராசாதத்தில் மறைப்பதுதான் தமிழருவியின் தகிடுதத்தம்.

பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளை ஏற்கனவே பிழைப்புவாத அரசியல் வழி
தமிழகத்தில் காலுன்ற வைத்த திராவிடக் குருவிகளுக்கு
இந்த அருவி என்ன மாற்றை முன்மொழிந்து விட்டார்!

கருணாநிதி செய்தால் காரியவாதம்.
வைகோ செய்தால் மாற்று அரசியல்!
இந்தத் தரகு வேலைக்கு தமிழருவிக்கு பார்ப்பன கவரேஜ்!
வீடணர்கள் இல்லாமல் ராமஜெயம் இல்லை
காலந்தோறும் தமிழருவிகள் இல்லாமல் மோடி உலா இல்லை.
கருணாநிதி புடுங்கினால் புல்!
தான் புடுங்கினால் தர்ப்பை என்பதுதான்
தமிழருவியின் மாற்று சிந்தனை யோக்கியதை!

அம்பலப்பட்டுப் போன அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட
சமூக விமர்சகர்களாகவும்,
சொற்பொழிவாளர்களாகவும்,
மாற்றுக் கருத்தாளர்களாகவும்
மாய்மாலம் செய்யும் ஊடகப்பிறவிகள்
ஒருவித அரசியல் ஒட்டுண்ணிகள் என்பது மட்டுமல்ல,
அறியப்பட்ட அரசியல் பிழைப்புவாதிகளை விட
இவர்கள் தான் அதிக ஆபத்தானவர்கள் என்பதற்கு
தமிழருவியின் தரகு வேலைகள் நிரூபணங்கள்.

ஆயிரக்கணக்கான இசுலாமிய மக்களை படுகொலை செய்து
கருவிலிருக்கும் சிசுவை சூலத்தால் குத்தி நரவேட்டையாடியக்
காவிக் கும்பலின் ‘காவிய நாயகன் நரேந்திர மோடியை’
நாட்டைக் காட்டிக் கொடுக்கும்,
இயற்கை வளங்களை சூறையாடும்
கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன தவத்திற்கு அடியாள் ராமன் வேலை செய்யும்
மோடி எனும் தேச விரோதியை,
தேசத்தின் கதாநாயகனாக சித்தரிக்கும் தமிழருவியின் கரசேவை
பார்ப்பன – பாசிசத்துக்கெதிராக போராடி உயிர்நீத்த
சமூகப் போராளிகளின் சார்பாக கண்டிக்கத்தக்கது.

ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் போக்கில்
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும்
மறுகாலனிய கொள்கையின் மூலம்
ஊழலும், முறைகேடும், தேசவளங்கள் சூறையாடும் அரசியல் போக்காக
அமலாகிக்கொண்டிருக்கும் முழு உண்மையை
நக்சல்பாரி அரசியல் அமைப்புகள் மட்டும் தான்
மக்களிடம் போராடிச் சொல்கின்றன.

இந்த ‘மாற்று’ அரசியலை தேசத்தின் அமைதிக்கு, ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றும்,
அகிம்சை வழியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் பாதையே வழி என்றும்,
திராவிடக் கட்சிகள் மட்டும் தான் தீங்கு என்றும்
மடைமாற்றும் ஆளும்வர்க்க கைக்கூலிகளின்
ஒரு அவதாரம் தான்! ‘தமிழருவி’

பிரிட்டிஷ் அடக்குமுறைச் சட்டங்கள், திட்டங்களுக்கு
எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுந்து போராடிய போதெல்லாம்,
பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் பாராளுமன்றத்தில் குண்டு வீசி
காலனியாதிக்கத்திடம் கணக்கு தீர்த்த போதெல்லாம்,
காந்தி மடைமாற்றி உண்ணாவிரதம் என்று
நூல் நூற்று நூல் விட்ட மாதிரி

மறுகாலனியாக்கத்திற்கு எதிராக குமுறும் மக்களின் மனநிலையை
மறுபடியும் ஆளும் வர்க்கம் தேர்தல் கோப்பையில் வடித்துக் கொள்ள விழைகிறது.
இதில் இசுலாமிய ரத்தத்தாலும் தலித்துகள் ரத்தத்தாலும்
விவசாயிகள், தொழிலாளிகள் ரத்தத்தாலும்
நிரம்பிய மோடி எனும் கொலைகார கோப்பையை
தமிழர்களின் கையில் திணிக்க வேலை பார்க்கிறார் தமிழருவி.

கழுத்தில் ஒரு கருப்பு பேண்ட் பிட்டை போட்டுக் கொண்டு
பேச்சில் தமிழன் என்று ஒரு பிட்டை போட்டுக் கொண்டு
அன்று அத்வானி, வாஜ்பாய் பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு
காவடி தூக்கிய வைக்கோ தான் தமிழருவி கண்டுபிடித்த தகுந்த முதல்வர்.

நான் பொதுவானவன் அரசியல் சார்பற்றவன் நல்லதையே நாடுபவன்
என்று பேசிக்கொண்டே
குறிப்பாக பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு
அல்லக்கை வேலை பார்க்கும் தமிழருவி போன்றவர்கள் தான்
அறியப்பட்ட பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க தமிழருவி மட்டுமல்ல
தமிழாறு, தமிழ்வாய்க்கால், தமிழ்க்குட்டை…
என காவிப்புழுதிகள் நிறையவே கிளம்பும்!
தெருவை சுத்தமாக்க நமக்கும் வேலை இருக்கிறது நிறைய!.

ஜெயா டி.வி.யில், பார்ப்பன ஊடகங்களில் கஞ்சி குடித்து வயிறு வளர்த்து சமர்த்தான அக்கிரகாரத்து பூனை இப்போது இன்னும் ஒரு படி தாவி காவிப் பயங்கரவாதிகளின் காலை நக்கவும் தயாராகி விட்டது.- துரை. சண்முகம்-vinawu
Read More »

ஆபாச கடலில் மூழ்கும் இளசுகள்!

