ஷாப்பிங் மாலை தகர்க்க வரும் தீவிரவாதி, மனைவி குழந்தைகளோடு தான் வருவாரா ? : முதல்வர் உமர் அப்துல்லாஹ் கேள்வி...........!!



டெல்லியில் உள்ள வணிக வளாகம் உள்ளிட்ட பல இடங்களை தாக்கும் நோக்குடன் வந்ததாகக் கூறி லியாகத் அலி ஷாவை டெல்லி சிறப்பு (?) போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவில் தாக்குதல் நடத்தவரும் ஒருவர், குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு தான் வருவாரா ?

வணிக வளாகத்தை தாக்க வரும் தீவிரவாதி, ஒரு கையில் மனைவியையும் மறுகையில் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டு ஏதோ சுற்றுலா செல்வது போல இந்தியாவுக்கு வந்துள்ளார் என்பதை முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

தீவிரவாதிகள் தாக்க வருகையில் ஒரு கையில் துப்பாக்கியும், மறுகையில் வெடிகுண்டும் தான் வைத்திருப்பார்கள் என்றார் உமர்.

லியாகத் ஷாவை பொய் வழக்கில் கைது செய்த டெல்லி சிறப்பு போலீசின் செயலை, ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ்.

தகவல் : மறுப்பு

Back to Home Back to Top tntjmvl