அப்சல் குருவுக்கு நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்று நாடாளுமன்றத்
தாக்குதல் வழக்கில்சிக்கி கைதாகி பின்னர் நிரபராதி என்று விடுதலை
செய்யப்பட்ட கிலானி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுடன் சேர்த்துக் கைது
செய்யப்பட்டவர் இந்த கிலானி. காஷ்மீ்ரைச் சேர்ந்தவர். இவர் அப்சல்
குருவுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து கருத்து
தெரிவிக்கையில், இது வருத்தம் தருகிறது. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில்
அப்சல் குருவுக்கு நியாயமான விசாரணைக்கான வாய்ப்பு தரப்படவில்லை. அவரது
தரப்பு வாதம் முழுமையாக கேட்கப்படவில்லை.
இப்போது நடந்திருப்பது சட்டவிரோத கொலையாகும். அப்சல் குருவின் மனைவிக்குக்
கூட தெரிவிக்காமல் அவரைத் தூக்கில் போட்டுள்ளனர் என்றார் கிலானி.