ரிசானா நபீக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன் றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்டனைநிறைவேற்றப்பட்டுள்ளது.2005 ஆ ம் ஆண்டு தனது வேலைதருனர்களின் குழந்தையை கொ லை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் த வாத்மி பிரதேசத்தில் சிறை வாசம் அனுபவித்து வந்த ரி சானாவின் விடுதலைக்காக பல தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள், மனிதஉரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு கோரிக்கைகளை முன்வைத்த போதும் இன்று காலை ரிசானா நபீக்கிற்கு மர ணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை பணிப்பெண் மூதூரை சேர்ந்த ரிசானா நபீக்கை சவூதி அரசாங்கம் மரணதண்டனை செய்துள்ளது.

நீண்ட நாள் இழுபறிபட்ட விவகாரம் என்பதால் இது இலங்கை மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்த விடயமாகும்.

சவூதி அராபியா ஒரு அரபு முஸ்லிம் நாடு. ரிசானா ஒரு முஸ்லிம் இனத்தை சார்ந்த இஸ்லாமிய சகோதரி. இதே நிலைமை சவூதி நாட்டுக்கு செல்லும் ஒரு சிங்கள பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால், அந்த விவகாரமும் இந்த அளவுக்கு இழுபறிப்பட்டு இருந்தால், இந்நேரம் அதை ஒரு காரணமாக கொண்டு இந்நாட்டில் முஸ்லிம் எதிர்ப்பு இனவாத பிரச்சாரத்தை, பேரினவாதிகள் முன்னெடுத்து இருப்பார்கள் என்பதை, முஸ்லிம் மக்கள் மறந்து விடக்கூடாது.

முஸ்லிம் என்பதற்காக முஸ்லிம் நாடுகள் சலுகை காட்டும் என்றும், தமிழர் என்பதற்காக இந்தியா கருணை காட்டும் என்றும் நம்பிக்கொண்டு இருக்கும் பிற்போக்கு சிந்தனைகளை கைவிட வேண்டிய காலம் வந்துவிட்டது.

Back to Home Back to Top tntjmvl