தொழில்நுட்பம் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி’ என்பார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், நாம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் செல்போன். தொலைத்தொடர்பு வசதியின் உச்சம் செல்போன். நினைத்த நேரத்தில் நினைத்தவருடன் பேச இந்த குட்டியூண்டு உபகரணம் உதவுகிறது. நினைத்த நேரத்தில் வேறு சில ‘விஷ(ம)யங்களையும்’ செய்ய முடிவதுதான் வினை.
புரியவில்லையா? கொஞ்சம் பிளாஷ்பேக்குக்குப் போங்கள். ஒரு காலத்தில் ‘அந்த’ மாதிரி படங்களைப் பார்க்க ஆசைப்படும் இளசுகள், பெரிசுகள், ஊருக்கு வெளியே ஒதுங்கிக் கிடக்கும் ஓய்ந்துபோன திரையரங்குக்கு பயந்து பயந்து பதுங்கிப் பதுங்கி போவார்கள். இன்றோ ஆபாசப் படங்கள் செல்போன் வாயிலாக உள்ளங்கைக்கு வந்துவிட்டன.
சக மாணவன், தெருமுக்குக் கடை, இணையதளம் மூலம் செல்போனில் ‘ஆபாசங்களை’ அள்ளித் திணித்துக்கொள்ள முடிகிறது. விரும்பிய நேரம் பார்க்க முடிகிறது. இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவர் கையிலும் லேட் டஸ்ட் செல்போன் தவழ்கிறது. யோசித்துப் பாருங்கள்… விபரீதம் புரியும்!
ஆபாசக் காட்சிகளுக்கு டி.வி.யோ, லேப்டாப்போ தேவையில்லை. யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயமில்லை. கிடைத்த ‘கேப்’பில் சில நொடிகளில் சாதாரணமாய் செல்போன் நம்பர் தேடுவதைப் போலவே பார்த்துவிடும் வசதி. வாடிக்கையாளர்களின் இந்த ஆவலைப் புரிந்துகொண்டு அனேக ‘சப்ளையர்களும்’ உருவாகிவிட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேவையறிந்து அவர்கள் ‘டேஸ்ட்’டுக்கு ஏற்ப சேவை செய்கிறார்கள்.
ஒரு செல்போன் சர்வீஸ்காரர் சொல்வதைக் கேளுங்கள்… ”இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு ஆபாசப் படங்களை விரும்புவதில்லை. அவற்றில் ‘எல்லாமே’ இயந்திரத்தனமாய், எந்தக் கவர்ச்சியும் இல்லாமல் நடந்து முடிந்துவிடுகின்றன என்கிறார்கள்.
மாறாக, ‘மார்பிங்’ செய்யப்பட்ட பிரபலங்களின் செக்ஸ் படங்கள், தென்னிந்தியப் படங்கள், சிறுசிறு கிளுகிளு எம்.எம்.எஸ்.கள் ஆகியவற்றைத்தான் விரும்புகிறார்கள்” என்கிறார். பெங்களூர், மைசூர் பகுதியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று அதிர வைக்கிறது.
செல்போன் வைத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் 75 சதவீதம் பேர் தினமும் ஆபாசம் தரிசிக்கிறார்கள். அவர்கள் இதற்காக வேறு எந்த சாதனத்தையும் விட செல்போனை 6 மடங்கு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆபாச தாகமுள்ளோர் அதிகரிப்பை அடுத்து, அவர்களுக்கு சேவை செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. படிக்கிற வயதில் மாணவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்து கவனம் சிதைந்து போகிறார்கள் என்றால், அவர்களுக்குக் கிடைக்கும் ‘பாக்கெட் மணி’யும் இப்படிக் கரைந்து போகிறது.
இதற்கு அடிமையானவர்கள், அடுத்து வீட்டிலேயே பணத்தை எடுக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட ஆபாச வீடியோ கிளிப் பரபரப்பாக பரப்பப்படுகிறது. சட்டசபையிலேயே செல்போனில் ஆபாசப் படம் பார்த்ததற்காக கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்தார்களே ஞாபகமிருக்கிறதா? அவர்கள் பார்த்தது, அப்போது ‘ஹிட்’டாக இருந்த ‘பசிலா’ என்ற ஆபாசப் படத்தை.
பொதுவாக, இயல்பாக படமாக்கப்படும் உள்ளூர் சரக்குக்கு அதிக மதிப்பிருக்கிறது. மும்பை போன்ற ஜனசமுத்திரங்களில் மூலைக்கு மூலை ஆபாசப் படம் வழங்கும் ‘சேவை’ நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நபரான ஜுனைத், 4 ஜி.பி. மெமரி கார்டுக்கு 250 ரூபாய் கேட்கிறார். இது ‘வழக்கமான’ படம் அல்ல என்று உத்தரவாதமும் அளிக்கிறார்.
16 கே.பி. என்றால் 400 ரூபாய். இவருக்கு சில பெண் வாடிக்கையாளர்களும் உண்டாம். செல்போன் சர்வீஸ் சென்டர்கள், ‘டாப் அப்’ கடைகள் பலவும் கறுப்பான மறுபக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் யாரும் இந்தக் கடைகளுக்கு நேரே சென்று, கிளுகிளு காட்சிகள் கிடைக்குமா என்று கேட்டுவிட முடியாது.
உடனடியாகப் பின்வாங்கி விடுவார்கள் அல்லது தாங்கள் அப்படிப்பட்ட காட்சிகளை அளிப்பதில்லை என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்துவிடுவார்கள். அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்போதாவது நடக்கும் போலீஸ் ரெய்டு தான் காரணம். எனவே பழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அல்லது அவர்களுடன் செல்பவர்களுக்குத்தான் சேவை கிடைக்கும்.
கேட்கக் கூச்சப்படும் புதியவர்கள் என்றால், அவர்களின் உடல்மொழியிலேயே விஷயத்தை அறிந்துகொண்டு விசாரிப்பார்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் ஏராளம். ஆக, தயாரிப் புச் செலவு என்பது வெகு குறைவு. எனவே வாடிக்கையாளரின் தோற்றத்தைப் பார்த்து விலையை நிர்ணயிக்கிறார்கள்.
கிடைக்கும் தொகை ஏறக்குறைய முழுக்க முழுக்க லாபம்தான். ஆமதாபாத்தின் ரிலீப் ரோட்டில், இங்கு ‘டவுன்லோடு செய்து தரப்படும்’ என்ற போர்டுடன் சிறு சிறு கடைகள் நிறைய இருக்கின்றன. இங்கு வசதியான வீட்டுப் பையன்கள் தங்களின் பெரிய திரை கொண்ட 3ஜி செல்போனுடன் படையெடுக்கிறார்கள்.
இவர்களின் நிபந்தனையெல்லாம், படம் தெளிவாக இருக்க வேண்டும், வைரஸ் அபாயம் இருக்கக் கூடாது என்பதுதான். இந்த மாதிரி கடை ஒன்றின் உரிமையாளரான ராக்கி, ”நடுத்தர, உயர் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளவட்டங்கள்தான் எனது வாடிக்கையாளர்கள்” என்கிறார்.
இவரிடம் 100 ரூபாய்க்கு ‘டவுன்லோடு’ செய்வதற்காக காத்திருக்கும் கல்லூரி மாணவர் விகாஸ், ”நாங்கள் 6 பேர் ஒரு ‘கேங்’. இந்த ‘கேங்’கில் பெண்களும் உண்டு. நாங்கள் பெறும் ஆபாசப் படங்களை எங்களுக்கு இடையே பகிர்ந்துகொள்வோம்.
வெறும் 100 ரூபாய்க்கு எனக்கு 20-க்கும் மேற்பட்ட எச்.டி. வீடியோ கிளிப்கள் கிடைக்கும்” என்கிறார். ‘குரூப் ஸ்டடி’ போல விகாஸ் நண்பர் குழு (இதில் பெண்களும் உண்டு என்று சொன்னோமே!) வாரம் ஒருமுறை கூடி ஒன்றாக ஆபாசக் காட்சிகளைப் பார்த்து ரசிப்பதும் உண்டாம்.
சில மாணவர்கள், தாங்கள் வாடிக்கையாளர்களாக உள்ள கடைகளுக்கே தங்களுக்குக் கிடைக்கும் புதிய வீடியோ கிளிப்களை அளித்து உதவி செய்வதும் உண்டாம். இதில் இன்னொரு பக்கமும் உண்டு. தற்போது பலரும் தங்கள் செல்போனே தங்களுக்கு வசதி என்று இறங்கிவிட்டதால், ஆபாச சி.டி., டி.வி.டி. விற்பனை செய்வோர் அடிவாங்கிக் கிடக்கிறார்கள்.
அவர்களுக்கு 20 சதவீதம் அளவுக்கு ‘பிசினஸ்’ பாதித்திருக்கிறதாம். ”சற்று வயதான பெண்கள் சிலர் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கிவிட்டு, கேட்கிற காசை கொடுத்து சி.டி. வாங்குவார்கள். அதன் கவரை அவசரமாகக் கிழித்தெறிந்துவிட்டு தங்கள் ஹாண்ட் பேகுக்குள் திணித்துக் கொண்டு அவசரமாக நகர்வார்கள்.
அதெல்லாம் பழைய காலமாகிவிட்டன” என்கிறார் ஒரு திருட்டு சி.டி. விற்பனையாளர். இளசுகள் இயல்பாகவே இந்த ஆபாச அலையில் அடித்துச் செல் லப்படுகிறார்கள் என்றால், நடுத்தர வயதினர், பெரியவர்களும் பலரும் ஒரு ‘ரிலாக்ஸாக்காக’ ஆபாசப் படம் பார்ப்பதாகக் கூறுகிறார்கள்.
அலுவலக வேலை நெருக்கடியில் இருந்து ஆறுதல் அளிப்பது இதுபோன்ற படங்கள்தான் என்கிறார் ஒருவர்.
வெளியே பட்டவர்த்தனமாகத் தெரியாவிட்டாலும் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் பாய்ந்திருக்கும் ஆபாச அலைக்கு அணை போட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. பெண்கள் மீதான எல்லை மீறல், பாலியல் வல்லுறவு போன்றவற்றுக்கு எல்லாம் இதுபோன்ற காட்சிகளே தூண்டுதல் ஆகின்றன என்பது அவர்களின் கவலை.
அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது!
மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்!
Read More »

கஜினி முகம்மத் கொள்ளை அடிக்க வந்தவர் இல்லை! மாறாக கொள்ளை தடுக்க வந்தவர்!!





மறைக்கப்பட்ட வரலாறு ----------- ஆதாரத்துடன்

இந்திய வரலாற்றில் ஆரியர்களால் எழுதப்பட்ட கட்டுக்கதையான கஜினி முகம்மது இந்தியாவை கொள்ளை அடித்தார். சோமநாதர் ஆலயத்தை தாக்கி அங்குள்ள செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்தார் என்ற வரலாற்றுத்திரிப்பின் மூலம் இந்துக்களின் மனதில் முஸ்லிம்களை வெறுக்கும் மனப்பான்மையை உருவாக்கிய ஆரிய மாயை யின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவம் ஆதாரங்களுடன்

இது chach Nama http://en.wikipedia.org/wiki/Chach_Nama என்ற வரலாற்று நூலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது

இந்த போர் கொள்ளையடிக்க நிகழ்ந்த போர் இல்லை கொள்ளையர்களை அழிக்க நடந்த யுத்தம்

வரலாற்றுக்கு வருவோம் in 661-712AD காலகட்டத்தில் சிந்து பகுதியை ஆண்ட பிராமண அரசன் ராஜா தாகிர்https://en.wikipedia.org/wiki/Dahir_(Raja) இவனது முக்கிய தொழில் கடற்கொள்ளை . இவன் அரபுகளின் கடல் வாணிப வழிகளில் இந்த தாக்குதல் தொடர்ந்தது இது kutch ,Debal today karchi and kathiyavar தளங்களில் இருந்து தொடர்ச்சியாக நடந்தது இறுதியாக இலங்கையிலிருந்து அரபு நாடு சென்ற கப்பலை தாக்கி அதில் இருந்த பரிசுப்பொருட்களை கொள்ளை அடித்ததோடு மட்டுமல்லாமல் புனித யாத்திரை சென்ற பெண்களை மானபங்கப்படுத்தினான்.

https://en.wikipedia.org/wiki/Muhammad_bin_Qasim
According to history writer Mr. BERZIN , Umayyad interest in the sindh region occurred because of attacks from Sindh Raja Dahir on ships of Muslims and their imprisonment of Muslim men and women.

According to historian Mr. Wink, Umayyad interest in the region was galvanized by the operation of the Meds and others.[2] Meds (a tribe of Scythians living in Sindh) had pirated upon Sassanid shipping in the past, from the mouth of the Tigris to the Sri Lankan coast, in their bawarij and now were able to prey on Arab shipping from their bases at Kutch, Debal and Kathiawar

அப்போது ஈராக்கின் கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவர்கள் ராஜா தாகிர் மன்னனுக்கு கடிதம் எழுதி புனித பயணம் சென்ற பெண்களை விடுவிக்கவும் கொள்ளையடித்த செல்வங்களை திரும்ப ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்தார் ஆனால் கடற்கொள்ளையனான அந்த புஷ்கரண பிராமண மன்னன் அதற்கு மறுக்கவே muhamed bin Quasim (கஜினி முகம்மது ) தலைமையில் 6000 சிரியர்கள் கொண்ட காலாட்படை சிந்து பகுதியிலிருந்தும்ம ற்றும் ஈரானில் இருந்து 5 கப்பல்படையணிகள் debel இன்றைய கராச்சி துறைமுகத்தையும் தாக்கியது .இது நடந்தது கிபி 710 இல்

முகம்மது பின் காசிமின் படை சிந்து ந்திக்ககரையில் அணிவகுத்து நின்ற தாகி அரசனின் படைகளுடன் தொடர் தாக்குதல் நடத்தியது இருதியாக ராஜா தாகிர் கொல்லப்பட்டான் அவனால் கொள்ளை அடித்து சோமநாதர் ஆலயத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்வங்களை மீட்டு இஸ்லாமிய ஆட்சியை நிறுவி yazid ibn al -muhallab அவர்களை fars, kirman ,makran and Sindh பகுதிகளுக்கு கவர்னராக நியமித்தார்

இது தான் உண்மை யான வரலாறு கடற்கொள்ளை யடித்து ஆலயத்தினுள் மறைத்து வைக்கப்படிருந்த செல்வங்களை மீட்ட சம்பவத்தை ஆலயத்தை கொள்ளையடித்ததாக திரித்து எழுதி விட்டனர் இந்த டவுசர் கூட்டம்!!!!

நன்றி > Vaheed Mohamed
Read More »

'மாத்யமம்’ ஒரு இஸ்லாமிய நடுநிலைப் பத்திரிக்கையின் வெற்றிப் பயணம்.


