அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை எதிர்த்து "போர்" புரிவதை தவிர வேறு வழியில்லை : பாஸ்வான்!

முஸ்லிம் இளைஞர்களை "தீவிரவாத முத்திரை" குத்தி கைது செய்யும் கொடுஞ்செயலை கண்டித்து "Terrorising to Counter Terrorism" என்ற தலைப்பில், நேற்று மாலை டெல்லியில் கருத்தரங்கு நடந்தது. இதில்,10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் பேசும்போது : முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் இந்த பிரச்சினையில், உருப்படியான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், மத்திய அரசு மவுனம் சாதித்து வருவதாக குற்றம் சாட்டினார். நாட்டின் மதசார்பற்ற இயக்கங்கள் ஓரணியில் திரண்டு "People Campaign against Politics of Terrorisom" (PCPT) அமைப்பின் மூலம், நாட்டின் பல பாகங்களிலும் குரல் கொடுக்கப்பட்டாலும், அது "செவிடன் காதில் ஊதிய சங்காக"வே உள்ளது,என்றார்,பரதன். ஜனநாயக நாடு என பெயர் வைத்துக்கொண்டு, இந்தியாவில் போலீஸ் ஆட்சி நடப்பதாகவும், போலீசும்-ராணுவமும் தங்களது தவறுகளை மறைப்பதற்காக, புதிய புதிய சட்டங்களை கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார் பரதன். பிரகாஷ் காரத் பேசும்போது: காஷ்மீர் மக்களை சூறையாடுவதற்காக, அங்கு அமல் படுத்தப்பட்டுள்ள AFSPA (Armed Fources Special Power Act) சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றார். இந்த கருப்பு சட்டத்துக்கு எதிராக "காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்" கொண்டுவரவேண்டும் என, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வை கேட்டுக்கொண்டார். ராம்விலாஸ் பாஸ்வான் பேசும்போது : முஸ்லிம்களின் பிரச்சினைக்காக நாங்கள் பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தும் எடுபடவில்லை. எனவே, வீதியில் இறங்கி உக்கிரத்துடன் "போர்" புரிவதைத்தவிர வேறு வழியில்லை,என்றார். நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் அதீப் கூறுகையில் : "குறிவைத்து" கைது செய்யப்படும் கொடுமைகளை கண்டு முஸ்லிம்கள் விரக்தி அடையத்தேவையில்லை, நாட்டின் பல தலைவர்களுடன் இணைந்து, தொடர்ந்து போராடி இதற்கு "முற்றுப்புள்ளி" வைப்போம் என்றார்,அதீப்.http://www.facebook.com/maruppu.in

Back to Home Back to Top tntjmvl