நாடாளுமன்ற தாக்குதல் வழக்கின் குற்றவாளி அப்சல் குருவை தூக்கிலிடப்
போவதாக மத்திய அரசு அனுப்பிய கடிதம் அவர் தூக்கிலிடப்பட்ட 2 நாட்கள்
கழித்தே அவர்களின் குடும்பத்துக்கு கிடைத்திருக்கிறது.
அப்சல்குருவை ரகசியமாக தூக்கிலிட்டது நாடு முழுவதும் சர்ச்சையையும்
விவாதத்தையும் ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கு முறைப்படி
தெரிவிக்கவில்லை என்றும் தங்களுக்கே டிவியை பார்த்தே தெரியும் என்றும்
கூறியிருந்தனர். ஆனால் ஸ்பீட் போஸ்ட் மூலம் அப்சல் குருவின் மனைவிக்கு
கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாக உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங்
கூறியிருந்தார். இதை விமர்சித்திருந்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர்
அப்துல்லா, இந்தக் காலத்துலயும் ஸ்பீட் போஸ்டிலா அனுப்புவது? என்னிடம்
முன்னரே கூறியிருந்தால் அவரது குடும்பத்தினரை கடைசியாக சந்திக்க டெல்லிக்கு
அழைத்து வந்திருப்பேனே என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை அப்சல்குரு தூக்க்லிடப்படுவது தொடர்பான மத்திய
அரசின் கடிதம் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.