மேட்ச் பிக்சிங் ! கேஸ் பிக்சிங் ?!

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கிய ஸ்ரீசாந்த், உள்ளிட்டவர்களுக்கு "குற்றப்பத்திரிக்கை" தாக்கல் செய்யும் முன்பே அதிரடியாக ஜாமீன் வழங்கும் நீதிமன்றம்,

நிமேஷ் கமிஷனால் அப்பாவிகள் என சான்றளிக்கப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் ஹிந்துத்துவா சக்திகளுடன் "கேஸ் பிக்சிங்" செய்துக் கொண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.


கிரிக்கெட் ஆட்டங்களில் மேட்ச் பிக்சிங் உள்ளது போல நீதிமன்றங்களில் நடக்கும் கேஸ் பிக்சிங் ஊழல் விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்டோர் கடந்த மே 16ம் தேதி டில்லி போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு "நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து "மொகோகா" எனும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

"மொகோகா" சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் வழங்கப் படுவதில்லை, என்ற எல்லா நடைமுறைகளையும் மீறி, நீதிபதி வினய் குமார் கன்னா ஜாமீன் வழங்கினார்.


கோடிக்கணக்கில் நடந்த சூதாட்ட ஊழலில் சம்மந்தப் பட்டவர்கள் ரூ.50,000 ரொக்க ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்,

மறுபுறம், கடந்த 2007ம் ஆண்டு பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட காலித் முஜாஹித், தாரிக் காசிமி உள்ளிட்ட 18 அப்பாவி முஸ்லிம்கள் குறித்து, நீதியரசர் நிமேஷ் சமர்ப்பித்த அறிக்கையை தொடர்ந்து அவர்களை விடுதலை செய்ய உத்தரப்பிரதேச அரசு முடிவெடுத்தது.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத "சங்க பரிவார வழக்கறிஞர்கள்" தொடர்ந்த பொது நல? வழக்கை காரணம் காட்டி அலகாபாத் உயர்நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுக்கே தடை விதித்து முஸ்லிம்கள் நிரந்தரமாக சிறையில் சாக வழி வகுத்தது.

காலித் முஜாஹிதைப் போல மற்ற முஸ்லிம்களும் நீதிமன்றக் காவலில் அடித்துக்கொல்லப்பட வழிவகுத்த அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில் தெளிவாக தெரிவது தான், கேஸ் பிக்சிங்.

Back to Home Back to Top tntjmvl