பஞ்சாப் மாநில போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுர்ஜித் சிங்,
போலி என்கவுண்டர் நடத்தி இதுவரை 80 பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்ட அவர், ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் தன்னை, மிரட்டும் உயர் அதிகாரிகளிடமிருந்து பாதுகாப்புக் கோரி, பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
1989-ஆம் ஆண்டு, சுர்ஜித் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தபோது, மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியான ஐ.பி.எஸ் அதிகாரி பி.எஸ்.கில்லின் உத்தரவின் பேரிலேயே, பலரை போலி என்கவுண்டரில் கொன்றதாக கூறுகிறார்.
ஒரு தனியார் சானலில் பேட்டியளித்த சுர்ஜித் சிங், தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
80க்கும் அதிகமான நபர்களை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலைச் செய்த தனக்கு திடீரென பதவி உயர்வு கிடைத்ததாக சுர்ஜித் சிங் கூறுகிறார்.
பஞ்சாபின் எல்லை மாவட்டங்களில் பல போலீஸ் நிலையங்களில், ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீஸராக சுர்ஜித் சிங் பணியாற்றியுள்ளார்.
கடுமையான உளரீதியான கவலை காரணமாக, தான் உண்மைகளை ஒப்புக்கொண்டதாக கூறும் சுர்ஜித் சிங்,
பல தடவை தற்கொலைச் செய்வது குறித்து சிந்தித்ததாகவும் தெரிவிக்கிறார்.