* 1991- இல் கோழிக்கோட்டில் துவக்கப்பட்ட ‘மாத்யமம்’ எனும் மலையாள நாளேடு கேரளாவில் ஏழு இடங்கள் உட்பட பெங்களூர், பஹ்ரைன்,கத்தார், துபை, குவைத் என 13 இடங்களிலிருந்து வெளிவருகிறது

* நூறாண்டுகளாக வெளிவரும் மலையாள மனோரமா, மாத்ருபூமி ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது மாத்யமம்.

* வாசகர்களில் 15 -20 விழக்காட்டினர் முஸ்லிம் அல்லாதவர்கள்.

* உண்மைச் செய்திகளை வெளியிடும் நம்பகமான நாளேடு என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

* சிறந்த தலையங்கத்திற்கான பரிசைப் பெற்றுள்ளது.

* தொடர்ந்து ஐந்து வருடங்களாக சிறந்த வடிவமைப் புக்கான (லே- அவுட்) விருதை பெற்றுள்ளது.

* ஆபாசம், மது, புகை, சினிமா, ஏமாற்று மற்றும் சந்தேகத்திற்குரிய தொழில்கள் பற்றிய விளம்பரங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

* சிறுபான்மையினர், தலித்துகள், சுற்றுப்புறச் சூழல், சமூகக் கொடுமைகள் பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் வெளியிடப்படுகின்றன.

* மக்களை ஏமாற்றும் தொழில் நிறுவனங்களை மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளது. ( எ.கா. தேக்குமர விளம்பர திட்ட மோசடிகள்,கோகோலா நிறுவன மோசடிகள்)

* மக்கள் கருத்தை உருவாக்குவதிலும் அரசின் கொள்கைகளை உருவாக்குவதிலும் பங்களிப்பு செய்துள்ளது.

இந்த நாளிதழின் வருகைக்குப்பின் கேரளாவில் முஸ்லிம்கள் பற்றிய அவதூறான செய்திகள்,இஸ்லாம் பற்றிய தவறான செய்திகள் வெளியிடப்படுவது பெருமளவில் நிறுத்தப்பட்டிருக்கிறது. மாறாக, இஸ்லாம் பற்றிய சரியான கண்ணோட்டம் வளர்ந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

Read More »

மேற்கத்திய கழிப்பறை-எச்சரிக்கையாகவும் இருக்க!

சில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர் இந்தியர்கள் வந்துள்ளனர். கம்பெனி டாய்லட்டில் அவர்கள் புரியும் அழிச்சாட்டியத்தின் தாக்கம்தான் இந்த பதிவு..! இந்த பதிவை முதலில் எழுதலாமா... வேண்டாமா... என்றுதான் தோன்றியது. காரணம், இதில் உள்ள விஷயம் சிலருக்கு சற்று அருவருப்பாக இருக்கலாம். சிலருக்கு மிக அவசியமான அறிவுரையாக இருக்கலாம். அத்தவறை செய்யும் சிலருக்கு எச்சரிக்கையாகவும் இருக்கலாம். இன்னும் சிலருக்கு இந்த விஷயம் தொடர்பாக நான் இங்கே பகிரும் படம் பார்க்க பயங்கரமாகவும் கொடூரமாகவும் இருக்கலாம். ஆனாலும், அவசியம் எழுதியாக வேண்டும் என்று இறுதியில் முடிவு எடுத்தேன். பதிவில் ஆங்காங்கே சிகப்பில் உள்ளவற்றை நினைவில் கொள்ளுங்கள் சகோ..!
.
எனது சிறுவயதில் 'பாம்பே டாய்லட் சிங்க்' என்று தரையோடு பதிக்கப்பட்ட கழிவறை பீங்கான் பேசின் பிரபலமானது. ஆனால், அதில் வயதானவர்கள் குறிப்பாக முழங்கால் வலி உள்ளவர்கள் குத்தவச்சு உட்கார்ந்து எழுவது சிரமமாக இருக்கவே, தொடர்ந்து 'சிட்டிங் டாய்லட்' அல்லது மேற்கத்திய கழிப்பறை பீங்கான் பேசின் பிரபலம் ஆனது. ஏதோ வசதியாக வரவேற்பறை நாற்காலியில் அமர்வது போல அமர்ந்து கொள்ளலாம்..! முழங்கால் வலி பிரச்சினை இல்லை. நீண்ட நேரம் அமர்வதும் அதன் சிரமமும் இனி ஒரு பொருட்டல்ல என்றானது.
.
இப்படி ஒரு சொகுசு (!?) சிட்டிங் டாய்லட் வந்த பிறகுதான்... 'போனோமா-வந்தோமா' என்றில்லாமல்......, வாக்மேன், வாரப்பத்திரிக்கை, தினசரிகள், ஆஃபீஸ்ஃபைல், மியுசிக் கீபோர்ட், லேப்டாப் சகிதம் எல்லாம் டாய்லட்டுக்குள் நேரம் கடத்தவென்றே 'சுற்றுலா' செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது..! காரணம், எந்த தொந்தரவும் எவர் சப்தமும் இல்லாமல் தனியாக அமர்ந்து தன் சிந்தனைக்குதிரையை செவ்வனே செலுத்த முடிகிறதாம்..! கொடுமை..!
.
ஆனால், இந்த கூத்தெல்லாம் அரங்கேறும் இடம் வீட்டில் சுத்தமாக உள்ள அல்லது ஸ்டார் ஹோட்டல் ரூமில் உள்ள சுத்தமான சிட்டிங் டாய்லட்டில் மட்டும்தான். மற்றபடி அலுவலகம், கல்லூரி, இரயில், மற்றும் பொதுக்கழிப்பிடங்களில் உள்ள சிட்டிங் டாய்லட் என்றால் அதில் உட்கார நமக்கு மனமே வராது எவருக்கும்..!
.
காரணம், அதை பெரும்பான்மையோர் முறையாக உபயோகிப்பது இல்லை. முக்கியமாக, பீங்கான் மீதுள்ள பிளாஸ்டிக் சிட்டிங் கவரை சுத்தமாக வைத்திருப்பது கிடையாது..! சிலர் சிறுநீர் கழிக்க மட்டும் டாய்லட்டை உபயோகிப்பவர்கள், சீட் கவரை மேலே தூக்கி நீர் தொட்டியுடன் சாய்த்து நிறுத்தி வைத்து விட்டு, அதன்பின்னர் தன் இயற்கை தேவையை நிறைவேற்றும் பொறுமை அல்லது பழக்கம் கிடையவே கிடையாது. நின்றுகொண்டே... அப்படியே போய்... அந்த சீட் கவரை நாஸ்தி பண்ணிவிடுவர்.

சரி.... இதை, 'அடக்கி வைத்த அவசரம்' என்று எடுத்துக்கொண்டால் கூட, "தன் தவறுதானே..? தான்தானே தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வரவேண்டும்..? அடுத்தவர் வந்து இதில் எப்படிஅமர்வார்..?" என்ற லஜ்ஜையோ, பொதுநலமோ, வீட்டில் உள்ள பொறுப்புணர்வோ ஏதுமே வெளியே மட்டும் சுத்தமாக வராது. அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்..! இதுபோல செல்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும்..!
.
குர்ஆன் 2:222 ....(நபியே) "திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்" எனக்கூறுவீராக..!

இதனால் என்னாவாகும்..? அடுத்து, 'மலம் கழிக்க வேண்டும்' என்று வருபவர், இந்த பிளாஸ்டிக் சீட்டிங்கின் மேல் இருக்கும் மஞ்சள் சிறுநீரை பார்த்தவுடன் சுத்தமாக அவருக்கு அதில் உட்கார வேண்டும் என்ற எண்ணம் வருமா..? கழுவி விட்டு உட்கார வேண்டும். ஆனால், 'எவனோ செய்த அசிங்கத்தை எதற்கு தான் கழுவ வேண்டும்' என்ற எண்ணம் மேலோங்கும்.
.
இங்கே ஒரு ஐடியா:- இதுபோல பொது கழிப்பிடம் போகும்போது, பிளாஸ்டிக் சீட்டிங் கவர் (இருந்தால், அதன்) மீது தண்ணீர் ஊற்றிவிட்டு, கையோடு டிஷ்யூ பேப்பர் அல்லது ஏதாவது பழைய தினசரி பேப்பர் கொண்டு சென்று அதை நீளவாக்கில் இரண்டாக கிழித்து, தொடை படும்இடங்களில் பிளாஸ்டிக் சீட்டிங் மீது பேப்பரை ' \ / ' வைத்து அமரலாம்..! இதை பலர் செய்வதில்லை. ஆனால், வயிற்றை கலக்கும் அவசரம். என்ன செய்ய..?
.
இன்னும் சில பொது டாய்லட்டுகளில் அந்த பிளாஸ்டிக் சீட்டிங்கே இருக்காது..!?! (இருந்திருந்தாலும்....) இப்போதுதான் அந்த பயங்கர செயலை செய்வர். அதாவது செருப்பு அல்லது ஷூ காலுடன் ஏறி அந்த பிளாஸ்டிக் சீட் மேலோ அல்லது அதை தள்ளிவிட்டு பீங்கான் மீதோ அமர்ந்து, அந்த சிட்டிங் டாய்லட்டை அந்தக்கால 'பாம்பே டாய்லட் சின்க்' போல பாவித்து உபயோகப்படுத்திவிட்டு சென்று விடுவார்..! இதுதான் முற்றிலும் தவறு மற்றும் ஆபத்து..!
.
"சுத்தம் ஈமானில் பாதியாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ மாலிக் அல் அஷ்அரீ (ரலி); நூல் : சஹீ ஹ் முஸ்லிம் (328)

அந்த அவரை தொடர்ந்து அடுத்து உள்ளே செல்வோர், சீட்டிங்கின் மீது செருப்பு / ஷூ அச்சுடன் சேர்ந்த சகதி மண் என எல்லாம் இருப்பதை கண்டு, முகம் சுளித்து அவரும் அதேபோலவே...! இதுபோல இனி அந்த பிளாஸ்டிக் சீட்டிங் மீது அமர்வதை இனி வருவோர் அனைவருமே தவிர்த்து விடுவர்..!
.
இங்கேதான் ஆபத்து காத்து இருக்கிறது. பதிவின் நோக்கமே இதை சொல்வதுதான்..!
.
இதுபோன்ற பீங்கான் தொட்டிகள் அடியில் குறுகலாகவும் மேற்புறம் அகன்றும் செய்யப்பட்டுள்ளது. காலை தரையில் வைத்து அமர்வதால் நம் உடல் எடை அதிக லோடை பீங்கானின் மீது தருவதில்லை. எடை கால்வரை பரவி சென்றுவிடுகிறது. ஆனால், சீட்டிங் மேலே ஏறி அமரும்போது எடை பீங்கானின் மீது மட்டுமே கூடுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு கால்களும் இரண்டு பக்கம் நோக்கி வெளிப்பக்கமாக விசை கொடுத்து உந்தித்தள்ளுவதால், என்னதான் முதல் தரம் கூடிய பிராண்ட் ஆயினும் நாளடைவில் அந்த பீங்கான் பலம் குன்றி போயிருந்தாலோஅல்லது கரடுமுரடான சுத்தப்படுத்தும் கருவிகளால் எங்கேனும் இடிபட்டு சிறு விரிசல் விட்டு இருந்தாலோ, அதன் மீது உட்கார்ந்து இருப்பவர் எடை அல்லது அன்று அவரின் விதி... காரணமாக எந்நேரமும் அந்த பீங்கான் இருதுண்டாக... அல்லது பலதுண்டாக இப்படி உடையலாம்..!
.

