விஸ்வரூபம் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

விஸ்வரூபம் படம் மீதான தடை நீங்குமா நீங்காதா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் சட்டம் ஒழுங்கைக் கருத்தில் கொண்டும், தேச ஒற்றுமை கருதியும், பெரும் பொருட் செலவில் படத்தைத் தயாரித்துள்ளதால் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதாலும், பிரச்சினை குறித்து அரசுடன் பேசுமாறும் நடிகர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து விட்டது. புதுவையிலும் தடை செய்யப்பட்டது.
இந்தத் தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதி்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் ஜனவரி 26ம் தேதி படத்தைப் பார்ப்பதாகவும், 28ம் தேதி வரை படத்திற்குத் தடை நீடிக்கும் என்றும் அறிவித்தார்.
சர்ச்சைக்குரியவிஸ்வரூபம் படத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் பிரசாத் லேபில் பார்வையிட்டனர். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றே தீர்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் தீர்ப்பை நாளை வரை ஒத்திவைத்து நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார்.
நீதிபதி தனது உத்தரவின்போது கமல்ஹாசன் தரப்பு வக்கீல்களைப் பார்த்துக் கூறுகையில், நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொள்ள வேண்டும். கமல் ஹாசன் சுமுக முடிவுக்கு பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ள முன்வர வேண்டும். அரசுத் தரப்புடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தார்.http://www.alaikal.com

Back to Home Back to Top tntjmvl