அப்பாவிகளை கைது செய்தால், ரூ,25 லட்சம் "நஷ்ட ஈடு" வழங்க முஸ்லிம் "சட்ட வாரியம்" கோரிக்கை !... !! . ,

 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் நிரபராதிகள் என நிரூபனமானால், அவர்களின் மறுவாழ்விற்கு ரூ,25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், என "ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரியம்" தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. . மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் உள்ள ஜாமிஆ அரபியா சிராஜுல் உலூமில் நடந்த ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய 23-வது வருடாந்திர பொதுக்குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. . மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக, தனது ஹிந்துத்துவ கொள்கைகளை, பள்ளி மாணவர்கள் மீது திணித்து, சூரிய நமஸ்காரம், சாப்பிடும் முன் "போஜன மந்திரங்கள்" மொழிதல், வந்தே மாதரம் பாடல் மற்றும் பகவத் கீதை வாசிப்பு உள்ளிட்ட ஹிந்துத்துவ மதசார்பு சடங்குகளை முஸ்லிம் மற்றும் கிருத்துவ மாணவர்களின் மீது திணிப்பதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. , . வக்ப் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை, உள்ளிட்ட மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன

Back to Home Back to Top tntjmvl