விஸ்வரூபம் பிரச்சினை: முதலமைச்சர் அறிவுரைப்படி பேசி சுமூக தீர்வு காண்போம் - ராதிகா

விஸ்வரூபம் பிரச்சினையில் இன்று ஜெயலலிதா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி, இப்படம் வெளிவந்தால் வன்முறை வெடிக்கும் என்பதாலும், தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க போதிய போலீஸ்காரர்கள் இல்லாததாலும் இப்படத்தை தடை செய்ய வேண்டியிருந்தது.

இப்படத்தை முழுமையாக தடை செய்ய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. ஆனால் தமிழக அரசு அதை செய்யவில்லை. இருதரப்பினரும் இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்திக் கொண்டால் அதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என அறிவித்தார்.

இதுகுறித்து, கமல் அலுவலகத்தில் தமிழ் சினிமாவின் பல்வேறு சங்கத்தினர் ஒன்றுகூடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதில் பங்கேற்ற ராதிகா பேசும்போது, முதலமைச்சர் ஜெயலலிதா இருதரப்பும் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்திக் கொண்டால் அதற்கு தான் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு நாங்கள் அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். கமல் தற்போது இங்கு இல்லை. மும்பை சென்றிருக்கிறார். அவருக்கு நாங்கள் தொலைபேசி வாயிலாக இந்த செய்தியை சொல்லியிருக்கிறோம். அவர் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.http://www.maalaimalar.com

Back to Home Back to Top tntjmvl