பெண் நோயாளிடம் சில்மிஷம் - பாபா ராம்தேவ் மருத்துவமனை டாக்டர் கைது

நொய்டாவில் உள்ள பாபா ராம்தேவின் பதாஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனை டாக்டர் ஒருவர் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

நொய்டாவில் பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதாஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்ற தன்னிடம் மருத்துவர் அஷோக் பதோரியா என்பவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ஊடகத்தில் பணிபுரியும் அப்பெண் அந்த மருத்துவமனையில் இருந்து தப்பியோடி வந்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அஷோக் பதோரியாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Sangairidhvan

Back to Home Back to Top tntjmvl