குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த
கலவரத்திற்குப் பிறகு சிறிது அமைதியாக இருக்கும் இந்தியாவை மீண்டும்
கலவரத்துக்குத் தூண்டும் விதமாக வன்முறைப் பேச்சுகளைக் கட்டவிழ்த்து விட்டு
வருகின்றனர்,
விசுவ ஹிந்து பரிசத்தின் பிரவீன் தொகாடியாவும், இன்னபிற காவி பயங்கரவாதிகளும்...
ஹைதராபாத்தை அயோத்தியாக மாற்றுவோம், முஸ்லீம்களுக்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவோம் 'இது விசுவ ஹிந்து பரிசத்தைச் சேர்ந்த பிரவீன் தொகாடியாவின் வன்முறைப் பேச்சு.
அயோத்தியில் செய்ததை இங்கும் செய்வோம் என பிரவீன் தொகாடியா அகம்பாவத்துடன் கொக்கரிப்பதற்கு, இதுவரை காவல்துறை பிரவீன் தொகாடியா விவகாரங்களில் கை கட்டி வேடிக்கை பார்த்து வருவதும் ஒரு காரணம்.
காவி பயங்கரவாதி பிரவீன் தொகாடியா ஒன்றும் இந்து சமுதாய மக்களின் ஆதரவை பெற்றவரும் அல்லர், மாறாக மத வெறியைத் தூண்டிப் பிழைப்பு நடத்தி வருபவர்.
அதேபோல் மத்திய அரசு அனுமதி அளித்தால் மூன்றே நாளில் இந்தியாவில் முஸ்லிம்களே இல்லாத தேசத்தை உருவாக்கி காட்டுவோம் என்று கூறிய பயங்கரவாதி பாபு பஜ்ரங்கி போன்றோரின் வன்முறை பெசுக்களுக்கெல்லாம் வேடிக்கை பார்த்து தான் இருந்தது காவல்துறை, (பயங்கரவாதி பாபு பஜ்ரங்கி வேறொரு வழக்கில் தான் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது)
தமிழகத்தில் ஒரு தலைவர் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசி விட்டார். எனவே அவர் தமது மாவட்ட எல்லைக்குள் நுழையக் கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் தடை உத்தரவு பிறப்பிக்கிறார்.
முஸ்லிம் மக்களுக்குப் பாடம் புகட்டுவோம் என மிரட்டும் ஒருவருக்கு எதிராக எந்த அசைவும் இல்லாமல் ஆந்திர மாநிலக் காவல்துறையும் அரசு நிர்வாகமும் வேடிக்கை பார்த்து வருகின்றன,
தொகாடியா, தாக்கரேக்கள் போன்ற தேச விரோதிகளின் வன்முறைப் பேச்சுக்கள் அரசால் இரும்புக்கரம் கொண்டு தடுக்கும் வன்முறை பேச்சுகளாகும்,
தொகாடியா, தாக்கரேக்களின் செயல்களால் விளைந்த நியூட்டனின் மூன்றாவது விதியே உவைஸியின் பேச்சு என்றாலும் ஒரு மாபாதகச் செயலுக்காக மற்றொரு மாபாதகச் செயல் செய்வோம் என மிரட்டுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
பயங்கரவாதி தாக்கரேயின் மரணத்துக்காக பந்த் தேவையா ? என்று முகநூலில் ஒரு கருத்துச் சொன்னதற்கும், அந்தக் கருத்து நியாயமானதே என்றொரு லைக் போட்டதற்கும் உடனடியாக ராக்கெட் வேகத்தில் செயல்பட்டு அவர்களைக் கைது செய்த நம் நாட்டுக் காவல்துறை (?)
சிதம்பரம் மகன் கார்த்தியின் சொத்து குறித்துக் கருத்துத் தெரிவித்தவரை அதே இரவிலேயே ஏதோ உலகம் அழிந்துவிடும் என்ற வேகத்தில் கைது செய்த நம் நாட்டுக் காவல்துறை (?) தான்
முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறைப் பேச்சுக்களையும் செயல்களையும் செய்த தொகாடியா, பால்தாக்கரே, நரேந்திர மோடி போன்ற பயங்கரவாதிகளின் பக்கம் எட்டிப் பார்க்காமல் தள்ளி நிற்கிறது.
நாட்டில் நடக்கும் பெண்கள் மீதான வன்புணர்வுகளுக்கெல்லாம் காரணம் பீகாரிகள் தாம் என்று ஒரு மாநில மக்களுக்கு எதிரான காழ்ப்புணர்வுடன் கூடிய வெறித்தனமான, கீழ்த்தரமான கருத்துக்களை வெளிப்படுத்திய எண்ணற்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள ரவுடி ராஜ் தாக்கரே மீது 18 வழக்குகளில் நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்தப்போதும், இதுவரை அந்த அரசியல் கோமாளியைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் கொண்டு நிறுத்தத் தயாராக இல்லாத
அதே காவல்துறைதான் (?)
நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும்படியான அக்பர்தீன் உவைஸியின் சிறு பிள்ளைத்தனமான பேச்சுக்கு கைது செய்துள்ளது. மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லீமின் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இருந்திருந்தால் இக்கைது நிகழ்ந்து இருக்குமா என்பது கூட சந்தேகம் தான்.
இதற்கெல்லாம் காரணம் கையாலாகாத சட்டமோ, காவல்துறையோ, அரசியலோ, அதிகாரமோ, பணமோ.. எதுவாக இருந்தாலும் இந்தியா என்ற பல்சமூக மக்கள் வாழும் ஒரு சுதந்திர நாட்டில், வன்முறையையும் கலவரத்தையும் அமைதியின்மையையும் விளைவிக்கும்படியான தொகாடியா, தாக்கரேக்கள், பாபு பஜ்ரங்கி, உவைஸி, போன்றோரின் பேச்சு /செயல்களை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இவர்களை உரிய காலத்தில் உரிய முறையில் சட்டத்தின் வழியில் அடக்கி வைக்கும்படி மத்திய மாநில அரசுகளைக் கோருகிறோம்.