”படத்தை தயாரிப்பவர்கள் சமூக அக்கரையுடன் நடந்து கொள்ள வேண்டும்” தடையை வரவேற்றுள்ள இயக்குனர் சீமான்!

விஸ்வரூபம் திரைபடத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை வரவேற்றுள்ளார் நகடிரும் இயக்குனருமான சீமான். சினிமாக்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரப்பதையே ஆண்டு ஆண்டுகளாமாக வழக்கமாக்கி வருகின்றனர். இந்த போக்கை சினிமாத் துறையினர் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சீமான் இதை தெரிவித்துள்ளார்.
படத்தை தயாரிப்பவர்கள் சமூக அக்கரையுடன் நடந்து கொள்ள வேண்டும்,துப்பாக்கி படத்திலேயே இது போன்று பிரச்சனை கிழம்பியது , பிரச்சனை வரும் என்று தெரிந்தே கமல் இதை செய்திருக்கின்றார் எனவும் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
திறைத்துறையில் உள்ள சக இயக்குனரே தமிழக அரசின் தடையை வரவேற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Back to Home Back to Top tntjmvl