அப்சல் குருவுக்காக ஜனாஸா தொழுகை!

நீதியின் குரல்வளையை நெரித்து, காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆதாயத்துக்காக - சட்டத்துக்கு புறம்பாக படுகொலை செய்யப்பட்ட அப்சல் குருவின் அந்தஸ்து உயர இறைவனிடம் பிரார்த்தித்து ஜனாஸா தொழுகை நடைபெற்றது, 

அவருக்காக காஷ்மீர் மாநிலம் முழுவதும் பல இடங்களிலும் தொழுகை நடத்தப்பட்டது,

அப்சல் குருவுக்கு நியாயமான விசாரணைக்கான வாய்ப்பு கொடுக்காமால் - அவரது தரப்பு வாதத்தை முழுமையாக கேட்காமல் தூக்கில் போட்டது சட்ட விரோத படுகொலையாகும்,

அப்சல் குருவின் மனைவிக்கு கூட தெரிவிக்காமல் - பிரேதத்தையும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்டிருக்கிறார்,

இது காஷ்மீரிகளுக்கு நடந்த சோகமாக நினைக்காமல், இந்திய தேசத்து முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வீட்டில் நடந்த சோகமாகவே நினைக்கின்றனர்,

அநீதிக்கு ஆளாகி, தனது இன்னுயிரை நீத்த அப்சல் குரு இந்திய முஸ்லிம்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டார்,

இது சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது

Back to Home Back to Top tntjmvl