.
அப்படி உடையும்போது அதன் சில்லுகள் மீது எசகுபிசகாக கால்கள் பரப்பி விழும் நபருக்கு எந்த அளவுக்கு ஆபத்து ஏற்படும் என்று நம்மால் எண்ணிப்பார்க்கவே முடியாது. ஒரு காயம் கூட இன்றியும் தப்பலாம். அல்லது உயிரே போகும் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போயும் விடக்கூடும். அப்படி ஒருவருக்கு நடந்த விபத்தை அடுத்து ஒரு ஃபோட்டோவில் பாருங்கள்..! சிட்டிங் டாய்லட் பீங்கான் மீது ஒருவர் ஏறி நின்றமர்ந்து, வெயிட் தாங்காமல் அது உடைந்து... உடைந்த கூர்மையான பீங்கான் பாகங்கள் உடலை குத்தி கிழித்து... :-O காணசகிக்கலை..!

நன்றி : சகோதரர் - ஆஷிக் அஹமத்
Read More »

குகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்! (மறைக்கபட்ட உண்மைகள் )


'முகம்மதே! அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்' என்று நீர் நினைக்கிறீரா?'

குர்ஆன் 18 : 9

இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகை மற்றும் ஏட்டுக்குரியவர்கள், சுவடிக்கு உரியவர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. 'அந்த ஏடு ' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப் பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'அந்த ஏட்டுக்குரியவர்கள்' என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும் அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் 'அந்த ஏடு' என்று முக்கியத்துவப் படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.

'சாவுக் கடல் சாசனச் சுருள்கள்' என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பிபிசி யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அதில் சொல்லப் பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளி பரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. அதன் விபரங்கள்

1947 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக் கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி 'கும்ரான் மலைப் பகுதி' என்று அழைக்கப் படுகிறது. ஆட்டுக் குட்டியை தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப் பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன் படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப் பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.

ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப் பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும் முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.

அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹூசைன், அந்தச் சாசன சுருள்கள் முஸ்லிம்,யூத,கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப் பட்டு அவை ஆராயப் பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள் அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர்.கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை.

இடைப்பட்ட அய்ந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.

1952 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன.பதினைந்தாயிரம்Manuscripts (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.

கடந்த அய்ம்பதாண்டுகளுக்கு மேல் அந்தச் சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப் பட்டு வந்தது.

இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன.இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.

தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை Microfilm (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.

அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.

1990 ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக அய்ஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப் பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்குஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டவர்.

இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணியப் போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.

அவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்கு மூலம் அளிக்கின்றார். இத்தனைக் காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவிக் கொண்டுஅந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய100 Manuscripts (கையெழுத்துப் பிரதி) களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகிறார்.

மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக் காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகிறது.

கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப் படும் மதச் சடங்குகளும் வழிபாடுகளும் ஆரம்ப கிறிஸ்தவர்களிடையே நடை பெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.

இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் 'பவுல்' என்பவரால் பிற் காலத்தில் ஏற்படுத்தப் பட்டவை. மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப் படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலை முறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.

மேற்கண்டவாறு அறிஞர் அய்ஸ்மேன் கூறி வரும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, “It confirms Quran” அது குர்ஆனை உறுதிப் படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப் பட்டு மறு காட்சி காட்டப் படுகிறது.

இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது “It confirms Islam” அது இஸ்லாத்தை உறுதிப் படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப் படுகின்றது.

ஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப் படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை. அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

ஏசு அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.

ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள்தான் புதிய ஏற்பாடு.

பைபிளின் பல இடங்களில் ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை ஏசு பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது. எந்த இறை வேதத்தை கிறித்தவர்கள் மறைத்தார்களோ அதைத்தான் ஏசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.

'குர்ஆனை ஒத்திருக்கிறது' என்பது தான் ஆந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.

'இஞ்சீல்' எனும் வேதத்தைத் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. அந்த ஏடுகளை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப் படுத்துகின்றது.

மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப் படுத்துகின்றது.

ஜசகல்லாஹ் கைர் : ஜெய்னுல்லாபுதீன் & சுவனப்பிரியன்
Read More »

உண்மையை உணர மறுக்கும் உலகம் !

மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான். (அல்குர் ஆன் 18 : 54)
இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார். அதில் நேரான சட்டங்கள் உள்ளன.
( அல்குர் ஆன் 98 : 2,3)
சமீபகாலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாகி வருவதையும், பெண்கள் கற்பழிப்பு மற்றும் பலவித தொந்தரவுகளுக்கு ஆளாவதையும் செய்தித்தாள்கள் வழியாகவும், தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் வழியாகவும் அறிந்து வருகின்றோம்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பதற்கும், இருக்க இருக்க இத்தகைய குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும் அவர்கள் அணியக்கூடிய கவர்ச்சியான ஆடைகள்தான் 99சதவீதம் காரணம் என்பதை அறிவுள்ள யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் இந்த உண்மையை ஆட்சியாளர்களும், அறிவுஜீவிகளும், பெண்ணுரிமை பேசக்கூடியவர்களும் உணர மறுப்பதுதான் வேதனையிலும் வேதனை.
பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்குரிய காரணங்களை தற்போதுதான் மிகமிக தாமதமாக காலம் கடந்துவிட்ட பிறகு மெல்ல மெல்ல ஒவ்வொரு தரப்பினராக உணரத்துவங்கியுள்ளனர்.
இந்திய நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் பர்தா அணிய மதுரை ஆதினம் வேண்டுகோள் :
கடந்த 29.12.12 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு மதுரை ஆதினமாக உள்ள அருணகிரி நாதர் ஒரு பேட்டியளித்தார். அவர் அந்த பேட்டியில், “இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகாமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால், ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப வேண்டுமென்றால் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும். அப்பொழுதுதான் பாலியல் குற்றங்களை குறைக்க முடியும் என்று கூறியுள்ளார்
பெண்களது அரைகுறையான கவர்ச்சி ஆடைகள்தான் ஆண்களை தவறு செய்யத்தூண்டுகின்றது என்ற உண்மையை மதுரை ஆதினம் கூறி அதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வுதான் சரியானது என்று கூறியதுதான் தாமதம். உடனடியாக ஆதினம் கூறிய இந்தக் கருத்தைக் கண்டித்து மதுரையில் கடந்த 30.12.12 அன்று மதுரை ஆதின மடத்தை பெண்கள் அமைப்புகள் முற்றுகையிட்டு அந்த அமைப்பைச் சேர்ந்த 50 பேர் கைதாகியுள்ளனர்.
நான் சொன்னது சரிதான் : மதுரை ஆதினம்
தமிழகப் பெண்கள் ஆபாச உடை அணிவதாகவும் அனைவரும் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தாம் பேசியது சரியே என்றும் பெண்கள் அமைப்பிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றும், “நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மூலக்காரணியை களைவதுதான் மூளையுள்ள மனிதனின் செயல்:
ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு மூலக்காரணி என்ன என்று ஆராய்ந்து அந்த மூலக்காரணியை களைவதுதான் அந்தப் பிரச்சனைக்கு தீர்வாக அமையும். இதுதான் அறிவுடையோர் செய்யக்கூடிய செயல். அதைவிட்டுவிட்டு அந்த பிரச்சனைக்குரிய காரணங்களை களையாமல், பிரச்சனையை வளர்க்கக் கூடிய வேலைகளைச் செய்துவிட்டு அந்த பிரச்சனையும் தீர வேண்டும் என்று எந்த ஒரு அறிவாளியும் சொல்லமாட்டான். இதுபோலத்தான் இவர்களது நிலை தற்போது உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடியவர்கள் அந்த கொடுமைகள் நிகழத் தூண்டுகோலாக இருக்கக்கூடிய பெண்களின் கவர்ச்சியான ஆடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்காமல், நாங்கள் எங்கள் விருப்பப்படி அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு மானங்கெட்டு, வெட்கங்கெட்டு திரிவோம். அதை நீ ஏன் பார்க்கிறாய்? என்று கேட்பார்களேயானால், ஓடும் ரயிலிலும், பேருந்திலும் நடக்கும் கற்பழிப்புக் கொடுமைகளும், பாலியல் வன்முறைகளும் தொடரத்தான் செய்யும்.
ஆடை கட்டுப்பாடு என்பது பெண்களுக்கு எதிரானதா?:
பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு என்பது அவசியம் என்று இஸ்லாம் கூறுவதை பெண்களுக்கு எதிரான சுதந்திரத்தில் தலையிடுவதாக பெண் அமைப்புகள் நினைப்பதுதான் இதுபோன்ற போராட்டங்களுக்குக் காரணம். ஆனால் இவ்வாறு தங்களது உடலை மறைத்து ஆடைகளை அணிந்து பெண்கள் வெளியே செல்ல வேண்டும் என்று நாம் பெண்களிடத்தில் சொல்வது அவர்களது சுதந்திரத்தை பறித்ததாக ஆகாது என்பதை அவர்கள் உணர மறுக்கின்றார்கள்.
ஓடும் ரயிலில் பெட்ரோல் கொண்டு சென்றால் என்னவாகும்?:
ஓடும் ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது; அவ்வாறு மீறி கொண்டு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவிப்புச் செய்துள்ளது. இது எனது உரிமையையும், சுதந்திரத்தையும் பறிப்பதாக உள்ளது. நான் என் விருப்பத்திற்கு 10 லிட்டர் பெட்ரோலை கேனில் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஆனால் எனது சுதந்திரத்தை ரயில்வே நிர்வாகம் பறிக்கப்பார்க்கிறது என்று சொல்லி ரயில்வே துறையை எவனாவது முற்றுகையிட்டால் அவனை நாம் என்ன சொல்வோம்? இப்படி ஒரு வாதத்தை மூளையுள்ள எந்த ஓர் அறிவாளியாவது வைப்பானா?
நாம் ரயிலில் பயணிக்கும் போது பெட்ரோலை கொண்டு சென்று தீப்பிடித்து எரியுமானால் அதில் நாம் அனைவரும் எரிந்து சாம்பலாகி விடுவோம்; அதை தவிர்க்க வேண்டும்; நம் உயிரும் உடமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சொல்லப்படும் வழிகாட்டுதல்தான் அது என்று அந்த அறிவிப்பை நாம் எப்படி எடுத்துக் கொள்கின்றோமோ அதுபோல இந்த விஷயத்தை பெண் அமைப்புகளும், பெண் சுதந்திரம் பேசக்கூடியவர்களும் எடுத்துக்கொண்டு சிந்திக்க மறுப்பதுதான் பிரச்சனைக்கு காரணம்.
ஓடும் ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது; அவ்வாறு மீறி கொண்டு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சொல்வது எப்படி நமது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டாக எழாதோ, அதுபோல பெண்கள் தங்களது கற்பை காத்துக் கொள்வதற்காக தங்கள் உடலை மறைக்கச் சொல்லி சொல்வதும் அவர்களது சுதந்திரத்தை பறிப்பதாக ஆகாது என்ற உண்மையை அவர்கள் உணர மறுக்கின்றனர்.
ஆபாச உடையணிந்து யாரேனும் சாலையில் சென்றால் ரோட்டில் செல்லக்கூடியவர்களது கண்கள் எல்லாம் எங்கு மேய்கின்றன என்பது மாதர் சங்கங்களுக்குத் தெரியாமல் இல்லை. அதனால்தான் ஆபாச சினிமா பட போஸ்டர்களில் தொப்புள் தெரிவது போல உள்ள பெண்களின் போட்டோக்களை இந்த மாதர் சங்கப் பெண்மணிகள் தார் பூசி அழிக்கும் வேலையை ஆங்காங்கே செய்து வருகின்றார்கள்.
இந்த மாதர் சங்க பெண்களிடம் சில கேள்விகளை முன் வைக்கின்றோம்:
?கண்ட மாதிரி பெண்கள் ஆடை அணிந்து செல்வது தவறல்ல; அது அவர்களது சுதந்திரம் என்று சொல்லக்கூடிய நீங்கள் ஆபாச சினிமா பட போஸ்டர்களை தார் பூசி அழிப்பது ஏன்?
?பெண்கள் தங்களது உடலை தங்கள் இஷ்டத்திற்கு திறந்து போட்டுக் கொண்டு திரிவதுதான் பெண் சுதந்திரம் என்றால், நீங்கள் சொல்லக்கூடிய அந்த ஒரிஜினல்(?) சுதந்திரத்தை அந்த ஆபாசப் படங்களில் நடித்த பெண்மணிகளுக்கு நீங்கள் வழங்கமாட்டீர்களா?
?பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று சொன்னதற்காக மதுரை ஆதின மடத்தை முற்றுகையிடுகின்றீர்களே! அப்படியானால் இஷ்டத்திற்கு பெண்கள் தங்கள் உடலை திறந்து போட்டு அலைய வேண்டும் என்று சொல்ல வருகின்றீர்களா?
?அப்படி இஷ்டத்திற்கு திறந்து போட்டுக் கொண்டு பெண்கள் அலையலாம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்களது மகளையோ, அல்லது உங்களது வீட்டுப் பெண்களையோ அப்படி அரைகுறை ஆடையோடு ஊரில் அலையவிட்டு ஊரில் உள்ள ஆண்களெல்லாம் அவர்களை ரசிப்பதற்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா?
மேற்கண்ட கேள்விகளுக்கு மாதர் சங்கங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். பெண்களது அரைகுறை ஆடைகள்தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என்ற உண்மை கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனுடைய வெளிப்பாடுதான் மதுரை ஆதினத்தின் பேச்சு.
உண்மையை எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் அது ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். பெண்கள் தங்களையும், தங்களது கற்பையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் தங்களது உடல் அழகை பிற அந்நிய ஆண்களிடமிருந்து மூடி மறைக்க வேண்டும் என்பதுதான் உண்மை. அந்த உண்மை தற்போது மதுரை ஆதினம் போன்றவர்களின்வாயிலிருந்து வெளிப்படுகின்றது என்பதுதான் மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை. மாதர் சங்க நிர்வாகிகளே இதில் பாதிக்கப்படுவார்களேயானால் அவர்களும் மதுரை ஆதினம் போன்று இஸ்லாம் சொல்லக்கூடிய தீர்வையே தாங்களும் தங்களது கருத்தாக அப்போது வலியுறுத்துவார்கள். கூடிய விரைவில் அவர்களும் இஸ்லாம் கூறிம் இந்தக் கருத்தை வலியுறுத்தக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை.http://www.tntj.net/124856.html
Read More »

