
மேலும் இந்த நிறுவனம் இந்த சேவையை, தமிழ் உட்பட 7 இந்திய மொழிகளில் வழங்குகிறது. ஆங்கில மொழியறிவு இல்லாதவர்களும் கூட இதில் பங்குபெற்று பயன்பெறும் வகையில் இதனை வடிவமைத்துள்ளதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஷன் செக் என்ற இந்த ஆன்லைன் பரிசோதனைக்கு முதலில் உங்களுக்கு தேவையான மொழியினை தேர்ந்தெடுத்து, பிறகு உங்கள் பயனாளர் பெயர், இமெயில், மற்றும் பாஸ்வேர்டு இவற்றுடன் உங்கள் மொபைல் எண்ணையும் கொடுத்து பதிவுசெய்ய வேண்டும்.
அப்படி செய்த உடன் உங்கள் மொபைல் எண்ணை உறுதிப்படுத்த ஒரு குறியீட்டு எண் அனுப்பப்படும். அதை சரியாக கட்டத்தில் கொடுத்தவுடன் உங்களுக்கான 5 பக்க பரிசோதனை தொடங்கப்படும்.
இதை கண்களில் கோளாறு உள்ளவர்கள்தான் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. யாராக இருந்தாலும் உபயோகப்படுத்திப் பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
பரிசோதனை செய்ய இங்கே செல்லுங்கள் : http://www.titaneyeplus.net/ —
நன்றி : ஜசாக்கல்லாஹு ஹைரன் அலீம் ஹுசைன்/Sangairidhvan