
ஜெய்ப்பூர்: "தனியார் பள்ளிகளில், மாணவிகளுக்கு, குட்டைப் பாவாடையை,
சீருடையாக வைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல்களுக்கு, வழி வகுக்கும்
இதுபோன்ற உடைகளுக்கு, தடை விதிக்க வேண்டும்' என, ராஜஸ்தான் பா.ஜ., -
எம்.எல்.ஏ., பன்வாரி லால் சிங் வலியுறுத்தியுள்ளார்.கடிதம்ராஜஸ்தான்,
அல்வார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., வான, பா.ஜ.,வைச் சேர்ந்த, பன்வாரி லால்
சிங், அம்மாநில தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்:பெரும்பாலான,
தனியார் பள்ளிகளில், மாணவியருக்கான சீருடைகள், சற்றும் பொருத்தமற்றதாக
உள்ளன. "மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வர வேண்டும்' என,
வற்புறுத்துகின்றனர். அத்துடன், குட்டைப் பாவாடையை சீருடையாகவும், பல்வேறு
பள்ளிகளும், அங்கீகரித்துள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும்.மாணவியர்,
குட்டைப் பாவாடை அணிந்து வருவது, பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கும், கேலி,
கிண்டல்களுக்கும், வழி வகுத்து, ஆபத்தை ஏற்படுத்தி விடும்.பள்ளிகளுக்கு
நடந்து செல்லும்போதும், பஸ் ஏறுவதற்காக, பஸ் ஸ்டாப்புகளில்,
காத்திருக்கும்போதும், குட்டைப் பாவாடை அணிந்துள்ள மாணவியர், பலரின், கேலி,
கிண்டல்களுக்கு ஆளாகின்றனர்.ஜெய்ப்பூரை பொறுத்தவரை, பெரும்பாலான
பள்ளிகளின், சீருடை, குட்டைப் பாவாடையாகத் தான் உள்ளது.பெண்களுக்கு எதிரான
குற்றங்கள் அதிகரித்து வரும், தற்போதைய சூழலில், இந்த உடை, சற்றும்
பொருத்தமற்றது. குட்டைப் பாவாடைக்கு பதிலாக, வேறு நல்ல உடையை பரிந்துரைக்க
வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில், பன்வாரி லால் சிங்,
வலியுறுத்தியுள்ளார்.