இந்திய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றுக்
கொண்டார். அவர் பதவியேற்று 6 மாதங்களில் 2 கருணை மனுக்களை
நிராகரித்துள்ளார். அஜ்மல் கசாப்பின் கருணை
மனுவை நவம்பர் 5ம் தேதி நிராகரித்தார். தற்போது அப்சல் குருவின் கருணை மனு
கடந்த 3ம் தேதி நிராகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்
தொடங்குவதற்கு முன்பு அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். தற்போது பட்ஜெட் கூட்டத்
தொடருக்கு முன்பு அப்சல்குரு தூக்கிலிடப்பட்டார். .