புதுடெல்லி: 15 வயது சிறுமியை பாலியல்
பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஹிந்துச் சாமியார் ஆசாராம் பாப்பு
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோத்பூரில் பாப்புவிற்கு சொந்தமான ட்ரஸ் ஹோட்டலில் வசித்து வந்த சிறுமி இப்புகாரை அளித்துள்ளார். ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் வைத்து பாப்பு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி புகார் அளித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை மத்திய டெல்லியில் உள்ள கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமி எழுத்து மூலம் புகாரை அளித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான் பூரைச் சேர்ந்தவர் இச்சிறுமி. இம்மாதம் துவக்கத்தில் பாப்புவை சந்திக்க சிறுமியுடன் அவரது தந்தையும் சென்றுள்ளார். ஆனால், அவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை ராஜஸ்தான் மாநிலத்தில் அளித்தால் பலனில்லை என்று கருதி சிறுமியின் தந்தை டெல்லியில் அளித்துள்ளார். ஆனால், வழக்கை பதிவு செய்தாலும், இதனை ஜோத்பூருக்கு மாற்றியதாக டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாப்பு மற்றும் இதர இரண்டு பேர் மீது கொலை வழக்கு குஜராத் மாநிலத்தில் பதிவு செய்யபப்ட்டுள்ளது. குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக நிலங்களை அபகரித்த வழக்கிலும் பாப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் பாப்புவின் அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க குற்றவாளிகளை இளம் பெண், “சகோதாரா!” என்று அழைத்திருந்தால் அவர் தப்பியிருப்பார் என்று பாப்பு முட்டாள்தனமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.