அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட இதே நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு கொடுமையான சித்தரவதைகள் அனுபவித்து பிறகு குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட டெல்லி பேராசிரியர் கீலானி, தூக்கு தண்டனையை கடுமையாக எதிர்த்துள்ளார்.
மேலும் அப்சல் குருவிற்காக அவரது மனைவிதான் கருணை மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனைவி தபாசமிற்கு இந்தத்தகவல் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் அவரது உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காதது மிகப்பெரிய மோசடி என்று பேராசிரியர் கீலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிப்ரவை 4ஆஅம் தேதியே தூக்கு உறுதி செய்யப்பட்டது என்றால் ஏன் அவரது மனிவியிடம் தெரிவ்க்கப்படவில்லை? இது மட்டுமல்ல கருணை மனு நிராகரிப்பு மீதான நீதித்துறை மறுபரிசீலனையும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் மக்புல் பட் 1984ஆம் ஆண்டு இவ்வாறுதான் அவரது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரக்சியமாஅக தூக்கிலிடப்பட்டு திகாரிலேயே புதைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அனைத்து சட்ட நடைமுறைகளும் புறந்தள்ளபப்ட்டுள்ளது. அவருக்கு தூக்க்கு தண்டனை அளித்தது முழுதும் அரசியல் தீர்மானமே. சட்டம் ஒழுங்கு என்று கூறப்படுவது ஒரு சாக்குப் போக்குதான்.
இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார் பேராசிரியர் கீலானி.