அமெரிக்காவில் விசா மோசடி: இந்து மத தலைவருக்கு ஜெயில்

இந்தியாவை சேர்ந்தவர் இந்து மத தலைவர் சாகர்சென் ஹல்தார். இவர் அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாவ்கீ நகரில் இந்துக் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். கவுடியா வைஷ்ணவ சொசைட்டியின் நிறுவன தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவர் மத தொண்டுக்குரிய விசா பெற்று அமெரிக்கா சென்றார். அங்கு இருந்துகொண்டு 24 க்கும் அதிகமான இந்தியர்களுக்கு ஒவ்வொருவரிடமும் இருந்து தலா 30 ஆயிரம் டாலர் (ரூ.16 1/2 லட்சம்) வாங்கி கொண்டு, மோசடி செய்து விசா வாங்கி கொடுத்திருக்கிறார்.

எனவே ஹல்தார் மீது அமெரிக்காவில், மில்வாவ்கீ கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கருதி, 37 மாத ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

தண்டனை காலம் முடிந்ததும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.Sangairidhvan

Back to Home Back to Top tntjmvl