பெண்களின் முக்காடு

நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59]



அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் அது கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு 'அஸ்மாவே' நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது' என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்



கீழ்கண்ட கட்டுரையில் வரும் சம்பவங்களும், நபர்களும் உண்மையே அன்றி கற்பனை அல்ல. இக்கட்டுரையில் வரும் சம்பவங்கள், நபர்கள் உங்களை போல் இருந்தால் அதற்கு தாங்களே பொறுப்பு. நாங்கள் அல்ல. நமது சகோதரிகளின் அலட்சியத்தால் அல்லது கவன குறைவால் இது கூட சரியான வார்த்தையாக தோன்றவில்லை. இப்படி கூட நடக்குமா? என்ற எண்ணத்தில் செயல்படுவதால் இப்படி நம்மை எண்ண வைக்கிறது. இதை படித்துவிட்டு சகோதரிகளிடம் இருந்து காரசாரமான அம்பு மழைகளை எதிர்பார்க்கிறோம். நாம் குறை சொல்வது நோக்கமல்ல. நம்மை நாமே பரிசோதனை செய்வதே நோக்கம்.

முக்காடு என்பது தமிழ் பேசும் சகோதரிகளால் பல வண்ணங்களில் துப்பட்டி, அரை துப்பட்டி, முழு துப்பட்டி, கூசாலி துப்பட்டி, புர்கா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு கற்பனையான வடிவம் கொடுத்து அதை அணிவதையே இஸ்லாமிய உடையாக கருதுகிறார்கள். உண்மையில் இஸ்லாமிய உடை என்று ஒன்று இல்லை. அந்தந்த நாடுகளில் சகோதரிகள் அங்குள்ள தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, இறைத் தூதர் சொன்ன வழியில் அணிவதே இஸ்லாமிய உடையாகும். முகம், இரு கைகள் மட்டும் தெரிய மற்ற உடல் உறுப்புகளை மறைப்பது, இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது அனைத்தும் இஸ்லாமிய உடையாகும். அது எந்த வண்ணத்தில், வடிவில் இருந்தாலும் சரியே. இக்கட்டுரையின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் அதே வார்த்தையை பயன்படுத்துகிறோம். உண்மை நிலையை உணர்த்தவே இவ்வாறு அழைக்கிறோம்.

முக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

1.பார்த்தால் முக்காடு

இக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது. யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள். சகோதரிகளே! முக்காடு உங்களுக்கா!? மற்றவர்களுக்கா!? முக்காடு என்பது முஸ்லிம்களின் கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா!? மாற்று மத சகோதரர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க தேவை இல்லையா !!!

2.கிராமிய முக்காடு

முஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை அறியாத அப்பாவிகள். ஏன்!? முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா!?

3.கிழடு கட்டை முக்காடு

இக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம் தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு (!) 'ஹாயாக' போய்க்கொண்டு இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம் பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது!

4.சீருடை முக்காடு (Uniform)

இது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா!?


5.சவுதி முக்காடு



இவர்கள் சவூதி அல்லது மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவார்கள், ஏன்? மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ?



6.ஏர்போர்ட் முக்காடு

இது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள் தங்களது சொந்த வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும். வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும் காரணம்.

இப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம். முக்காடு போடும் பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு, கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஒளிவு மறைவு அற்ற சுதந்திரமாக வாழும் நாடுகளில் ஒழுக்க கேடுகளின் பட்டியலை எழுதினால் அது நீண்டு கொண்டே போகும்.

கல்யாணமில்லா குடும்பங்கள், தகப்பன் இல்லா குழந்தைகள், தகப்பன் பெயர் அல்லா முகமறியாத குழந்தைகள், பாசத்திற்கு அழும் குழந்தைகள், பிஞ்சிலே பழுத்த கிழங்கள், மணமாவதற்கு முன்பே குடும்ப உறவு காதல் பெயரில், முதியோர் இல்லங்கள் இப்படி எத்தனை எத்தனையோ.....

முக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல. தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர தவறிவிட்டோம்.!?

படித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம், பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம். கிறிஸ்துவர்கள் அதிகமாக வாழும் மேலை நாடுகளில் முஸ்லீகள் தாங்கள் மட்டும் முக்காடு அணிந்தால் போதாது தங்களது குழந்தைளுக்கும் பள்ளிக்கூடத்தில் முக்காடு போட அனுமதி வேண்டும் என போராட்டம் செய்கிறார்கள், வாகன உரிமை சான்றிதழில் முக்காடுடன் உள்ள படம்தான் வேண்டும் என அரசாங்கத்தின் மீது வழக்கு போடுகிறார்கள். ஒரு பிரபலமான தமிழ் நடிகை படப்பிடிப்புக்கு வரும்போது தன்னை முழுமையாக மறைத்துக்கொண்டு முக்காடு இட்டு வருகிறாள். ஏன் என்ன காரணம் என கேட்டதற்கு மக்களின் கண்களில் இருந்து தப்பவே என்கிறார் !!!!!!



நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார்.



"உயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான் பட்டு துணியில் சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள்.கற்களையோ ,கூலாங்கற்களையோ அல்ல. இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.அதை உணர்ந்து, நீங்கள் வைரம் என்றால் முக்காடு இடுங்கள். இல்லை..இல்லை... நாங்கள் கூலாங்கற்கள் என்றால்... சகோதரிகளே நீங்கள் வைரமா ??? கூலாங்கற்களா !!!! "


பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கொடை என்று நீ அறியாத வரை அதை போடாதே என சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் உணர்ந்து போடு என்று கூறத்தான் ஆசைப்படுகிறேன்.-http://www.readislam.net/hijab.htm
Read More »

வெளிவரும் உண்மைகள்!நரேந்திர மோடியும் குஜராத்தும்!!

