விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிக தடை விதித்தது

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படமானது இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகிறது என்று பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசு தடைவிதித்திருக்கிறது. பல்வேறு வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கையும் சேர்ந்திருக்கிறது. விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை ஆராயும் வகையில் அந்தப் படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

இதனிடையே விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிவிட்டதாக இலங்கை திரைப்பட தணிக்கைத் துறையும் கூறியுள்ளது. இருப்பினும் தற்காலிகத் தடை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

Back to Home Back to Top tntjmvl