சங்கராச்சாரியாரின் பாலியல் தொல்லை!

'1992 ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர் தான் சங்கராச்சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றி பேசினார். நான் தலை குனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாறிபோட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்.
அவர் என்னிடம் மிக ஆபாசமாக பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.
அப்போது ஒரு வார பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதே போல போலீசில் புகார் கொடுக்க முடியாத படி அவர்கள் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார்கள்.''- அனுராதா ரமணன்.
(அனுராதா ரமணன் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டது குறித்து நவம்பர் 29, 2004 தேதி புகார் கொடுத்தார்.)

----பரிமள ராசன்----

Back to Home Back to Top tntjmvl