May 16 குஜராத்: 2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

இப்போது, அவர், இந்தியா விலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன.

தமிழின உரிமை பேசும் தோழர்களும் கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.

ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று.

தமிழ்நாட்டில், குருமூர்த்திகளும் சோ இராமசாமிகளும் தீவிரப் பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளருக்கு மோடியை முன்னிறுத்துவதே, இந்தப் பரப்புரையின் உள்நோக்கம்.

இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மோடியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வும் நடந்தது. சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் IPS போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.

கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி.

கொடூரமான குஜராத் இனப் படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி. இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 3500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்.

மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது.

ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்பட வில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவே பதிவு செய்ய மறுத்தது.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சையான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.

இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று மோடி உத்தரவிட்ட தாகவும் கூறினார்.

பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மை களை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி.

பாதிக்கப் பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகை யாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியேவரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.

மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப் பட்டனர்.

மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது! பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.http://www.sinthikkavum.net/2011/05/blog-post_7532.html
Read More »

மோடியின் வண்டவாளத் தண்டவாளத்தில் ஏற்றும் மார்கண்டேயகட்சு!


இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத். அதுவும் மோடியின் தலைமையில்.மோடியை அப்படியே தூக்கி பிரதமர் பதவியில்அமர்த்திவிட்டால் இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து குஜராத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு உண்மையை உடைத்து இருக்கிறார் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் மார்கண்டேய கட்ஜு.
அவர் தனது அறிக்கையில் குறிப்பிடுகையில்,
குஜராத்தில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கிறதா அல்லது இல்லையா என்பதனை நாம் பார்க்க வேண்டும். குஜராத் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மக்களின் வாழ்க்கை தரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, “குஜராத் மிளிர்கிறது” என்று மக்கள் மத்தியில் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி அதில் மோடி வெற்றி பெற்று விட்டார்.
2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தவிர்த்து வேறு என்ன சாதனை புரிந்து உள்ளார். பட்டியல் இதோ,.
குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம். சோமாலியாவில் வெறும் 33% மட்டுமே. இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் குண்டாகி விடும் என்ற அச்சத்தில் பால் சாப்பிடுவதில்லை . எனவே தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என கூறுகிறார். இவையனைத்தும் முட்டாள்தனமான வாதமாகும். குஜராத் குழந்தைகள் தொழிற்சாலைகள், சாலைகள் மின்சாரத்தையா உண்ண முடியும்?
குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 48 ஆக உள்ளது. இந்த மோசமான பட்டியலில் குஜராத் இந்திய அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.
குஜராத்தில் வயது வந்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் உடல் நிறை குறியீட்டு எண்(BMI) 18.5 க்கு கீழே உள்ளனர். இதில் குஜராத் இந்திய அளவில் 7வது இடம் பெற்றுள்ளது.
பேறுகால இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது.
குஜராத்தின் கல்வி, பொது சுகாதாரம், வருவாய் இந்தியாவின் மற்ற 8 மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது. அதாவது குஜராத் 9ஆவது இடத்தில உள்ளது.
குஜராத்தின் கிராமப்புறத்தில் 51% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதில் 57% எஸ்.சி, 49% எஸ்.டி , மற்றும் 42% பொதுப்பிரிவினர் உள்ளனர்.
மோடி குஜராத்தில், பெரும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மின்சாரம் மற்றும் நிலங்களை தந்ததில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன. அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
இந்த உண்மையை கண்டிப்பாக ஒருநாள் குஜராத் மக்கள் உணர்வார்கள்,
என தனது கட்டுரையிலே மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டு உள்ளார்.
தமிழில்.. அஜ்மல்
Read More »

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.
குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.
இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.
இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.
ஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.
இன்னும் சிலர் மாவிலைகளில் “சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்” என்ற திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.
இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.
மேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.
பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)
சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.
தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் பீடை என்பதும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5707, 5717
ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.
கெட்ட நாள் உண்டா?
காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.
தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 54:19)
பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.
இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)
ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.
மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.
உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.
எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.
இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.
உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும் தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.
“ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா
நூல்: புகாரி 4826
எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.
பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)
மாற்று மதக் கலாச்சாரம்
இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.
இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.
(புகாரி 3456)
இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.
மாற்று மதத்தினர் தேரிழுப்பதையும். விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப் பதையும், கந்தூரி கொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர்.
இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.
இதைப் பார்த்துத் தான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதி, அந்த மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடித்து செய்து வருகின்றனர்.
இது போன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றார்கள்.
இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி)
நூல்:திர்மிதி
தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 1560
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்ட நாளாகக் கருதாமல், மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!http://www.tntj.net/9847.html
சஃபர் மாதத்தில் TNTJ வின் அனைத்து கிளைகளிலும் இதை நோட்டிஸாக அடித்து விநியோகம் செய்யவும்.
Read More »

சாமியார்கள்!



Post image for சாமியார்கள்!

