"மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை எப்படி நாட்டின் பிரதமராக ஏற்க முடியும்? அமர்த்தியா சென்

"மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை எப்படி நாட்டின் பிரதமராக ஏற்க முடியும்? ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவர் பிரதமராவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என உணரும் வகையில் அவர் எதையுமே செய்யவில்லை.

சிறுபான்மையினருக்கு மட்டும் என்றல்ல... நான் சிறுபான்மையில் ஒருவன் இல்லை... பெரும்பான்மை மக்களுக்கும்கூட அவர் என்ன செய்துவிட்டார்? 2002-ல் அவர் செய்தது திட்டமிட்ட வன்முறை. மோடியை அங்கீகரிப்பதன் மூலம் அந்த வன்முறைக்கு சட்ட அங்கீகாரம் தரப்போகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

இந்திய பிரதமராக விரும்பும் எந்த இந்திய குடிமகனுக்கும் இல்லாத கொடூரமான வன்முறை பின்னணி மோடிக்கு உள்ளது. அவரை மக்கள் ஏற்கக் கூடாது.

######

மோடி பிரதமர் ஆக தகுதியில்லாதவர் என்பதை மிக அருமையாக கூறியுள்ளார்... மாமேதை அமர்தியா சென்.

Back to Home Back to Top tntjmvl