எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வெட்டலாம் - காவி பயங்கரவாதி கமலானந்தா

முஸ்லிம்களை கண்ட இடத்தில் கண்டந்துண்டமாக இந்துக்கள் வெட்டி வீழ்த்த வேண்டும், முஸ்லிம்களின் மீது எந்த இடத்திலும் - எந்த நேரத்திலும் இந்துக்கள் தாக்குதல் நடத்தலாம் என பேசிய சுவாமி கமலானந்தா கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டான்.

விசாரணைக்காக ஹைதராபாத்திற்கு கொண்டுவரப்பட்ட கமலானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று போலீஸ் கூறுகிறது,

இந்து கோயில் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் தாம் கமலானந்தா. இம்மாதம் எட்டாம் தேதி ஹைதராபாத்தில் நடந்த பேரணியில் கமலானந்தா வெறுப்பை உமிழும் உரையை நிகழ்த்தியுள்ளார்.

எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸி உணர்ச்சியைத் தூண்டும் உரையை நிகழ்த்தினார் என்று குற்றம் சாட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை இந்துத்துவா சக்திகள் ஏற்பாடுச் செய்திருந்தன. இந்த பேரணியில் உரை நிகழ்த்திய கமலானந்தா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் விஷக்கருத்துக்களை வெளியிட்டார்.

தகவல் : தூது

Back to Home Back to Top tntjmvl