நாட்டின் பல பாகங்களிலுருந்தும் போலிச் சாமியர்களைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. துறவறத்தைக் கடை பிடிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்கள் தங்களிடம் வரும் பெண்களையும் ஆசிரமங்களில் தங்கியிருக்கும் பெண்களையும் கற்பழிப்பது சர்வ சாதரணமாகி விட்டது. சாமியார்களின் இழிச் செயல்களினால் பக்தி பகல் வேஷமாகி வருகிறது. அறிவில் குறைந்த அடிமட்ட மனிதர்கள் தங்கள் அறியாமையாலும் சுய சிந்தனையற்ற போக்காலும் இந்தச் சாமியார்களை இறைவனின் பக்தர்களாக அவதாரங்களாக நம்பி மோசம் போகிறார்கள். அரசியவாதிகளோ அடிமட்ட மக்களின் வாக்குகளைக் கவர இந்தச் சாமியார்களின் கால்களில் நெடுஞ்சாண்டையாக விழுகிறார்கள். இந்தச் சாமியார்களிடம் காணப்படும் இழி குணங்கள் இந்த அரசியல்வாதிகளிடமும் உண்டு. இனம் இனத்தோடு சேரும் என்பது போல் அவர்களின் நிலை இருக்கிறது. அது மட்டுமல்ல உலக ஆதாயத்தில் மட்டும் குறியாக இருக்கும் பண முதலைகளும் இந்தச் சாமியார்களை மதிப்பது போல் நடித்து அவர்களைக் கொண்டு உலக ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள்.
சாமியார்கள், அரசியல்வாதிகள், பண முதலைகள் இப்படி ஒரு பெருங்கூட்டமே இறைவனின் பெயரால் பகல் வேஷம் போடுவதால் அதை நிதர்சனமாகப் பார்க்கும் ஓரளவு சிந்தனைத்திறன் பெற்றவர்கள்-தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் மன விரக்தி அடைகிறார்கள். அவர்களுக்கு மக்கள் நலனில் கொஞ்சத்திற்குக் கொஞ்சமாவது அக்கரை இருக்கிறது. எனவே இறைவனின் பெயரால்தானே சாமியார்களும் அரசியல்வாதிகளும் பண முதலைகளும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். எனவே அந்த இறைவனே இல்லை என்று நிலை நாட்டிவிட்டால் சுபிட்சம் தானாகவே வந்துவிடும் என்று தப்புக் கணக்குப் போட்டு மக்களுக்கு அதைப் போதிக்க துணிந்து விட்டார்கள். ஆயினும் அவர்களும் குடி விபச்சாரம் போன்ற் ஈனச் செயல்களின் கெடுதிகளை உணர்வதாக இல்லை. கோடி கோடியாக மக்களை கொள்ளையடித்து சொத்துச் சேர்த்து வைப்பதிலுள்ள கெடுதிகளையும் புரிந்து கொள்ளவில்லை.
இத்தனை கெடுதிகளுக்கும் மூல காரணம் எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம். தங்களை அறிவாளிகள் என்று அலட்டிக் கொள்வோரும், தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் பரிதாப நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களும் ஒரு வகையில் அழிந்து போகும் அற்ப உலகின் பணம், பதவி, சுகங்கள் இவற்றால் ஈர்க்கப்பட்டிருப்பதால், இல்லை மூழ்கி இருப்பதால் அவர்களாலும் உண்மையை உணரமுடியவில்லை. அதனால்தான் அவர்களிடையே இவ்வுலகோடு முடிந்துவிடும் நாஸ்திகம் தலை தூக்குகிறது.
மனிதர்களில் வெவ்வேறு மதத்தினருக்கு வெவ்வேறு கடவுள் என்பது மூட நம்பிக்கையாகும். எல்லா மனிதர்களுக்கும் எல்லா மதத்தினருக்கும் ஒரே இறைவன்தான். அந்த ஒரே இறைவனும் பல மதங்களை மக்களுக்குக் கொடுக்கவில்லை. ஒரே ஒரு வாழ்க்கை நெறியைத்தான் கொடுத்துள்ளான். மனிதர்களே மதப்புரோகிதரர்களே சாமியார்களே தங்கள் சுய நலத்திற்காக வெவ்வேறு மதங்களைக் கற்பனை செய்து மக்களுக்குப் போதித்து வருகிறார்கள். மதங்களில் காணப்படும் “துறவறம்” ஒரே இறைவன் கொடுத்த நல்வழி முறையல்ல. மனிதர்கள் கற்பனை செய்து கொண்டதே; மூடத்தனமே. இதோ ஒரே இறைவனின் இறுதி மறை கூறுகின்றது பாருங்கள்.
ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை  அல்குர்ஆன் 57:27
இந்த இறைவாக்கு தெளிவாக துறவறம் இறைவன் விதித்ததல்ல. மனிதன் தனது அற்ப அறிவால் உண்டாக்கிக் கொண்ட மூடத்தனமே என்பது புரிகின்றது. துறவறம் எப்படி அறிவற்ற செயல் என்பதை ஆராய்வோம்.
ஒருவன் முக்தி பெற துறவறம்தான் வழி என்றால் மனிதர்கள் அனைவரூம் முக்தி பெறுவது சாத்தியாமா? ஒரு துறவி சாமியாரின் தாயும் தந்தையும் முக்தி பெற விரும்பியிருந்தால் இந்த சாமியார் இந்த உலகில் பிறந்திருக்க முடியுமா? அப்படியானால் ஒரு ஆணும் பெண்ணும் (பெற்றோர்) இருவர் முக்தியை இழந்து ஒருவருக்கு முக்தி கிடைப்பதாக இருந்தால் இது நியாயமா? இது இறைவன் கொடுத்த வழியாக இருக்க முடியுமா? துறவறம் மூலம் மனிதர்கள் அனைவரும் முக்தி – இறைவனின் பொருத்தம் பெற முடியுமா? அப்படியே மனிதர்கள் அனைவரும் துறவறம் பூண்டு இறை பொருத்தம் பெற முடிவு பண்ணி விட்டால் அதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பின் இவ்வுலகம் இயங்குமா? இப்படிப்பட்ட வடிகட்டிய மூடத்தனமான துறவறத்தை இறைவன் தன்னை அடையும் வழியாக மனித வர்க்கத்திற்குக் கொடுத்திருக்க முடியுமா? சிந்தியுங்கள்.
பெண்ணைத் துறந்து முக்தியை நாடுகிறவர்கள் அத்துடன் ஊணையும் துறந்து விட்டால் முக்தி- முடிவு உடனடியாக கிடைத்து விடுமே? ஏன் ஊணைத் துறப்பதில்லை? பெண்ணைத் துறப்பதாக நடித்து புகழை அடைவது முடியாது போய்விடும் என்ற அச்சமா? புகழை விரும்பும் இவர்களா துறவிகள்? சாமியார்கள்? அல்லது ஊணை துறப்பதால் சாவு சடுதியாக வந்து விடும்; இது தற்கொலையாகும் என்ற நல்லெண்ணமா? அப்படியானால் ஊணைத் துறந்து தனி மனிதனொருவன் சாவது பாவமென்றால் பெண்ணைத் துறப்பது மனித இனமே சாவதற்கு ஒப்பாகுமே? இது மாபெரும் பாவமில்லையா? முக்தி அனைவரும் பெருவதாக இருந்தால் அனைவரும் துறந்துதானே ஆக வேண்டும். இதிலிருந்து “துறவறம்” படைத்த இறைவன் கொடுத்த நேர்வழி இல்லை என்பது விளங்கவில்லையா?
அது மட்டுமல்ல மதப் புரோகிதரர்களே  சாமியார்களே அவர்களே சுயமாக உண்டாக்கிக் கொண்ட துறவறத்தை அவர்களே முழுமையாக பேணி நடக்கவில்லை என்ற உண்மையையும் அந்த இறைவனே அறியத் தந்துள்ளான். முற்றிலும் துறந்தவனே முனிவன்  சாமியார். இந்த நிலை இந்தச் சாமியார்களிடம் காணப்படுகின்றதா? சாமியார்கள் காட்டில் வாழ வேண்டியவர்கள்; நாட்டில் வாழ்வது துறவறமல்ல. எவ்வித வசதி வாய்ப்பும் இல்லாத குடில்களில் இலை குழைகளைத் தின்று வாழ்க்கையை ஓட்ட வேண்டியவர்கள். அப்படியே தப்பித் தவறி நாட்டிலே வாழ்ந்தாலும் தங்களுக்கென்று எதையும் சேமித்து வைக்காமல் வெறும் ஆட்களாக இருந்து கடும் பசி எடுக்கும்போது மட்டும் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து அரை வயிறு கால் வயிறு சாப்பிட்டு விட்டு தியானத்தில் மூழ்க வேண்டியவர்கள். அடுத்த வேளை உணவுக்கு என்று சேமித்து வைப்பவர்களும், கசக்கி கட்ட ஓருடைத் தவிர வேறுடை வைத்திருப்பவர்களும் சாமியார்களல்ல.
ஒரு சாமியாரை பார்த்த மாத்திரத்தில் அவர் போலிச் சாமியாரா அல்லது உண்மைச் சாமியாரா என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒட்டிய வயிரோடு ஊதினால் விழுந்து விடும் பலகீனமான உடலுடன் காணப்படுபவர்களே உண்மைச் சாமியார்கள். உருண்டு திரண்டு பளபளவென தோற்றமளிப்பவர்கள் போலிச் சாமியார்களே. வெளியே மக்களை ஏமாற்ற குடில் போன்ற தோற்றம்; உள்ளே அரண்மனையில் காணப்படும் வசதிகள்; இவர்கள் சாமியார்களா? வேளா வேளைக்கு அறுசுவை உணவுண்டு தூங்க கொசுவலை கேட்பவர்கள் சாமியார்களா? A.C அறைகளில் வாசம் செய்பவர்கள் சாமியார்களா? எடைக்கு எடை தங்கம் விரும்புபவர்கள் சாமியார்களா? மனிதர்கள் இவற்றையெல்லாம் அனுபவிக்கக் கூடாது என்ற கருத்தில் இதை நாம் சொல்லவில்லை. மனிதர்கள் வரையறைக்குட்பட்டு இவற்றை அனுபவிக்கலாம். ஆனால் முற்றும் துறந்த சாமியார்கள் எப்படி அனுபவிக்க முடியும் என்று தான் கேட்கிறோம்.
அதுமட்டுமல்ல; துறப்பதற்கு எளிதான இவற்றையே இந்தச் சாமியார்கள் துறக்க முடியாமல் திணரும்போது, பெண்ணின்பத்தை எப்படி துறப்பார்கள்? அதுவும் உண்டு கொழுத்துத் தினவெடுக்கும் போது துறக்க முடியுமா? அவர்கள் உண்மைச் சாமியார்களாக திகழ முடியுமா? உலகப் படைப்புகளை இறைவன் மனிதனுக்கு அழகலங்காரங்களாவும் இன்பம் அளிப்பவையாகவும் படைத்துள்ளான். அவற்றை முறைப்படி அனுபவித்துக் கொள்ளவும் அனுமதி தந்துள்ளான். உலக வாழ்க்கை பரிட்சை வாழ்க்கையாக இருப்பதால் உலக சுகங்களில் கவர்ச்சியையும் உடலின்பத்தையும் இறைவன் வைத்துள்ளான். எனவே இயற்காகவே மனிதர்கள் அவற்றால் ஈர்க்கப்படத்தான் செய்கிறார்கள். அவற்றை அளவோடும், முறையோடும் அனுபவிப்பவன் வெற்றி முக்தி பெற முடியும். அவற்றை முற்றிலும் துறப்பதாகச் சொல்பவன் சொல்கிறவன் பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றுகிறான். அதனால் அவனுக்கு இறைவனிடம் அழிவு ஏற்படுகின்றது. அவற்றில் மித மிஞ்சி மூழ்கிறவன் அவற்றாலேயே அழிகிறான். இதுதான் எதார்த்த நிலை.
மனித ஆசாபாசங்களை ஊணாசை, உடையாசை, பெண்ணாசை, மண், பொண்ணாசை, புகழாசை என்று பகுத்துக் காட்டலாம். இவற்றில் ஊணாசை, உடையாசை இவற்றைத் துறந்து பசிக்குப் புசிப்பது, மானத்தை மட்டும் மறைப்பது என்பதை எட்டிய பின்பே பெண்ணாசையைத் துறக்க முடியும். இந்த மூன்றையும் துறந்தவனுக்கே மண் பொண்ணாசையத் துறக்க முடியும். இவை ஐந்தையும் துறந்தவனே புகழாசையைத் துறக்க முடியும். முற்றிலும் துறந்தவர்கள் முனிவர்கள் – சாமியார்கள் என்று சொகிறவர்களை உற்று நோக்குங்கள். உடை ஆசையைத் துறந்திருக்கலாம். சாமியாரைப் போல் வேஷம் தரித்திருக்கலாம். அதுவும் மக்கள் முன்னால் மட்டுமே.
ஊணாசையத் துறந்திருக்கிறார்களா? மண்ணாசையைத் பொன்னாசையத் துறந்திருக்கிறார்களா? ஊணாசை, மண், பொன்னாசையத் துறக்காதவர்கள் பெண்ணாசையைத் துறந்து விட்டதாகச் சொன்னால் அது உண்மையாக இருக்க முடியுமா? முதிர்ந்த வயது இயலாமையின் காரணமாக துறந்திருந்தால் அது தனி விஷயம்.
ஆக இன்றைய சாமியார்கள் மக்களை ஏமாற்றும் ஏமாற்று பேர்வழிகள் என்பதில் துளியேனும் சந்தேகமேயில்லை. விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிருவர் முற்றிலும் துறந்த முனிவர்களாக இருக்கலாம், அவர்களும் முக்தி பெற முடியாது. காரணம் எந்த இறைவனின் பொருத்தத்தை நாடி இவர்களாகத் துறவறத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்களோ அந்த இறைவன் துறவறத்தை அவர்களுக்கு விதிக்கவில்லை என்பதை இறைவனின் இறுதி வேதத்தில் பார்த்தோம். துறவறம் இறைவனால் விதிக்கப்படாத ஒன்று எனவும் அது அறிவுக்கே பொருந்தாத தத்துவம். இருவரை முக்தி இழக்கச் செய்து ஒருவர் முக்தி பெறுவதாகச் சொல்லும் போலித்தத்துவம்.
மேலும் இந்தச் சாமியார்கள் இறையருள் கொண்டு அற்புதங்கள் காட்டுவதாக மக்களை மயக்குவதும் ஒரு ஏமாற்று வித்தைதான். கண்கட்டி வித்தைதான். மோசடிதான். உண்மையிலேயே இறையருள் அவர்களுக்கிருந்தால் சந்தி சிரிக்கும் ஈனச் செயல்களில் ஈடுபட முடியுமா? அந்தோ பரிதாபம்! இவற்றைவிட அதிசயங்களை “மேஜிக்” காட்டுகிறவர்கள் செய்து காட்டும்போது அங்கு பக்தி பரவசம் காட்டாத பாமர மக்கள் இந்த போலிச் சாமியார்களிடம் மயங்குவதுதான் வேதனைக்குறியது.
மனித அறிவைக்கொண்டு மனித முக்திக்கு வழி சொல்ல முடியாது. அந்த வழியை மனிதனைப் படைத்த இறைவனே கற்றுத்தர வேண்டும். அந்த ஒரே இறைவன் காலத்திற்குக் காலம் தன் புறத்திலிருந்து இறைத்தூதர்களை அனுப்பி மனித வாழ்க்கை நெறியை கற்றுத் தந்தான். ஆனால் அந்த இறைத்தூதர்களுக்குப் பின்னால் அவர்களின் பெயரைச் சொல்லி இந்த மதப் புரோகிதரர்கள்தான் தங்கள் சுய நலத்திற்காக இறை கொடுத்த வாழ்க்கை நெறியை பல்வேறு மதங்களாகத் திரித்து விட்டார்கள்.
இறைவன் உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும் பாதுகாக்கப்பட்ட இறுதி வேதத்தை  அல்குர்ஆனை உலக மக்கள் அனைவருக்கும் பொது மறையாகத் தந்து அதன்படி செயல்பட கட்டளையிட்டுள்ளான். அவனது இறுதித் தூதரும் அதன்படி வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்கள்.
ஆனால் இங்கும் மதப்புரோகிதரர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். நாடெங்கும், உலகெங்கும் பரந்து விரிந்து இஸ்லாத்தின் பெயரால் காணப்படும் தர்கா, கொடிமரம், உண்டியல், சடங்குகள் அனைத்தும் இந்த மதப்புரோகிதரர்களால் கற்பனை செய்யப்பட்டவையே. சூபிஸ துறவறமும் மாற்று மத புரோகிதரர்களைக் காப்பியடித்து முஸ்லிம் மதப் புரோகிதரர்கள் உண்டாக்கியவையே. ஆசிரமங்களில், மடங்களில் காணப்படும் காமக்களியாட்டங்கள், போதைக் கூத்துக்கள், ஆசிரமங்களைப் போல் தர்ஹாக்களும் சந்தி சிரிக்கும் காலத்தை எதிர்பார்த்தே இருக்கின்றன.
இறைவனை அடையும் வழிகள் என்று சொல்லப்படும், படைத்த இறைவன் கொடுக்காத வழிகள்  தத்துவங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றிப் பிழைக்க மதவாதிகள் உண்டாக்கும் மாய வலைகளே. மக்களே அவர்களை விட்டும் உஷாராக வேண்டும். உண்மையை நாடும், வெற்றிக் காணத் துடிக்கும் மனித நல விரும்பிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே இறைவனின் இறுதி மறையைப் பற்றிப் பிடித்து, மனித இனத்தை “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற உன்னத நிலைக்கு உயர்த்தப் பாடுபட முன்வர வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.
Read More »

