குஜராத்தில் மீண்டும் கலவரம் : போலீஸ் துப்பாக்கிச்சூடு !

குஜராத்தின் ஜூனாகட் மாவட்டத்தின் வேராவல் நகரில், வெள்ளிக்கிழமை (21/06) மாலையில் நிகழ்த்தப்பட்ட கலவரத்தில், குறைந்தது 20 நபர்கள் காயமடைந்தனர், 25 வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

போலீசார் தடியடி நடத்தியும் - கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், 3 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

25 நபர்களை கைது செய்துள்ள காவல்துறை, நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறுகிறது.

கடற்கரையை ஒட்டியமைந்துள்ள வேராவல் நகரின் காந்தி ரோடில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கையில், ஏற்பட்ட தகராறை முன்னிறுத்தி, கலவரக்காரர்கள் கல்லெறிந்தும் வாகனங்களுக்கு தீ வைத்தும் வெறியாட்டம் போட்டனர்.

சம்பவ இடத்துக்கு போலீஸ் செல்வதற்கு முன், நகரின் பிறப்பகுதிகளான சுபாஷ் ரோடு, சாந்தினி சவுக், அரப் சவுக், சட்டா பஜார் உள்ளிட்ட இடங்களிலும் கலவரம் பரவி விட்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபாங்கர் திரிவேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு, மேலும் கலவரம் பரவாமல் தடுக்க, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Back to Home Back to Top tntjmvl