பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூக மக்களுக்கு ரெட் கார்ட்!

என்ன சொல்லுவது இந்த நாட்டை?

நாடு முழுவது பொதுமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கி வரும் இந்த வேளையில், உத்தரபிரதேச மாநிலம் 'பரேலி'யில் வன்முறையாளர்கள் என்று முத்திரைக் குத்தி 1,300 முஸ்லிம்களுக்கு 'ரெட் கார்ட்' விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் வகுப்புக் கலவரத்தை தூண்ட சாத்தியமுள்ளவர்கள் என்று குற்றம் சாட்டி, 1,300க்கும் அதிகமான முஸ்லிம்களுக்கு, காவல்துறை மூலம் 'ரெட் கார்ட்' விநியோகம் செய்யப்பட்டது.

வகுப்புக் கலவரங்கள் நிகழ்த்தக் கூடிய ஹிந்துத்துவா குண்டர்களுக்கு வழங்க வேண்டிய 'ரெட் கார்டை' பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூக மக்களுக்கு வழங்கி இருக்கிறது, காவிமயமான காவல்துறை.

வன்முறையை நடத்தினால், தூண்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, சமாஜ்வாதிக் கட்சி எம்.எல்.ஏ அதாவுர்ரஹ்மான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 'ரெட்கார்ட்' அட்டைகளை போலீசிடமே திரும்ப ஒப்படைத்தனர்.

Back to Home Back to Top tntjmvl