புதுச்சேரியிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடத் தடை

தமிழ்நாடு, இலங்கையைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்ட புதுச்சேரியிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன என்பது பல அமைப்புகளின் குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 2 வார காலத்துக்கு விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. இதேபோல் இலங்கையிலும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது,

இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், புதுச்சேரியிலும் 2 வார காலத்துக்கு திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.Sangairidhvan

Back to Home Back to Top tntjmvl