தொப்பி அணிந்தால் "டிரைவிங் லைசென்ஸ்" கிடையாது : திருவள்ளூர் RTO இன்ஸ்பெக்டரின் ஆணவம்!


திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தை சேர்ந்தவர் "முஹம்மத் சாஜித்" (25). வாகன ஓட்டுனர் உரிமத்துக்காக திருவள்ளூர் RTO அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இன்றைய தினம் "LLR" பெறுவதற்காக, RTO அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கசென்ற அவரை, தொப்பியை கழட்டும்படி அங்கிருந்த அலுவலர் கூறினார். தான் எப்போதும் தொப்பி அணியும் பழக்கமுடையவர் என்றும், வாக்காளர் அடையாள அட்டை - வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட எல்லா ஆவணங்களும் தொப்பி அணிந்த நிலையில் தான் உள்ளது எனவும் எடுத்துக்காட்டினார்,முஹம்மத் சாஜித். புகைப்படம் எடுக்கும் அலுவலர், எதையும் ஏற்றுக்கொள்ளாததால் அங்கிருந்த வாகன உரிமம் வழங்கும் ஆய்வாளரை அணுகினார்,சாஜித். அவரும், யாராக இருந்தாலும் தொப்பியை கழற்றி விட்டுத்தான் (நல்லவேலை தாடியை மழிக்க சொல்லவில்லை) போட்டோ எடுக்கவேண்டும், என்று நீண்ட லெக்சர் அடித்தாரே தவிர, சாஜிதுக்கு உதவ முன்வரவில்லை. இன்று (08/03) வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லவேண்டும் என்ற நிலையிருந்ததால், அவரால் அதிகநேரம் போராட முடியாததால், விரக்தியுடன் வீடு திரும்பிவிட்டார்.
மீண்டும் திங்கள் கிழமை அன்று RTO அலுவலகம் வரவுள்ள சாஜித்துக்கு, அவரது மத சுதந்திரத்துக்கு பாதகமில்லாமல், தொப்பி அணிந்து புகைப்படம் எடுக்க அனுமதிப்பார்களா? ....பொறுத்திருந்து பார்ப்போம் திங்கள் கிழமை வரை.

எந்த அரசியல் சட்டத்துல தொப்பி வைத்தால் DRIVING LISENCE தரக்கூடாதுனு இருக்கு..??

Back to Home Back to Top tntjmvl