தடை நீக்கம் செய்யப்பட்டாலும் அதை திரையரங்குகளில் ஓடவிடமாட்டோம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை நீக்கம் செய்யப்பட்டாலும் அதை திரையரங்குகளில் ஓடவிடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அறிவித்துள்ளது.

விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திரைபடத்தை பார்த்த முஸ்லிம் அமைப்பினர் படத்தை தடை செய்ய வேண்டி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று அந்தப் படத்திற்கு தமிழக அரசு 15 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டது, மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் செய்யப் பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒருவேலை விஸ்வரூபம் தடையை மீறி படம் வெளியானால் அதை தடுக்கும் பணியில் ஈடுபடுவோம் எனவும், இஸ்லாமியர்களை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ள இந்த படத்தை பார்த்து உறுதி செய்த பிறகு தான் இந்த முடிவு எடுக்கப் பட்டதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

தகவல் : இந்நேரம்Sangairidhvan

Back to Home Back to Top tntjmvl