மண் கேட்ட படலம்

Post image for மண் கேட்ட படலம்
அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயீல் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயீலும் தோல்வியோடு திரும்பி சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால்தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.
    ஒரு சில ஏடுகளில் இந்தக் கதை எழுதி வைக்கப்பட்டுள்ளது. பல மேடைகளில் கூறப்படுகின்றது. மலக்குல் மவ்திடம் உயிர் வாங்கும் பொறுப்பை ஒப்படைத்ததற்கு ஏதேனும் ஒரு காரணம் கூறியாக வேண்டும், என்பதற்காக சிலரது கற்பனையில் உதித்த பொய்தான் இந்தக் கதை என்பதை சற்று சிந்தித்தால் எவரும் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே இந்தக்கதை முரணாக அமைந்துள்ளதை நாம் விரிவாக பார்ப்போம்.
    வானங்கள், பூமி,அவற்றில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் ஆணைக்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்கின்றன என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையாகும். பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனித, ஜின் இனங்கள் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்கக்கூடியவர்களாகவும், மறுக்கக்கூடியவர்களாகவும் உள்ளனர். மற்ற படைப்பினங்கள் அனைத்தும் அவனது கட்டளைக்கும் விருப்பத்துக்கும் எதிராக செயல்படுவதில்லை என்பதை முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டுமிருக்கிறோம். திருமறைக் குர் ஆன் இதைத் தெளிவாக விளக்குகின்றது.
    வானமும் பூமியும் அவனது உத்திரவுப்பிரகாரம் நிலைபெற்றிருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும் [அல்குர் ஆன் 30:25]
    என்று அல்லாஹ் கூறுகிறான். அந்த அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய பூமி மறுத்து விட்டதாக இந்தக் கதை அமைந்துள்ளது. வானங்களையும், பூமியையும் படைத்தபின் அவற்றை நோக்கி அல்லாஹ் ஒரு உடன்படிக்கை எடுத்ததை பின்வரும் வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.
    பூமியையும், வானங்களையும் நோக்கி, ‘நீங்கள் விரும்பிய நிலையிலும் விரும்பாத நிலையிலும் (எனது ஆணைக்குக் கட்டுப்பட்டு) வாருங்கள்!’ என்று (அல்லாஹ்) கூறுகிறான், “நாங்கள் (விரும்பி) கட்டுப்பட்டவைகளாக வந்தோம்” என்று அவ்விரண்டும், (வானமும், பூமியும்) கூறின.
    அல்லாஹ் பூமிக்கோ,வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால், அதை அப்படியே பூமியும், வானமும் ஏற்று நடக்கும். அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது என்று மேற்கூறிய குர் ஆன் வசனம் ஐயத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும்போது அதற்கு பூமி எப்படி மறுப்புச் சொல்லி இருக்கும்? இந்தக் கதையை நம்பினால், திருக்குர் ஆனின் வசனத்தை நம்பாத நிலை ஏற்படுமே! இறைவனின் வல்லமையைக் குறைத்து மதிப்பிட்டதாக ஆகுமே!
    எனவே பூமி அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய மறுத்திருக்கும் என்று எந்த முஸ்லிமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
    இந்தக் கதையில், அல்லாஹ், மலக்குகளுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கின்றான். அதற்கு மாற்றமாக பூமி வேரொரு கட்டளையைப் பிறப்பிக்கின்றது. ஜிப்ரீல், மீகாயீல், இஸ்ராபீல் ஆகிய மூவரும்- மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள மூவரும், அல்லாஹ்வின் உத்தரவை விட பூமியின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா? மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது என்றெல்லாம் திருக் குர் ஆன் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
    அவன் எதை ஆணையிடுகிறானோ அதைச் செய்து முடிப்பார்கள். (அல்குர் ஆன்66:6)
    (எதையேனும்) பேசுவதில் அவனை அவர்கள் (மலக்குகள்) முந்த மாட்டார்கள். அவனது ஆணைப்படியே செயலாற்றுவார்கள். (அல்குர் ஆன் 21:27)
    மேற்கூறிய இரண்டு வசனங்களும், வானவர்களைப் பற்றி அல்லாஹ் தருகின்ற நற்சான்று. அவனது உத்திரவை அப்படியே செயல்படுத்திக் காட்டுகின்ற வானவர்கள் – அதிலும் சிறப்புக்குரிய வானவர்கள், அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்?
    அப்படி எல்லாம் இறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள் என்று திருக்குர் ஆன் தெளிவாக்குகின்றதே! அந்தக் குர் ஆன் வசனங்களுக்கும் இந்தக் கதை முரண்படுகின்றது.
    இந்தக் கதையின் கருத்துப்படி அல்லாஹ் மண் எடுத்து வரச் சொன்னது, கீழ்த்தரமான பொருளைப் படைப்பதற்காக அல்லவே! படைப்பினங்களிலேயே மிகச் சிறந்து விளங்குகின்ற, மனித இனத்தைப் படைப்பதற்குத்தான் அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்கிறான்.
    “பூமியில் நான் பிரதிநிதியைப் படைக்கப் போகிறேன்” (அல்குர்ஆன் 2:30) என்று மலக்குகளிடம் அல்லாஹ் கூறுகிறான். மிக உயர்ந்த நோக்கத்திற்காக அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்லி இருக்கும் போது பூமி எப்படி மறுத்திருக்க முடியும்? என்பதையும் தாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
    மண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது.
    அந்தப் பணியை செய்து முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும் அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறிவிட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.
    அற்பமான காரியத்தை செய்து முடிக்க மண் எடுத்து வரச் சொல்லவில்லை.
    மிக உயர்ந்த-சிறந்த நோக்கத்திற்காக அல்லாஹ் மண் எடுத்துவரச் சொல்லி இருந்தும் அது பூமியால் மறுக்கப்படுவதாக இந்தக்கதை குறிப்பிடுகிறது. எந்த வகையில் பார்த்தாலும், இந்தக் கதை சரியானதல்ல. ஒரு முஸ்லிம் நம்பக்கூடாது என்பது ளெிவாகவே தெரிகின்றது. இது போன்ற கதைகளை நம்பினால், இறைவனைப் பற்றியும் அவனது மலக்குகளைப் பற்றியும் தவறாக நம்பிக்கை கொண்டவர்களாவோம். மேலே நாம் எடுத்துக்காட்டிய இறை வசனங்களை நிராகரித்தவர்களாகவும் நாம் ஆக நேரிடும்.
    இந்தக் கதை முழுக்க முழுக்க பொய் என்பதைப் பின்வரும் நபி மொழி தெளிவாக்குகின்றது.
    “பூமியின் எல்லாப் பாகங்களிலிருந்தும் அல்லாஹ்வே கைப்பிடி மண் எடுத்து ஆதமைப் படைத்தான்” (நபிமொழி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுஹிப்பான் அறிவிப்பவர்: அபூமூஸல் அஷரீ(ரழி)
 மண் எடுத்து வரும்படி அல்லாஹ் மலக்குகளுக்கு உத்தரவிடவில்லை. மாறாக அவனே கைப்பிடி மண் எடுத்து ஆதம் (அலை)அவர்களை உருவாக்கினான், என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்கும் போது, இந்தக் கதை பச்சைப் பொய் என்பது தெளிவாகின்றது.
Read More »

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!



பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!
புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம். உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?
அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?
இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.
இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!
முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.
பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.
அது மட்டுமா?
பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.
நடை மவ்லிது, விடி மவ்லிது
நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி ‘பரக்கத்தும் பொருளும்’ குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.
ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,
மாயமந்திரங்கள்
பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.
இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!
போலிகளிடம் ஏமாறாதீர்!
இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?
இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்

மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.
அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்

அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.
பாட்டுக்கச்சேரியும் நடனமும்
கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!
பக்கவாத்தியங்கள்
இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.
பிறந்த நாள் விழாக்கள்
இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி ‘பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா’ என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.
இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.
ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்
நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?
விஞ்ஞானயுகத்தில் கற்காலம்
விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?
இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!
இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?
1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.
இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !
இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?
முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?
இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’
‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,
‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!
இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!
வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,
சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!
இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.
என இன்று வீரசபதம் ஏற்போமாக!
‘இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்’
இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)
 رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்’
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)www.readislam.net/
source  http://albaqavi.com/
Read More »

Back to Home Back to Top tntjmvl