இது தான் மதச்சார்பற்ற இந்தியாவா ? - காவி பயங்கரவாதிக்கு ஆதரவாக அரசை மிரட்டிய நீதிபதி


மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்கியா சிங்குக்கு ஜாமீன் வழங்க அரசு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அரசு அவரை உயிருடன் பார்க்க விரும்புகிறதா இல்லையா? என அரசுக்கு மிரட்டல் விடுத்த நீதிபதி ஆர்.சி.சவுஹான் வரும் 28ந்தேதிக்குள் ஒரு முடிவு தெரியவேண்டும் என்றார்.

உயிருக்கு போராடி வரும் அப்துந்நாசர் மதானி, அபூதாஹிர் போன்ற முஸ்லிம் சிறைவாசிகளின் ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்களின் போக்கை நாட்டு முஸ்லிம்கள் நன்கு அறிவர்,

இந்தித்துவா தீவிரவாதி ஜாமீன் வழக்கில் நீதிபதியே குற்றவாளிக்கு ஆதரவாக அரசை மிரட்டுகிறார்,

காவி பயங்கரவாதி பிரக்யாசிங் தாகூருக்கு கேன்சர் அறிகுறி உள்ளதாக கூறி ஜாமீன் கேட்டு மகேஷ் ஜெத்மலானி மனு தாக்கல் செய்திருந்தார், இந்த வழக்கு நேற்று (18.01.2012) மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் போலீஸ் காவலில் வைத்து அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்,

இதை ஏற்க காவி பெண் தீவிரவாதி பிரக்யாசிங் விருப்படவில்லை,

இதையடுத்து அரசு வக்கீலின் மீது கடும் கோபம் கொண்ட நீதிபதி (?) சவுஹான்... அவர் விருப்படி மருத்துவம் பார்த்து கொள்ள ஜாமீனுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் ?

ஜாமீன் கொடுத்தால் பிரக்யாசிங் தாகூர் எங்கும் ஓடி விட மாட்டார் என்றும் நீதிபதியே உத்தரவாதம் அளித்தார்,

இந்த அரசு அவரை உயிருடன் பார்க்க விரும்புகிறதா இல்லையா என்று கடுமையாக மிரட்டல் விடுத்த நீதிபதி, அவரது ஜாமீன் விஷயத்தில் வரும் 28 ந் தேதிக்குள் ஒரு முடிவு தெரியவேண்டும் என்றார்.

சபாஷ்.... சபாஷ்.... அருமை.... அருமை.....

வெட்கக்கேடு... வெட்கக்கேடு... நாட்டுக்கே இது வெட்கக்கேடு...........!!

தகவல் : மறுப்பு

Back to Home Back to Top tntjmvl