பூரண உடல் நலத்துடன் இருக்கிறேன் - பீஜே அறிவிப்பு.!

புதுக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வலது தோள்பட்டையின் கீழிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டதால் உடனடியாக பேச்சை நிறுத்தும்படி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். உண்மையில் எனக்கு இரத்தக்கசிவு ஏதும் ஏற்படவில்லை.

எனது உடல்நிலையில் பாதிப்பும் ஏற்படவில்லை. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் அசுத்த இரத்தங்கள் வெளியேறுவதற்காக ஒரு சிறுதுளையிட்டு ஒரு ட்யூப் பொறுத்துவது வழக்கம். அந்த துளையிலிருந்து உள் காயம் ஆறும் வரை அவ்வப்போது இரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே கசிந்த இரத்தத்தின் வடு பஞ்சில் இருந்தது. காய்ந்த பஞ்சில் வியர்வை ஈரம் பட்டதால் உரை நிகழ்த்தும்போது வியர்வை அதிகமாகி இரத்தக்கசிவு போன்ற தோற்றத்தைத் தந்துவிட்டது. வேறு ஒன்றும் பிரச்சினை இல்லை.

தற்போது உடனடியாக மருத்துவரிடத்தில் காண்பித்தேன். மருத்துவரும் அதை உறுதி செய்து கொண்டார்.

எனது உடல் ஆரோக்கியத்திற்காக துஆ செய்யவும்....

அன்புடன் பி.ஜைனுல் ஆபிதீன்

Back to Home Back to Top tntjmvl