போராட்டக்காரர்கள் மாணவியரா அல்லது வயதான பெண்களா?

கொல்க்ததாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அபிஜித், பெண் போராட்டக்காரர்கள் டிஸ்கோ கிளப்புகளுக்குப் போய் ஆடுகிறார்கள், அழகாகவும் இருக்கிறார்கள் என்று அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லியில் தற்போது நடந்து வருவதை எகிப்தில் நடந்த போராட்டங்களுடனோ அல்லது உலகின் வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களுடனோ நிச்சயம் ஒப்பிட முடியாது. அது புரட்சி, இது வெறும் போராட்டம். மெழுகுவர்த்தி ஏந்தியபடி போராடட்ம் நடத்துவது, டிஸ்கோ கிளப்புகளுக்குப் போவது - இதையெல்லாம் நாம் மாணவர் பருவத்திலேயே செய்துள்ளோம். ஒவ்வொரு மாணவரும் இதில் ஈடுபட்டிருப்பார்கள். அதையெல்லாம் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது டெல்லியில் பல அழகான இளம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். டிவிகளுக்குப் பேட்டி தருகிறார்கள். கூடவே குழந்தைகளையும் கூட்டி வருகிறார்கள். இவர்கள் மாணவியரா அல்லது வயதான பெண்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என்றார் .

Back to Home Back to Top tntjmvl