நீதியின் இரட்டை முகத்தை தோலுரித்த வட இந்திய பத்திரிக்கைள்...!

ஒரே வழக்கில் உச்ச நீதிமன்றம் இரு வேறு தீர்ப்புகளை அளித்து நடுநிலையாளர்கள் மத்தியில் நீதி துறையின் மேல் அவ நம்பிக்கையை ஏற்படுத்திய 1993 மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில், நடிகர் சஞ்சய் தத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையிலிருந்து விதிவிலக்கு அளிப்பது தொடர்பான வரையரையை சைபுனிசாவிற்கும் வழங்கி அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு ஆளுனருக்கு கடிதம் எழுத விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.

இருப்பினும் இவ்வழக்கின் முழுவிபரங்களை படித்தது பார்த்த பின்பே சைபுனிசாவிற்கு விடுதலை அளிப்பது குறித்து பரிந்துரைக்க போவதாகவும் தனது இனைய தள செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறார்.

சஞ்சய் தத்திற்கு பிரபல அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரலங்கள் வரை ஆதரவாக அவருக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஆளுனரை சந்திக்க போவதாகவும்,
இதற்கிடையில் நடிகை ஜெயபிரதா,அமர்சிங் போன்ற அரசியல் பிரமுகர்கள் ஆளுனரை சந்தித்து மன்னிப்பு வழங்குதல் குறித்து சிபாரிசு செய்து வந்த வேளையில் அதே வழக்கில் தண்டிக்கப்பட்ட சைபுனிசாவை பற்றி எவரும் கருத்தும் தெரிவித்திடாத போது
நடுநிலை தேசிய ஊடகங்கள் சைபுனிசாவிற்கு ஆதராகவும் உச்ச நீதிமன்றத்தின் இந்த பாரபட்சமான தீர்ப்பின் தன்மையையும் குறித்து நீதி துறையின் மேல் மக்களுக்கு சந்தேகம் கொள்ள வழி செய்யும் வகையில் இத் தீர்ப்பு அமைவதாக கருத்து தெரிவித்து இருந்தன.

வட இந்திய நாளேடுகளில் இப்பிரச்சனையை மிக முக்கிய விவாதமாக மாற்றி அமைத்த ஊடகங்கள்.. சஞ்சய் தத்திற்கு ஆதரவாக களமிறங்கும் பிரபலங்கள் ஏன் சைபுனிசாவை கண்டு கொள்ளவில்லை என கேள்வியும் எழுப்பியும் இருந்தன.

அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு கூட 71 வயதான விதவை சைபுனிசா விடயத்தில் மெளனம் சாதிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது என்றும் கேள்விகள் எழுப்பி இருந்தன.

நீதியின் இந்த இரட்டை முகம் பற்றி பல்வேறு கண்டனக்குரல்கள் எழுந்த வேளையில் இறுதியில் கட்ஜுவும் தன் மெளனத்தை களைத்து சைபுனிசாவிற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்து இருப்பது சஞ்சய் தத்திற்கு வழங்கப்படும் தண்டனை விதிவிலக்கு சைபுனிசாவிற்கும் கிடைக்கப்பெறும் என்ற எதிர்பார்ப்பை அளிக்கிறது.!!!

Back to Home Back to Top tntjmvl